search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தக"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு
    • முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய களரி அடிமுறை பாகம்-1 நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடை பெற்றது.

    கன்னியாகுமரி:

    தக்கலையில் இந்திய பாரம்பரிய கலை இலக்கிய பேரவை சார்பில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி 15 நாட்கள் நடைபெறுகிறது. இதில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய களரி அடிமுறை பாகம்-1 நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடை பெற்றது.

    விழாவுக்கு பேரவை தலைவர் சிவனி சதீஷ் தலைமை தாங்கினார். ராச கோகிலா அறக்கட்டளை தலைவர் வக்கீல் ராஜ கோபால், வேநாடு அகாடமி கவுரவ தலைவர் சுவாமி யார்மடம் கிறிஸ்துதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்த னர். அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்டு நூலை வெளியிட களரி அடிமுறை உலக கூட்டமைப்பு செயல் அதிகாரி செந்தில் ராஜகுமார் பெற்று கொண்டார். களரி அடிமுறை உலக கூட்டமைப்பு நிறுவனர் ரமேஷ் ரத்தின குமார், முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் தமிழக கலை குறித்து பேசினார். கொல்லன்விளை மது நன்றி கூறினார். நிகழ்ச்சியை சமூக ஆர்வலர் கிரிஜா மணி தொகுத்து வழங்கினார்.

    • சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகிறது.
    • இம்மாபெரும் புத்தகத் திருவிழாவில் புத்தக விற்பனை ரூ.2.60 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் புத்தகங்கள் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகிறது. இந்த விழா கடந்த நவம்பர் 20-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 11 நாள்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று புத்தகத் திருவிழா வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்புத்தகக் கண்காட்சி தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டார்கள் கலந்துகொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம் புத்தகத் திருவிழாவினை இதுவரை சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இம்மாபெரும் புத்தகத் திருவிழாவில் புத்தக விற்பனை ரூ.2.60 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் புத்தகங்கள் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    விழாவில் நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், புத்தகத் திருவிழா நடைபெறும் நாள்களில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும், பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. 

    ×