search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 1441 வீடுகள் கொண்ட 7 அடுக்குமாடி குடியிருப்புகள் தயார்
    X

    அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 1441 வீடுகள் கொண்ட 7 அடுக்குமாடி குடியிருப்புகள் தயார்

    • 5687 வீடுகள் கொண்ட 19 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
    • ரூ.121.86 கோடி மதிப்பில் 7 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

    கோவை :

    கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் ரூ.121.86 கோடி மதிப்பில் 1441 வீடுகள் கொண்ட 7 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

    ரூ.494.29 கோடி மதிப்பில் 5687 வீடுகள் கொண்ட 19 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் உக்கடம் மற்றும் செல்வபுரம் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சி.எம்.சி காலனியில் ரூ.49.4கோடி மதிப்பில் 520 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள், தெற்கு பேரூர் பகுதியில் ரூ.9.40கோடி மதிப்பில் 112 குடியிருப்புகள், வடக்கு பேரூர் பகுதியில் ரூ.25.70கோடி மதிப்பில் 288 குடியிருப்புகள், எழில் நகரில் ரூ.25.87 கோடி மதிப்பில் 288 குடியிருப்புகள், உக்கடம் குளம் பகுதியில் ரூ.67.26 கோடி மதிப்பில் 708 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சூலூர் செங்கத்துறை பகுதியில் ரூ.4188 கோடி மதிப்பீட்டில் 528 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியின் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து வீடுகளை பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×