search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்றிகள்"

    • பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • மாநகராட்சி எல்லைக்குள் சுற்றி திரிந்தால் அவற்றை வளர்க்கும் உரிமையாளர் மீது பொது சுகாதார சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட அன்பு நகர், பூக்காரத் தெரு, முனியாண்டவர் காலனி, விளார்ரோடு, 20 கண் பாலம் ஆகிய இடங்களில் பன்றிகள் தொல்லை அதிகமாக காணப்பட்டது. பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து பன்றிக ளைப் பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தெருக்களில் சுற்றி தெரிந்த பன்றிகளை போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட கோட்ட துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையில் 18 பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.

    மேலும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் இது போன்று பன்றிகள் பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    சுகாதார சீர்கேடு விளைவிக்கும்படி பன்றிகள் மாநகராட்சி எல்லைக்குள் சுற்றி திரிந்தால் அவற்றை வளர்க்கும் உரிமையாளர் மீது பொது சுகாதார சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்தார்.

    • திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கால்நடைகளின் வீதி உலா, பன்றிகள் மற்றும் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • கோட்டை ரயில் நிலையம் மற்றும் கள்ளக்காடு பகுதிகளில் 50 பன்றிகள் பிடிக்கப்பட்டன.

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கால்நடைகளின் வீதி உலா, பன்றிகள் மற்றும் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துக்குள் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலைகளில் சுற்றித்திரிந்த ஆடு, மாடுகளை மாநகராட்சி பிடித்து சென்றனர். பின்னர் அதனை மீட்க உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். இதில் அதிகபட்ச தொகை அபராதமாக விதிக்கப்பட்டதாக உரிமையாளர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் சிலர் கால்நடைகளை மீட்க முன் வராததால் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. பின்னர் தொடர் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகமும் கைவிட்டது. இதற்கிடையே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் தனியாருடன் ஒப்பந்தம் செய்தது.

    இதையடுத்து நேற்றைய தினம் கோட்டை ரயில் நிலையம் மற்றும் கள்ளக்காடு பகுதிகளில் 50 பன்றிகள் பிடிக்கப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, இது தொடர்பாக பலமுறை பன்றி வளர்ப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் யாரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. எனவேதான் பன்றிகள் பிடிக்கப்படுகிறது என்றனர்.

    பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், சாலைகளில் ஆதரவின்றி சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் நாய்களையும் பிடித்து செல்ல வேண்டும். அதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் பதிலளிக்கையில், மாநகராட்சி பகுதியில் மேலும் 3 நாய்கள் கருத்தடை மையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. கால்நடைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் விரைவில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

    • நெற்பயிர்களை சேதப்படுத்தும்பன்றிகளால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • தற்போது அறுவடை பணிகள் நடைெபற்று வருகிறது.

    வத்திராயிருப்பு,

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா விற்கு உட்பட்ட மகாராஜபுரம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடை பணிகள் மும்முர மாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில்அய்யா சாமி என்பவரது விவசாய நிலத்தை பூபதி என்பவர் குத்தகைக்கு எடுத்து நெல் சாகுபடி செய்திருந்தார். அப்பகுதியில் வளர்க்க ப்படும் வளர்ப்பு பன்றி கள் அடிக்கடி விவ சாய நிலத்திற்குள் புகுந்து நெற்கதிர்களை சேதப்ப டுத்துவதாக விவசாயிகள் கவலைபடுகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வத்திராயிருப்பு பகுதியில் எண்ணற்ற விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளோம். தற்போது அறுவடை பணிகள் நடைெபற்று வருகிறது.

    இந்த நிலையில் வயலுக்குள் பன்றிகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பன்றிகளால் பயிர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனால் எங்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பன்றி களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×