search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதம்"

    • பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
    • பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.

    வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பழங்குடிப் பகுதிகளில் இன்று 4 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றது. இதில், இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

    வடமேற்கு பாகிஸ்தானில் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வஜிரிஸ்தான், தெற்கு வஜிரிஸ்தான் மற்றும் பஜவுர் பழங்குடியின மாவட்டங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தது.

    இதில், வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ரஸ்மாக் பகுதியில் பாதுகாப்புப் படையினரின் வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள வானா என்கிற பகுதியில், பழங்குடியின முதியவர் அஸ்லாம் நூர் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மற்றும் உள்ளூர் கடைக்காரர் ஒருடர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.

    பஜவுர் பழங்குடியினர் மாவட்டத்தில், இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் உள்ளூர் ஜமியத் உலமா-இ-இஸ்லாம் அமைப்பின் தலைவரின் தந்தை உள்பட மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்புப் படையினருக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இதில், பெரும்பாலும் பொதுமக்களும் அவர்களின் இலக்குகளாக மாறியுள்ளனர்.

    • அமெரிக்க-இந்திய கூட்டறிக்கையில் தவறான குறிப்புகள் இருப்பதாக அதிருப்தி குறித்து தெரிவிக்கப்பட்டது.
    • இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக மாற்றியுள்ளது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சென்ற வாரம் அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டார். அப்பொது அவரும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இணைந்து பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத ஆதரவிற்கு எதிராக ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

    நேற்று மாலை அமெரிக்க துணைத் தூதர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு, ஜூன் 22ம் தேதி அமெரிக்க-இந்திய கூட்டறிக்கையில், தேவையற்ற, ஒருதலைப்பட்சமான மற்றும் தவறான குறிப்புகள் இருப்பதாகவும், அதுகுறித்து பாகிஸ்தானின் கவலைகள் மற்றும் அதிருப்தி குறித்து தெரிவிக்கப்பட்டது என பாகிஸ்தான் தெரிவித்தது.

    பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு நன்றாக முன்னேறி வருவதாகவும், பாகிஸ்தான்-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த, பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலை மையமாகக் கொண்ட சூழலை உருவாக்குவது அவசியம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையானது, பாகிஸ்தானை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக சித்தரித்துள்ளது என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என காபூலில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.
    • இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    காபூலில் உள்ள தாஷ்ட்-இ-பார்ச்சி பகுதியில் கல்வி நிறுவனம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    காஜ் கல்வி மையத்தில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவிகள் என காபூலில் இருந்து தகவல் வெளியாகியுள்ளன.

    இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    காபூலின் தாஷ்ட்-இ-பார்ச்சியில் உள்ள காஜ் கல்வி மையத்தில் நேற்றைய பயங்கரவாதத் தாக்குதலால் நாங்கள் வருத்தமடைகிறோம். மேலும் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

    கல்வி இடங்களில் அப்பாவி மாணவர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுவதை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×