search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயனாளிகள் தேர்வு"

    • அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • பங்களிப்புத் தொகையில் வரவு வைக்கப்பட்டு மீதி தொகையை குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும் பொழுது பயனாளிகள் செலுத்த வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மதுரைக் கோட்டத்தின் மூலம் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் சிவகங்கை மாவட்ட த்தில், சிவகங்கை தாலுகா, பையூர்பிள்ளை வயல் திட்டப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 608 அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இந்த திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்தொகை போக மீதமுள்ள பங்குத்தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். மேலும் "அனைவருக்கும் வீடு" திட்ட விதிகளின்படி, நிபந்தனை களுக்கு உட்பட்டு மேற்கண்ட திட்டப்பகு திகளில் கட்டப்படுகின்ற அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படுவோர் இந்தியாவில் எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை. எனது மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்கு மிகாமல் உள்ளது எனவும் சான்றளிக்க வேண்டும்.

    பயனாளிகள் குடும்பத்தலைவர் மற்றும் குடும்பத்தலைவி ஆகிய இருவருடைய ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பையூர்பிள்ளைவயல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதி, சிவகங்கை என்ற முகவரியில் வருகிற 11, 12-ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் பயனாளிகள் ரூ.5 ஆயிரம் மதிப்பிற்கான கேட்பு காசோலையை The Executive Engineer TNUu DB PIU - I Sivaganga என்ற பெயரில் எடுத்து பயனாளியின் ஆதார் நகல் (கணவன் மற்றும் மனைவி), வண்ணப்புகைப்படம் - 2, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை மனுவுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த தொகையானது பயனாளியின் பங்களிப்புத் தொகையில் வரவு வைக்கப்பட்டு மீதி தொகையை குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும் பொழுது பயனாளிகள் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீடுகள் ஒதுக்கீடு பெற புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    • இதற்கான விண்ணப்ப–ங்களை அலுவலக நேரத்தில் வருகிற 5-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கீழ்கண்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சமத்துவபுரங்களில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறை அரசாணைப்படி தகுதியற்ற பயனாளிகளுக்குப் பதிலாக புதிய பயனாளிகளை தேர்ந்து எடுப்பதற்கு ஏதுவாக ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இனங்களின் அடிப்படையில் பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    அதன் விவரம் பின்வருமாறு:- சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், முள்ளிச்செவல் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் ஆதிதிராவிடர் பிரிவில் 3 வீடுகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவில் 5 வீடுகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 1 வீடு என மொத்தம் 9 வீடுகள்.

    விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், செங்கோட்டை ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் பிற்படுத்த–ப்பட்ட வகுப்பு பிரிவில் 1 வீடு மற்றும் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் ஆதிதி–ராவிடர் பிரிவில் 5 வீடுகள், இதர பிரிவில் 19 வீடுகள், என மொத்தம் 24 வீடுகள்.

    விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர் மற்றும் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் 34 வீடுகளுக்கு தகுதியான பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது.

    மேற்கண்ட சமத்துவபுர வீடுகள் தொடர்பான விவரங்களை சம்பந்த–ப்பட்ட ஊராட்சி ஒன்றி–யத்தினை அணுகி பெற்றுக்கொள்ளலாம். இதற்கான விண்ணப்ப–ங்களை அலுவலக நேரத்தில் வருகிற 5-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க பயனாளிகளை தேர்வு செய்திட அடுத்த மாதம் 4-ந்தேதி அன்று காலை 10.30 மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.
    • நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு, தேனி கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில், 18 வயது முதல் 60 வயது வரையுள்ள காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் கால் பாதிக்கப்பட்டோர், 40சதவீத மிதமான மனவளர்ச்சி குன்றியோர் 75 சதவீதத்துக்கும் மேல் பாதிப்புள்ள கடுமையான மனவளர்ச்சி குன்றியோர், தாய்மார்கள் ஆகியோருக்கு இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகளை தேர்வு செய்திட அடுத்த மாதம் 4-ந்தேதி அன்று காலை 10.30 மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.

    மேற்காணும் திட்டத்தில் பயனடைய புதிதாக விண்ணப்பிப்பவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் (மனவளர்ச்சி குன்றியோர் திட்டத்தில் மாற்றுத்திறனாளியின் தாயின் ஆதார் மற்றும் புகைப்படம்), தையல் பயிற்சி பெற்ற சான்று அசல் மற்றும் நகல், புகைப்படம் 2, தையல் தைப்பதற்கு ½ மீட்டர் அளவில் உள்ள காடா துணி, கத்தரிகோல், பாபின், நூல்கண்டு ஆகியவற்றுடன் தேனி கலெக்டர் அலுவலக வளாகம், பின்புறம் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 27-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இத்விதேர்விற்கு ஏற்கனவே சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அல்லது பிற துறைகள் மூலமாக தையல் இயந்திரம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை. எனவே தகுதியான மாற்றுத்திறனாளிகள் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு, தேனி கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் நாளை திறப்பு.
    • 2600 பேர் பயனடைய உள்ளனர்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பதற்கு நாளை வருகை தரும் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

    இதில் காவேரிப்பாக்கம் மற்றும் நெமிலி ஒன்றியத்தில் 2600 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மு.க.ஸ்டாலினிடம் நலத்திட்ட உதவிகளை பெறுவார்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, தையல் எந்திரம் வழங்குதல், முதியோர் உதவித்தொகை, மகளிர் சுய உதவி குழு கடன் வழங்குதல், தையல் மெஷின், ஊனமுற்றோர் உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை வழங்க உள்ளார்.

    இதற்காக 2600 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் நாளை முதல் அமைச்சர் நேரில் சந்தித்து பயனடைய உள்ளனர். ஏற்பாடுகளை காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகம் இணைந்து நிகழ்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

    ×