search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீர் பாட்டில் குத்து"

    • நடனம் ஆடும்போது ஒருவரை ஒருவர் முட்டியதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் அருகே உள்ள சின்ன தெள்ளூர் கிராமத்தில் நேற்று கெங்கை அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. நேற்று இரவு சாமி ஊர்வலம் சென்றது.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 35) ஊர்வலத்தில் நடனம் ஆடினார்.

    அப்போது 5 பேர் கொண்ட கும்பல் நடனம் ஆடினர். இதல் நடனம் ஆடும்போது ஒருவரை ஒருவர் முட்டி உள்ளனர். இதனால் அருண்குமாருக்கும் கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது.

    இதில் ஆத்திரமடைந்த 5 பேர் கொண்ட கும்பல் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து அருண்குமாரின் கழுத்தில் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அருண்குமாரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமாரை பீர் பாட்டிலால் குத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவும், சமையல்காரராகவும் வேலை பார்த்து வருகிறார்.
    • ஆறுமுகம் பீர் பாட்டிலை உடைத்து முருகானந்தத்தின் மார்பில் குத்தினார்.

    கோவை,

    கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 31). இவர் நஞ்சுண்டாபுரத்தில் தங்கி இருந்த அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவும், சமையல் காரராகவும் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (33) என்பவருக்கு ரூ. 8 ஆயிரம் கடன் கொடுத்தார். ஆனால் ஆறுமுகம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். சம்பவத்தன்று முருகானந்தம் பணத்தை திருப்பி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடைேய வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் பீர் பாட்டிலை உடைத்து முருகானந்தத்தின் மார்பில் குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முருகானந்தத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடனை திருப்பி கேட்ட சமையல்காரரை பீர் பாட்டிலால் குத்திய ஆறுமுகத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • நண்பர்களுடன் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு அருகில் இருந்த பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
    • இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காரமடை:

    கோவை மாவட்டம் காரமடை தோலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவர் தனது நண்பர்களுடன் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு அருகில் இருந்த பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பத்ரசாமி என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமார் தலையில் ஓங்கி அடித்தார். இதை கண்டு அதிர்ச்சி அங்கிருந்தவர்கள் 2 பேரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.

    பின்னர் இருவரும் சாலையில் வந்து தகராறு ஈடுபட்டனர். அப்போது பத்ரசாமி மீண்டும் கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமாரை தகாத வார்த்தைகள் திட்டி தாக்க முயற்சி செய்தார்.

    இதில் மகேஷ்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரது நண்பர்கள் அவரை மீட்டு தாயனூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×