search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "differently abled people"

    • மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு 10 கிலோ அரிசி பை மற்றும் ஊக்கத் தொகை ஆகியவற்றை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
    • தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினார்கள்.

    தூத்துக்குடி:

    மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் -அமைச்சருமான கருணாநிதியின் 100-வது பிறந்தாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு 10 கிலோ அரிசி பை மற்றும் ஊக்கத் தொகை ஆகியவற்றை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.

    தொடர்ந்து, மாற்றத்தி றனாளிகள் பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களை வழங்கி னார்கள். அதைப் பெற்றுக்கொண்டு ஒவ்வொருவரிடமும் தங்க ளுடைய குறைகளையும், குடும்பநலன்களையும் கேட்டறிந்தார். அனைத்தையும் முழுமை யாக நிறைவேற்றி தருவேன் என்று அமைச்சர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி செந்தில் குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கணவாய்பட்டி ஊராட்சியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் பசுமை வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • விடுபட்ட மாற்றுத்திறனாளி களுக்கும் அரசு வழங்கும் பசுமை வீடுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வத்தலகுண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கணவாய்பட்டி ஊராட்சி தங்கமலை முருகன் கோவில் அடிவாரத்தில் கிராமங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் பசுமை வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    வத்தலகுண்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கும் அடிப்படையில் கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் பஞ்சாயத்துக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத்தில் ஒரு பயனாளிக்கு 3 சென்ட் வீதம் 4 பேருக்கு 12 சென்ட் இடம் வழங்கி பள்ளிவாசல் தெரு அபுதாஹிர், சிக்கந்தர் அம்மாள் ஆகிய இருவருக்கு பசுமை வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

    மேலும் பழைய வத்தலக்குண்டு வடக்கு தெருவை தெருவை சேர்ந்த முத்துஇருளன், எம்.வாடிப்பட்டியைச் சேர்ந்த ஆதரவற்ற விதவை மேனகா ஆகிய 2 பேருக்கு இடம் ஒதுக்கியும் வீடு வழங்கப்படவில்லை. மாவட்ட ஊராட்சி திட்ட இயக்குனர் தினேஷ் குமார் மாவட்டம் முழுவதும் அரசு தரப்பில் வழங்கும் பணிகளை தொய்வின்றி முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்.

    எனவே இதேபோல் விடுபட்ட மாற்றுத்திறனாளி களுக்கும் அரசு வழங்கும் பசுமை வீடுகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க பயனாளிகளை தேர்வு செய்திட அடுத்த மாதம் 4-ந்தேதி அன்று காலை 10.30 மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.
    • நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு, தேனி கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில், 18 வயது முதல் 60 வயது வரையுள்ள காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் கால் பாதிக்கப்பட்டோர், 40சதவீத மிதமான மனவளர்ச்சி குன்றியோர் 75 சதவீதத்துக்கும் மேல் பாதிப்புள்ள கடுமையான மனவளர்ச்சி குன்றியோர், தாய்மார்கள் ஆகியோருக்கு இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகளை தேர்வு செய்திட அடுத்த மாதம் 4-ந்தேதி அன்று காலை 10.30 மணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.

    மேற்காணும் திட்டத்தில் பயனடைய புதிதாக விண்ணப்பிப்பவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் (மனவளர்ச்சி குன்றியோர் திட்டத்தில் மாற்றுத்திறனாளியின் தாயின் ஆதார் மற்றும் புகைப்படம்), தையல் பயிற்சி பெற்ற சான்று அசல் மற்றும் நகல், புகைப்படம் 2, தையல் தைப்பதற்கு ½ மீட்டர் அளவில் உள்ள காடா துணி, கத்தரிகோல், பாபின், நூல்கண்டு ஆகியவற்றுடன் தேனி கலெக்டர் அலுவலக வளாகம், பின்புறம் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 27-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    இத்விதேர்விற்கு ஏற்கனவே சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அல்லது பிற துறைகள் மூலமாக தையல் இயந்திரம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியில்லை. எனவே தகுதியான மாற்றுத்திறனாளிகள் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு, தேனி கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    • தருமபுரி சம்பவத்தை கண்டித்து அய்யலூர், செம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் கோஷம் எழுப்பி மறியல் போராட்டம்
    • இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.

    செம்பட்டி:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் தலைமையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தச் சென்றனர்.

    அப்போது, போராட்டத்திற்கு சென்ற மாற்றுத்திறனாளிகளை குண்டுகட்டாக தூக்கி போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதனை கண்டித்து, செம்பட்டி பஸ் நிலையம் அருகே, ஆத்தூர் ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஒன்றிய செயலாளர் மலைச்சாமி தலைமையில், சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தர்மபுரியில் குண்டுகட்டாக தூக்கி, மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, போலீசாரை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். அவர்களிடம் செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அய்யலூரில் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தினால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வடமதுரை இன்ஸ்பெக்டர் நாகசாந்தி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு பெறுவது குறித்த குழு கூட்டம் நடைபெற்றது
    • இதில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் பல்வேறு அறிவுரைகளை அலுவலர்களுக்கு வழங்கினார்

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளு க்கான சமவாய்ப்பு மற்றும் சமஉரிமை, செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகள், தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகளுடன் மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனா–ளிகளு க்கான மருத்துவச்சான்றிதழ், தனித்துவமான அடையான அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், சுய தொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை, காதுகேளாத மனவளர்ச்சி குன்றிய 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அடிப்படை பயிற்சி, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து வழங்கப்பட்ட விபரங்கள், வழங்கப்பட வேண்டிய விபரங்கள் குறித்தும் ஆரம்ப கால பயிற்சி மையம் மற்றும் பரிசோதனை மையம், சிறப்பு பள்ளிகள், பகல் நேரக் காப்பகங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பபாடுகள், சமூக பாதுகாப்புத்திட்டம், பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவைகள் குறித்தும் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், மாற்றுத்திற னாளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு அளித்தி டவும், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்கிடவும், அனைத்து துறைகளிலும் மாற்று த்திறனாளிகளுக்கு அரசு திட்டங்களில் முன்னு ரிமை வழங்கிடவும் நடவடிக்கை கள் மேற்கொள்ள துறை அலுவல ர்கள், தொழி ற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில், காதுகேளாத மற்றும் வாய்பேசாத மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக செய்கை மொழி பெயர்ப்பாளர் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில 6 நபர்களுக்கு பாதுகாவலர் நியமனச் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் விற்பனை நிலையத்தினை கலெக்டர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

    • தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது
    • முகாமிற்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்

    தேனி :

    தேனி மாவட்டம், கம்பம் வட்டாரத்திற்குட்பட்ட குள்ளப்பக்கவுண்டன்பட்டி ஊராட்சியில் மாற்றுத்தி–றனாளி களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முகாமிற்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், டாக்டர்கள், அரசுத்துறை அலுவலர்களின் எண்ணிக்கை, முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்த–தாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், சுய வேலை வாய்ப்பினை உருவாக்கிட கணினி, கைபேசி போன்ற எண்ணற்ற பயிற்சிகள், கல்வி பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை, நான்கில் மூன்று பங்கு கட்டணமில்லாமல் பஸ் பயண வசதி மற்றும் சக்கர நாற்காலிகள், மின்கல சக்கர நாற்காலிகள், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம், நவீன செயற்கை கை மற்றும் கால், நவீன காதொலி கருவி, முடம் நீக்கும் சாதனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் உபகரணங்கள், சான்றிதழ்கள் பெறுவதற்கு அவர்களுக்கு இருப்பிடங்க–ளுக்கு அருகிலேயே மாற்று த்திறனாளிகள் நலத்து றையின் மூலம் அனைத்துறை அரசுத்துறைகளையும் ஒருங்கிணைத்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் குள்ளப்பக்கவுண்டன்பட்டி ஊராட்சியில் அனைத்து அரசுத்துறைகளையும் ஒரு ங்கிணைத்து மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான தேசிய அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் காப்பீட்டு அட்டை, ஆதார் அட்டை ெரயில் பயண அட்டை, உதவி உபகரணங்கள், இலவச வீட்டுமனைபட்டா, இலவச வீடு, வேலைவாய்ப்பு மற்றும் வங்கி கடன் வேண்டி மனுக்கள் அளித்துள்ளனர். பெற–ப்பட்டுள்ள மனுக்கள் மீது தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடியாக பயன்கள் வழங்கிட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், வருகின்ற 7-ந் தேதி அன்று தேனி வட்டாரத்திற்குட்பட்ட அரண்மனைப்புதூர் ஊராட்சியில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், பூமலைக்குண்டு ஊராட்சியில் மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடை பெறவுள்ளது. மாற்று த்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வே ண்டும் என தெரிவித்தார்.

    ×