search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்கிங்ஹாம் அரண்மனை"

    • 75 வயதான சார்லஸ் சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.
    • இங்கிலாந்து மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு பிறகு அவரது மகன் சார்லஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முறைப்படி மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    75 வயதான சார்லஸ் சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைந்து ஆரோக்கியம் பெற இந்திய மக்களுடன் இணைந்து தாமும் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

    • மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டபோது புற்றுநோய் பாதிப்பு தெரியவந்தது.
    • சிகிச்சை அளிக்கப்படுவதால் பொதுவெளி நிகழ்வில் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரை.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்படுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

    பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடந்த மாதம் மூன்று நாட்கள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது மன்னர் சார்லஸ்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    அவருக்கு மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதால், பொதுவெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதே நேரத்தில் தனது வழக்கமான மற்ற பணிகளை மன்னர் மேற்கொள்வார்.

    ஊகங்களைத் தடுக்கவும், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அறிவித்துள்ளார்" என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ் (கோப்புப்படம்)

    75 வயதான மன்னர் சார்லஸ் கடந்த 2023-ம் ஆண்டு இங்கிலாந்து மன்னராக முடிசூடிக் கொண்டார். இரண்டாம் எலிசபெத் ராணி, 2022-ல் உயிரிழந்ததை அடுத்து மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். மன்னர் சார்லஸ்க்கு வில்லியம், ஹாரி என இரண்டு மகன்கள் உள்ளனர். ஹாரி குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

    • மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெறவுள்ளது.
    • மன்னர் சார்லசின் மனைவியான கமிலாவும் இங்கிலாந்து ராணியாக முறைப்படி அறிவிக்கப்படுவார்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர், அவரது மகன் சார்லஸ் மன்னராக அரியணை ஏறியபோதும், அதிகாரபூர்வ முடிசூட்டு விழா பல மாதங்களாக நடைபெறாமலே இருந்து வந்தது.

    இந்த நிலையில் மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி நடைபெறவுள்ளது. கடந்த 1953-ம் ஆண்டு மறைந்த ராணி 2-ம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா நடந்தது.

    அதனை தொடர்ந்து, 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த பாரம்பரிய விழா நடைபெற இருக்கிறது. இந்த கோலாகலத்தை காண ஒட்டுமொத்த இங்கிலாந்தும் தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் இந்த பிரமாண்ட விழா எப்படி நடைபெறும் என்ற விவரங்களை பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    விழா நடைபெறும் மே 6-ந் தேதி காலை மன்னர் 3-ம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகிய இருவரும் தங்கமுலாம் பூசப்பட்ட மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட குதிரை வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மினிஸ்டர் அபே தேவாலயத்துக்கு வருவார்கள்.

    சார்லசின் முடிசூட்டு விழாவுக்காக இங்கிலாந்து மன்னர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த 700 ஆண்டுகள் பழைமையான தங்க முலாம் பூசப்பட்ட சிம்மாசனம் தயார்படுத்தப்பட்டிருக்கிறது.

    இந்த முடிசூட்டு விழாவின்போது மன்னர் மூன்றாம் சார்லஸ் பாரம்பரிய மரபுப்படி கையில் செங்கோல் ஏந்தி அந்த சிம்மாசனத்தில் அமர்வார். அதை தொடர்ந்து, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு, மன்னர் ஆசீர்வதிக்கப்படுவார். அதன் பிறகு, புனித எட்வர்டின் கிரீடம் மன்னர் 3-ம் சார்லசுக்கு சூட்டப்படும்.

    தொடர்ந்து பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து கொண்டு, நாட்டு மக்களுக்கு புதிய மன்னர் சார்லஸ் உரையாற்றுவார். அந்த தினமே, மன்னர் சார்லசின் மனைவியான கமிலாவும் இங்கிலாந்து ராணியாக முறைப்படி அறிவிக்கப்படுவார்.

    மன்னரின் முடிசூட்டு விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்களும், இங்கிலாந்தை சேர்ந்த தொண்டு மற்றும் சமூக குழுக்களின் 850 பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×