search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு பெறுவது குறித்த குழு கூட்டம்
    X

    தேனி கலெக்டர் அலுவலகத்தில் காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக செய்கை மொழி பெயர்ப்பாளர் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.


    தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு பெறுவது குறித்த குழு கூட்டம்

    • தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சம வாய்ப்பு பெறுவது குறித்த குழு கூட்டம் நடைபெற்றது
    • இதில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் பல்வேறு அறிவுரைகளை அலுவலர்களுக்கு வழங்கினார்

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளு க்கான சமவாய்ப்பு மற்றும் சமஉரிமை, செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகள், தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகளுடன் மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனா–ளிகளு க்கான மருத்துவச்சான்றிதழ், தனித்துவமான அடையான அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், சுய தொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை, காதுகேளாத மனவளர்ச்சி குன்றிய 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அடிப்படை பயிற்சி, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து வழங்கப்பட்ட விபரங்கள், வழங்கப்பட வேண்டிய விபரங்கள் குறித்தும் ஆரம்ப கால பயிற்சி மையம் மற்றும் பரிசோதனை மையம், சிறப்பு பள்ளிகள், பகல் நேரக் காப்பகங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பபாடுகள், சமூக பாதுகாப்புத்திட்டம், பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவைகள் குறித்தும் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், மாற்றுத்திற னாளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு அளித்தி டவும், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்கிடவும், அனைத்து துறைகளிலும் மாற்று த்திறனாளிகளுக்கு அரசு திட்டங்களில் முன்னு ரிமை வழங்கிடவும் நடவடிக்கை கள் மேற்கொள்ள துறை அலுவல ர்கள், தொழி ற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில், காதுகேளாத மற்றும் வாய்பேசாத மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக செய்கை மொழி பெயர்ப்பாளர் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில 6 நபர்களுக்கு பாதுகாவலர் நியமனச் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் விற்பனை நிலையத்தினை கலெக்டர் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

    Next Story
    ×