search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைவருக்கும் வீடு திட்டம்"

    • அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • பங்களிப்புத் தொகையில் வரவு வைக்கப்பட்டு மீதி தொகையை குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும் பொழுது பயனாளிகள் செலுத்த வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மதுரைக் கோட்டத்தின் மூலம் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் சிவகங்கை மாவட்ட த்தில், சிவகங்கை தாலுகா, பையூர்பிள்ளை வயல் திட்டப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 608 அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இந்த திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்தொகை போக மீதமுள்ள பங்குத்தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். மேலும் "அனைவருக்கும் வீடு" திட்ட விதிகளின்படி, நிபந்தனை களுக்கு உட்பட்டு மேற்கண்ட திட்டப்பகு திகளில் கட்டப்படுகின்ற அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படுவோர் இந்தியாவில் எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை. எனது மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்கு மிகாமல் உள்ளது எனவும் சான்றளிக்க வேண்டும்.

    பயனாளிகள் குடும்பத்தலைவர் மற்றும் குடும்பத்தலைவி ஆகிய இருவருடைய ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பையூர்பிள்ளைவயல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதி, சிவகங்கை என்ற முகவரியில் வருகிற 11, 12-ந் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் பயனாளிகள் ரூ.5 ஆயிரம் மதிப்பிற்கான கேட்பு காசோலையை The Executive Engineer TNUu DB PIU - I Sivaganga என்ற பெயரில் எடுத்து பயனாளியின் ஆதார் நகல் (கணவன் மற்றும் மனைவி), வண்ணப்புகைப்படம் - 2, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை மனுவுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த தொகையானது பயனாளியின் பங்களிப்புத் தொகையில் வரவு வைக்கப்பட்டு மீதி தொகையை குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும் பொழுது பயனாளிகள் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமுதபெருவிழாவை முன்னிட்டு, சிறப்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • சிறப்பு புகைப்பட கண்காட்சி நடந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், 75வது சுதந்திர திருநாள் அமுதபெருவிழாவை முன்னிட்டு, சிறப்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தியாகிகள் வரலாற்றை நினைவு கூர்ந்து, தேச ஒற்றுமையை நினைவூட்டும் வகையில், சிறப்பு புகைப்பட கண்காட்சி நடந்தது. கலெக்டர் வினீத் கண்காட்சியை துவக்கி வைத்து, 75வது சுதந்திர தினவிழாவின் சிறப்புகளை பேசினார்.

    பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு தேசிய கொடி வழங்கப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம், அனைவருக்கும் வீடு திட்டம் சார்பில் கனரா வங்கி மூலமாக சிறப்பு கடன் முகாம் நடந்தது. கனரா வங்கி மண்டல துணை பொது மேலாளர் சந்தோஷ், உதவி பொது மேலாளர் கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்ஸாண்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • 5687 வீடுகள் கொண்ட 19 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
    • ரூ.121.86 கோடி மதிப்பில் 7 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

    கோவை :

    கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.121.86 கோடி மதிப்பில் 1441 வீடுகள் கொண்ட 7 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

    ரூ.494.29 கோடி மதிப்பில் 5687 வீடுகள் கொண்ட 19 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் உக்கடம் மற்றும் செல்வபுரம் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சி.எம்.சி காலனியில் ரூ.49.4கோடி மதிப்பில் 520 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், தெற்கு பேரூர் பகுதியில் ரூ.9.40கோடி மதிப்பில் 112 குடியிருப்புகள், வடக்கு பேரூர் பகுதியில் ரூ.25.70கோடி மதிப்பில் 288 குடியிருப்புகள், எழில் நகரில் ரூ.25.87 கோடி மதிப்பில் 288 குடியிருப்புகள், உக்கடம் குளம் பகுதியில் ரூ.67.26 கோடி மதிப்பில் 708 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சூலூர் செங்கத்துறை பகுதியில் ரூ.4188 கோடி மதிப்பீட்டில் 528 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியின் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

    ×