காரமடையில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து

நண்பர்களுடன் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு அருகில் இருந்த பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரமடையில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து
Published on

காரமடை:

கோவை மாவட்டம் காரமடை தோலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவர் தனது நண்பர்களுடன் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு அருகில் இருந்த பாரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த பத்ரசாமி என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமார் தலையில் ஓங்கி அடித்தார். இதை கண்டு அதிர்ச்சி அங்கிருந்தவர்கள் 2 பேரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.

பின்னர் இருவரும் சாலையில் வந்து தகராறு ஈடுபட்டனர். அப்போது பத்ரசாமி மீண்டும் கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து மகேஷ் குமாரை தகாத வார்த்தைகள் திட்டி தாக்க முயற்சி செய்தார்.

இதில் மகேஷ்குமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவரது நண்பர்கள் அவரை மீட்டு தாயனூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com