search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்


    தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்

    • தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது
    • முகாமிற்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்

    தேனி :

    தேனி மாவட்டம், கம்பம் வட்டாரத்திற்குட்பட்ட குள்ளப்பக்கவுண்டன்பட்டி ஊராட்சியில் மாற்றுத்தி–றனாளி களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமினை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முகாமிற்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், டாக்டர்கள், அரசுத்துறை அலுவலர்களின் எண்ணிக்கை, முகாமில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்த–தாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், சுய வேலை வாய்ப்பினை உருவாக்கிட கணினி, கைபேசி போன்ற எண்ணற்ற பயிற்சிகள், கல்வி பயின்று வரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை, நான்கில் மூன்று பங்கு கட்டணமில்லாமல் பஸ் பயண வசதி மற்றும் சக்கர நாற்காலிகள், மின்கல சக்கர நாற்காலிகள், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம், நவீன செயற்கை கை மற்றும் கால், நவீன காதொலி கருவி, முடம் நீக்கும் சாதனம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் உபகரணங்கள், சான்றிதழ்கள் பெறுவதற்கு அவர்களுக்கு இருப்பிடங்க–ளுக்கு அருகிலேயே மாற்று த்திறனாளிகள் நலத்து றையின் மூலம் அனைத்துறை அரசுத்துறைகளையும் ஒருங்கிணைத்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் குள்ளப்பக்கவுண்டன்பட்டி ஊராட்சியில் அனைத்து அரசுத்துறைகளையும் ஒரு ங்கிணைத்து மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான தேசிய அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் காப்பீட்டு அட்டை, ஆதார் அட்டை ெரயில் பயண அட்டை, உதவி உபகரணங்கள், இலவச வீட்டுமனைபட்டா, இலவச வீடு, வேலைவாய்ப்பு மற்றும் வங்கி கடன் வேண்டி மனுக்கள் அளித்துள்ளனர். பெற–ப்பட்டுள்ள மனுக்கள் மீது தகுதி வாய்ந்த மனுக்களுக்கு உடனடியாக பயன்கள் வழங்கிட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், வருகின்ற 7-ந் தேதி அன்று தேனி வட்டாரத்திற்குட்பட்ட அரண்மனைப்புதூர் ஊராட்சியில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையும், பூமலைக்குண்டு ஊராட்சியில் மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடை பெறவுள்ளது. மாற்று த்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வே ண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×