search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் தடை"

    • நீதிபதிகள் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கான கொள்கையை சமர்ப்பிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நாளை வரை அவகாசம் வழங்கினர்.
    • பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது தொடர்பாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை உத்தரவை அமல்படுத்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கான கொள்கையை சமர்ப்பிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நாளை (வியாழக்கிழமை) வரை அவகாசம் வழங்கினர். பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது தொடர்பாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களின் பயன்பாட்டை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) தள்ளிவைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும்.
    • தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஒருமுறை பயன்பாட்டிற்கு பிறகு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான உணவுப் பொருட்களை கட்ட உபயோபடுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மக்கோல் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்குப் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக் கெட்கள், பிளாஸ்டிக்காலான உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் கொடிகள், உற்பத்தி, சேமித்தல், விநியோகம், எடுத்து செல்லுதல், விற்பனை அல்லது விநியோகம் செய்ய 1.1.2019 முதல் தடை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

    இதன்படி, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்தல், இருப்பு வைத்தல், விநியோகம் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துவோர் மீது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.gov.in) தெரிந்து கொள்ளலாம்.

    ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. அதனை 1800 425 6750 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இக்கட்டுப்பாட்டு அறை அனைத்து அலுவலக நாட்களிலும் வரும் 31.7.2022 வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தடை தொடர்பான பல்வேறு பங்குதாரர்களால் கோரப்படும் உதவி, வழிகாட்டுதல், தெளிவுபடுத்தல் மற்றும் தகவல்களை இக்கட்டுப்பாட்டு அறை வழங்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
    • முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பேரூராட்சி சார்பில் உதவி இயக்குனர் கண்ணன் விழிப்புணர்வு மற்றும் அறிவுரை வழங்கினார்.

    பொன்னேரி:

    கொரோனா பரவலை தடுப்பதற்காக மீஞ்சூர் பேரூராட்சி பஜார் வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பேரூராட்சி சார்பில் உதவி இயக்குனர் கண்ணன் விழிப்புணர்வு மற்றும் அறிவுரை வழங்கினார்.

    மேலும் நேற்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்துள்ள நிலையில் கடைகளில் பயன்படுத்திய 197 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து ரூ. 12 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    இதை மீறி பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். அதைத்தொடர்ந்து டி.எச் சாலையில் முக கவசம் அணிய வேண்டும் என ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் ஒலி பெருக்கிகள் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    அவருடன் மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு, பேரூராட்சி அலுவலர்கள் பலர் உடன் சென்றனர்.

    • 12 கடைக்காரர்களுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு 6 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.
    • 200 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் நெகிழி பைகள் சேகரிப்பது மற்றும் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிகை பறிமுதல் செய்யப்பட வேண்டும். என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின் படி மாடம்பாக்கம் ஊராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் உள்ள பகுதிகளில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்தார். அப்போது 200 கிலோ தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கும்படி ஊராட்சி செயலாளருக்கு ஊராட்சி மன்ற தலைவர் உத்தரவிட்டார். இதனையடுத்து 12 கடைக்காரர்களுக்கு ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு 6 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதற்கான ரசீதை கடை உரிமையாளரிடம் ஊராட்சி செயலாளர் மொய்தீன் வழங்கினார்.

    • தமிழ்நாட்டில் ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள் அமலில் இருக்கிறது.
    • சிறு சிறு கடைகளிலும் பிளாஸ்டிக் பைகளை ரகசியமாக வைத்து பயன்படுத்தப்படுவதை கண்காணித்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்குகளை உற்பத்தி செய்வது, விநியோகம் செய்வது, இருப்பு வைப்பது, பயன்படுத்துவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடை உத்தரவை மீறுபவர்களின் மீது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதி 15-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதன்படி ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கவும், 5 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கவும் முடியும்.

    ஏற்கனவே பிளாஸ்டிக் தடை கொண்டு வரப்படுவது பற்றி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமே பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் அனைவருக்கும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் முன்னறிவிப்பு கொடுத்திருந்த நிலையில் இன்று தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது.

    அனைத்து மாநிலங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க சிறப்பு கட்டுப்பாட்டு குழுக்கள் அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள் அமலில் இருக்கிறது. இதன்படி மாவட்ட கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், நகராட்சி கமிஷனர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    அவ்வப்போது சோதனைகள் நடத்தி பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    பெரிய வர்த்தக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்த்து விட்டனர். மறு சுழற்சி செய்யும் வகையில் துணி மற்றும் காகித கூழ் பைகளை பயன்படுத்த தொடங்கி விட்டன.

    சிறு சிறு கடைகளிலும் பிளாஸ்டிக் பைகளை ரகசியமாக வைத்து பயன்படுத்தப்படுவதை கண்காணித்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சுற்றுச்சூழல் துறை மூலம் நடவடிக்கையை தீவிரப்படுத்த அமைச்சர் மெய்யநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    • கடை மற்றும் வீடுகளில் பதுக்கினர்.
    • 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    வந்தவாசி:

    வந்தவாசி பகுதியில் கடை மற்றும் வீட்டிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் நகராட்சி ஆணையாளர் முஸ்தபா தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் கடை மற்றும் வீடுகளில் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தனர்.

    இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும் கடை மற்றும் வீட்டின் உரிமையாளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

    அனைத்து பல்கலைக்கழக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது என பல்கலைக்கழக மானியக்குழு தடை விதித்துள்ளது. #UGC #plasticban
    புதுடெல்லி:

    அனைத்து பல்கலைக்கழக வளாகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்ட அறிக்கையில், 'டீ கப், பிளாஸ்டிக் கவரால் பேக் செய்யப்பட்ட மதிய உணவு, பிளேட்ஸ், பிளாஸ்டிக் ஸ்டாராஸ் போன்ற பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என அறிவித்துள்ளது.



    இந்த அறிவிப்பு மத்திய சுற்றுச்சூழல் துறை அளித்த கோரிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலக சூற்றுச்சூழல் தினத்தை இந்தியா நடத்த இருக்கிறது. அதன் முக்கிய நோக்கம் பிளாஸ்டிக் மாசுபாட்டை அழிப்பதாகும். அதனால் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. #UGC #plasticban
    ×