search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோக்கியா"

    • ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனை நிறுத்தப்பட்டு இருக்கிறது.
    • நோக்கியா நிறுவனத்துடனான காப்புரிமை விவகாரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    ஸ்மார்ட்போன்களில் வழங்கி இருக்கும் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பங்களுக்கு முறையான உரிமம் வைத்திருக்காத காரணத்தால் ஒப்போ மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களுக்கு எதிராக ஜெர்மனி நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. வழக்கில் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு மூலம் பிரச்சினையை முடித்துக் கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. எனினும், இதற்கு இருதரப்பும் உடன்படவில்லை.


    இதை அடுத்து ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களை ஜெர்மனியில் விற்பனை செய்ய நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஒப்போ நிறுவன வலைதளத்தில், சாதனம் பற்றிய விவரம் எங்களின் வலைதளத்தில் இல்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் தொடர்ந்து ஒப்போ சாதனங்களை பயன்படுத்தலாமா, அப்டேட் மற்றும் சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுமா என்ற கேள்வி ஒப்போவிடம் எழுப்பப்பட்டது.


    இதற்கு பதில் அளித்த ஒப்போ நிறுவனம், ஒப்போ சாதனங்களை எந்த விதமான தடையும் இன்றி தொடர்ந்து பயன்படுத்தலாம். நிச்சயம் உங்களுக்கான எதிர்கால அப்டேட்கள் வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறது. ஸ்மார்ட்போன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இயர்போன், சார்ஜர் போன்ற அக்சஸரீக்களை ஒப்போ நிறுவனம் தொடர்ந்து விற்பனை செய்ய முடியும். 

    • ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புது நோக்கியா மொபைல் மாடலை அறிமுகம் செய்தது.
    • முன்னதாக இதே மொபைல் சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 8120 4ஜி மொபைல் போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. முன்னதாக நோக்கியா 2660 ப்ளிப் மற்றும் 5710 எக்ஸ்பிரஸ் ரேடியோ போன்ற மாடல்களுடன் நோக்கியா 8120 மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன.

    புது நோக்கியா 8120 அதன் பழைய ஃபீச்சர் போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அசத்தல் டிசைன், தலைசிறந்த உறுதித்தன்மை கொண்டிருக்கும் நோக்கியா 8120 மாடல் 4ஜி, வோல்ட்இ கனெக்டிவிட்டி, 2.8 இன்ச் டிஸ்ப்ளே, எளிய யூசர் இண்டர்பேஸ் கொண்டுள்ளது.

    இத்துடன் டார்ச், வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, MP3 பிளேயர், கேம்லாஃப்ட் கேம்கள், ஒரிஜின் டேட்டா கேம்கள் பிரீலோட் செய்யப்பட்டு உள்ளன.


    நோக்கியா 8120 4ஜி அம்சங்கள்:

    - 2.8 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே

    - அதிகபட்சம் 1GHz யுனிசாக் T107 சிங்கில் கோர் பிராசஸர்

    - 48MB ரேம்

    - 128MB மெமரி

    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    - டூயல் சிம் ஸ்லாட்

    - S30+ ஓ.எஸ்.

    - விஜிஏ கேமரா

    - 3.5mm ஹெட்போன் ஜாக்

    - வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, MP3 பிளேயர், டார்ச் லைட்

    - 4ஜி வோல்ட்இஷ ப்ளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி

    - 1450 எம்ஏஹெச் பேட்டரி

    விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

    நோக்கியா 8120 4ஜி மாடல் டார்க் புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3 ஆயிரத்து 999 ஆகும். விற்பனை அமேசான் மற்றும் நோக்கியா இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது.

    • நோக்கியா G11 ப்ளஸ் மாடல் லேக் ப்ளூ, சார்க்கோல் கிரே ஆகிய நிறங்களில் வருகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தையில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    நோக்கியா நிறுவனம் அதன் புது G சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிறுவனத்தின் G11 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதன் அடுத்த மாடலான G11 ப்ளஸ்-சை விரைவில் அறிமுகம் செய்ய நோக்கியா நிறுவனம் தயாராகி வருகிறது.

    G11 மாடலில் இருந்ததுபோல் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய வி நாட்ச் ஸ்கிரீன் மற்றும் யுனிசாக், T606 SoC புராசஸர் ஆகியவை G11 ப்ளஸ் மாடலிலும் இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குகளத்துடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இந்த ஸ்மார்ட்போனில் 50MP பிரதான கேமரா, 2MP இரண்டாம் நிலை கேமரா மற்றும் முன்பக்கத்தில் 8MP கேமரா உள்ளது. இது ஒரு நோர்டிக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 5000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது, இது 3 நாட்கள் வரை தாங்கக்கூடிய திறன் கொண்டவை என கூறப்படுகிறது.

    நோக்கியா G11 ப்ளஸ் மாடல் லேக் ப்ளூ, சார்க்கோல் கிரே ஆகிய நிறங்களில் வருகிறது. இந்த போன் விரைவில் சர்வதேச சந்தையில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதன் விலை விவரம் இதுவரை வெளியாகவில்லை.

    ×