என் மலர்
நீங்கள் தேடியது "Special loan camp"
- அமுதபெருவிழாவை முன்னிட்டு, சிறப்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
- சிறப்பு புகைப்பட கண்காட்சி நடந்தது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், 75வது சுதந்திர திருநாள் அமுதபெருவிழாவை முன்னிட்டு, சிறப்பு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தியாகிகள் வரலாற்றை நினைவு கூர்ந்து, தேச ஒற்றுமையை நினைவூட்டும் வகையில், சிறப்பு புகைப்பட கண்காட்சி நடந்தது. கலெக்டர் வினீத் கண்காட்சியை துவக்கி வைத்து, 75வது சுதந்திர தினவிழாவின் சிறப்புகளை பேசினார்.
பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு தேசிய கொடி வழங்கப்பட்டது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம், அனைவருக்கும் வீடு திட்டம் சார்பில் கனரா வங்கி மூலமாக சிறப்பு கடன் முகாம் நடந்தது. கனரா வங்கி மண்டல துணை பொது மேலாளர் சந்தோஷ், உதவி பொது மேலாளர் கண்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்ஸாண்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.






