என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கிய காட்சி.
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
- மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு 10 கிலோ அரிசி பை மற்றும் ஊக்கத் தொகை ஆகியவற்றை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
- தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் வழங்கினார்கள்.
தூத்துக்குடி:
மறைந்த முன்னாள் தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் -அமைச்சருமான கருணாநிதியின் 100-வது பிறந்தாளையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் மாற்றுத்திறனாளிகள் 100 பேருக்கு 10 கிலோ அரிசி பை மற்றும் ஊக்கத் தொகை ஆகியவற்றை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.
தொடர்ந்து, மாற்றத்தி றனாளிகள் பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களை வழங்கி னார்கள். அதைப் பெற்றுக்கொண்டு ஒவ்வொருவரிடமும் தங்க ளுடைய குறைகளையும், குடும்பநலன்களையும் கேட்டறிந்தார். அனைத்தையும் முழுமை யாக நிறைவேற்றி தருவேன் என்று அமைச்சர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி செந்தில் குமார், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.






