search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புரட்டாசி வழிபாடு"

    • மாலையில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.
    • காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள்.

    புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமை தினத்திலும் விரதம் இருந்து பெருமாளை வழிபடுதல் மற்றும் விரத தினத்தில் செய்யக் கூடியது என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை பின்பற்றுவது நம் வாழ்க்கையை செம்மைப்படுத்தும்.

    பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 4 மணி முதல் 6 மணிக்குள் எழுந்து விடுங்கள். வீட்டைச் சுத்தம் செய்து கொள்ளவும். காலையில் எண்ணெய் வைக்காமல் தலைக்கு குளியுங்கள். நெற்றியில் பெருமாளுக்கு உகந்த நமம் இட்டுக் கொள்ளவும். வீட்டில் அழகிய கோலம் இடவும். மாவிலை தோரணம் கட்டவும். வெள்ளிக்கிழமைகளில் தீபம் ஏற்றி இருந்தால், அந்த விளக்கில் இருக்கும் எண்ணெய், திரியை எடுத்துவிட்டு, புதிதாக எண்ணெய்யை ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றவும்.

    காலையில் தீபம் ஏற்றி, இறைவனுக்கு ஏதேனும் ஒரு நைவேத்தியம் படையுங்கள். எளிமையாக ஒரு இனிப்பை இறைவனுக்கு படைக்க விரும்பினால், பொரிகடலை மற்றும் சர்க்கரை கலந்து சுவாமிக்கு படைக்கலாம்.

    அதன் பின்னர், உங்கள் வீட்டில் இருக்கும் சொம்பை நன்றாக சுத்தம் செய்து, காயவைத்து, அதற்கு மூன்று நாமம் இடவும். அதில் சிறிது அரிசி, ஓரிரு நாணயங்களை இடவும். அதை வைத்து பெருமாளிடம் வேண்டவும். பின்னர் அந்த சொம்பை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள நான்கு வீட்டிற்காவது சென்று "கோவிந்தா, கோவிந்தா" என ஒலி எழுப்பு அரிசியை, யாசகம் பெற வேண்டும்.

    பின்னர் வீட்டுக்கு வந்து, அந்த அரிசியால், சமைக்கவும். பருப்பு, இரண்டு காய்கறிகள் போட்டு சாம்பார், பொரியல் செய்து படைக்கலாம். அதோடு உங்களால் முடிந்தால், அதே சமயம் இனிப்பு உங்கள் வீட்டில் சாப்பிடுவீர்கள் என்றால் கூடுதலாகச் சர்க்கரைப் பொங்கல், வடை, பாயசம் செய்யலாம்.

    சமைத்த உணவுகளை ஒரு வாழை இலையில் படைக்கவும். மதியம், பெருமாளை வழிபட்டு, தீபாராதனை, தூப ஆராதனை காட்டவும். நாம் சமைத்த அனைத்து உணவுகளிலிருந்து சிறிதளவு எடுத்து ஒரு இலையில் வைத்து, காகத்திற்கு வைக்கவும்.

    நாம் சமைத்து வைத்த உணவுகளை, அருகில் குழந்தைகளை அழைத்து விருந்து படைக்கவும். அவர்கள் வாயால் "கோவிந்தா, கோவிந்தா" என்ற நாமம் சொல்ல சொல்லவும்.

    அவர்கள் கூறும் "கோவிந்தா" என்ற நாமத்தின் மூலம் பெருமாள் நம் வீட்டிற்கு வந்து அருளுவார். குழந்தைகள் வயிறார விருந்து படைத்து பின்னர், நாம் சாப்பிட வேண்டும்.

    வீட்டில் நீங்கள் விருந்து படைக்க முடியாவிட்டால், ஏதேனும் ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கலாம். அல்லது ஆதரவற்ற இல்லங்களுக்கு ஒருநாள் உணவு வழங்கலாம். மாலையில் அருகில் உள்ள ஏதேனும் ஒரு பெருமாள் கோயிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.

    • திருவிழா 24-ந்தேதி தொடங்கி, 5 வாரங்கள் சனிக்கிழமைதோறும் நடக்கிறது.
    • விழாவின் போது அதிகாலை சூரிய ஒளி மூலவர் மீது படுமாறு அமைந்துள்ளது.

    கண்ணமங்கலம் அருகே படவேடு ஜவ்வாதுமலை ராஜகம்பீரம் என்ற கோட்டை மலையில் கி.பி. 12-ம் நூற்றாண்டில் ராஜகம்பீர சம்புவராய மன்னரால் 2,160 அடி உயர மலையில் கட்டப்பட்ட வேணுகோபாலசாமி கோவிலில் புரட்டாசி மாத 47-ம் ஆண்டு உற்சவ திருவிழா வருகிற 24-ந் தேதி தொடங்கி, 5 வாரங்கள் சனிக்கிழமைதோறும் நடக்கிறது.

    இதை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் கோவில் திறக்கப்பட்டு, அபிஷேகம், ஆராதனை, பஜனைகள் நடக்கிறது. மலைப்பாதை வழியாக டிராக்டர் மூலம் பக்தர்கள் செல்கின்றனர். திறமையான மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மலையடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் வசதியும் உள்ளது. தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    மாலையில் உற்சவர் அலங்காரம் செய்து படவேடு பகுதியில் திருவீதி உலாவும் நடக்கிறது. 24-ந் தேதி சாமிக்கு சீனிவாசர் அலங்காரம், 2-வது சனிக்கிழமை அக்டோபர் 1-ந் தேதி நர்த்தன கிருஷ்ண அலங்காரம், 8-ந் தேதி வைகுண்டநாதன் அலங்காரம், 15-ந் தேதி நாச்சியார் திருக்கோல அலங்காரம், 22-ந் தேதி வெண்ணைத் தாழி அலங்காரம் செய்யப்படுகிறது.

    மேலும் விழாவின் போது அதிகாலை சூரிய ஒளி மூலவர் மீது படுமாறு அமைந்துள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை படவேடு கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • பக்தர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி அய்யாவை வணங்கி சென்றனர்.
    • பக்தர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு இனிமமாக வழங்கப்பட்டது.

    சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இந்த பதியில் ஞாயிற்றுகிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.

    இந்தநிலையில் புரட்டாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பதியில் அய்யாவழி பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை முதலே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துகுடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யாவை வணங்கி சென்றனர். இதையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து உகப்படிப்பு, வாகன பணிவிடை, நித்தப்பால் தர்மம், மதியம் உச்சிபடிப்பு, அன்ன தர்மம் நடந்தது. பக்தர்களுக்கு இனிப்பு, சந்தனம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவை இனிமமாக வழங்கப்பட்டது.

    தொடர்ந்து சாமிதோப்பு தலைமை குரு பால ஜனாதிபதி, அய்யாவழி சமயம் மற்றும் அய்யா வைகுண்டசாமியின் அற்புதங்கள் குறித்து பக்தர்களிடையே ஆன்மிக சொற்பொழிவாற்றினார். மாலையில் அய்யாவுக்கு பணிவிடை, வாகன பவனி, அன்ன தர்மம் நடைபெற்றது.

    • பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது.
    • பக்தர்கள் நீண்ட வரிசைகளில் நின்று பெருமாளை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

    திருச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது குணசீலம். இங்குள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

    பெருமாளை தரிசனம் செய்வதற்காக காலையில் இருந்தே திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.தொடர்ந்து அவர்கள் நீண்ட வரிசைகளில் நின்று பெருமாளை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகளை கோவிலின் பரம்பரை டிரஸ்டி பிச்சுமணி ஐயங்கார் தலைமையில் பணியாளர்கள் செய்து இருந்தனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    ×