search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய பேருந்து நிலையம்"

    • குமாரபாளையம் பேருந்து நிலையம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
    • குமாரபாளையம் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவித்தார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பேருந்து நிலையம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பேருந்து நிலையத்தின் மேற்கூரை மற்றும் பேருந்து நிலைய கடைகள் மிகவும் பழுதடைந்து காணப்பட்டதை அடுத்து குமாரபாளையத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டி நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் ஆலோசனையின் பேரில், நகர மன்ற தலைவர் விஜய்கண்ணன், தமிழக அரசுக்கு நகராட்சி சார்பில் விரிவான திட்ட அறிக்கை மற்றும் புதிதாக அமைய உள்ள பேருந்து நிலையத்தின் மாதிரி வரைபடத்தையும் தயார் செய்து அனுப்பி வைத்தார்.

    புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசிடம் நகர் மன்ற தலைவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டதன் பேரில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கையில் குமாரபாளையம் நகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் சுமார் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவித்தார்.

    குமாரபாளையத்திற்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

    • மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காத ஆளுநரை விடுவிக்க வேண்டும்.
    • மொத்தம் 114 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை நகர்மன்ற சாதாரண கூட்டம் அதன் தலைவர் மு. மத்தீன் தலைமையில் நடந்தது. இதில் ஆணையர் சத்தியநாதன் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர். கூட்ட துவக்கத்தில் துணைத்தலைவர் கலைராஜன் திருக்குறளை வாசித்தார். நகராட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் ரஞ்சித் தீர்மானங்களை வாசித்தார். இதைத்தொடர்ந்து உடுமலை பொள்ளாச்சி சாலை சந்திப்பில் இருந்து திருப்பூர் வரை விரைவுச்சாலையாக மாற்றியமைக்க வலியுறுத்தி நகர்மன்ற தலைவர் மத்தீன் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

    மேலும் உடுமலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க வேண்டும் .தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காத ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை மூத்த கவுன்சிலரும் நகர தி.மு.க. செயலாளருமான வேலுச்சாமி கொண்டு வந்தார். மொத்தம் 114 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டதில் ஒரு தீர்மானம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு மற்றவை நிறைவேற்றப்பட்டன.

    ×