search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யலூர், செம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்
    X

    செம்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

    அய்யலூர், செம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்

    • தருமபுரி சம்பவத்தை கண்டித்து அய்யலூர், செம்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் கோஷம் எழுப்பி மறியல் போராட்டம்
    • இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.

    செம்பட்டி:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் தலைமையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தச் சென்றனர்.

    அப்போது, போராட்டத்திற்கு சென்ற மாற்றுத்திறனாளிகளை குண்டுகட்டாக தூக்கி போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதனை கண்டித்து, செம்பட்டி பஸ் நிலையம் அருகே, ஆத்தூர் ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சார்பில் ஒன்றிய செயலாளர் மலைச்சாமி தலைமையில், சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தர்மபுரியில் குண்டுகட்டாக தூக்கி, மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, போலீசாரை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். அவர்களிடம் செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அய்யலூரில் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தினால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வடமதுரை இன்ஸ்பெக்டர் நாகசாந்தி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×