search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் பட்டுவாடா"

    தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பணப் பட்டுவாடாவை தடுக்க அதிரடி சோதனை வருகிறது என்று தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்ய தொடங்கி உள்ளது.

    தேர்தல் ஆணையத்துக்கு தற்போதுள்ள பெரும் சவால்களில் பணப்பட்டு வாடாவை தடுப்பதுதான் முதன்மையான சவாலாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படும் என்பதால் அதை எப்படி தடுப்பது என்பதில்தான் தேர்தல் ஆணையம் அதிக கவனம் செலுத்த தொடங்கி உள்ளது.

    கடந்த 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது நாடு முழுவதும் பணப்பட்டுவாடாவுக்காக கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.100 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 2014-ம் ஆண்டு தேர்தலில் இந்த பணம் ரூ.300 கோடியாக உயர்ந்தது.

    அந்த தேர்தலின்போது ஆயிரத்து 200 கோடி ரூபாய் அளவுக்கு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பணப்பட்டு வாடா ரூ.500 கோடியை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு பரிசு பொருட்களும் கைமாறும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

    இதையடுத்து பணப் பட்டுவாடாவை தடுக்க தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. எந்தெந்த துறைகள் மூலம் எப்படி பணப் பட்டுவாடாவை தடுக்கலாம் என்று திட்டமிடப்பட்டு வருகிறது.

    இதில் முடிவு எடுப்பதற்காக அடுத்த மாதம் ஆலோசனை கூட்டம் ஒன்றை தலைமை தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையினர், அமலாக்கத்துறையினர், சி.பி.ஐ. அதிகாரிகள், வருமான வரித்துறையினர், மத்திய நேரடி வரி விதிப்பு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    அவர்களிடம் கருத்து கேட்டு பணப்பட்டு வாடாவை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் பணப்பட்டு வாடாவை தடுக்க உள்ளூர் போலீசாரை எப்படி பயன்படுத்துவது என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி அடுத்த மாதமே வாகன சோதனைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×