search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேலக்ஸி ஏ9"

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிக்கப்பட்டு, முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. #GalaxyNote9 #GalaxyUnpacked
     

    சாம்சங் நிறுவனம் நியூ யார்க் நகரில் நேற்று அறிமுகம் செய்த கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்கான முன்பதிவுகளும் துவங்கியுள்ளது. 

    அதன்படி கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்வோர் சாம்சங் கியர் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை ரூ.4,999 விலையில் வாங்கிட முடியும். இதன் உண்மை விலை ரூ.22,990 என்பது குறிப்பிடத்தக்கது.

    கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓசன் புளு மற்றும் மெட்டாலிக் காப்பர் (128 ஜிபி மட்டும்) போன்ற நிறங்களில் கிடைக்கிறது. கேலக்ஸி நோட் 9 (6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி) மாடலின் விலை ரூ.67,900 என்றும் 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.84,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சாம்சங் ஆன்லைன் தளத்தில் இன்று (ஆகஸ்டு 10) முதல் முன்பதிவு துவங்கப்பட்டிருக்கும் நிலையில் ஆகஸ்டு 21-ம் தேதி வரை முன்பதிவு செய்யலாம். கேலக்ஸி நோட் 9 விநியோகம் ஆகஸ்டு 20-ம் தேதி முதல் துவங்கும் என சாம்சங் அறிவித்துள்ளது. விரைவில் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களிலும் கேலக்ஸி நோட் 9 முன்பதிவுகள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அறிமுக சலுகைகள்:

    - பேடிஎம் தளத்தில் கேலக்ஸி நோட் 9 வாங்கும் போது ரூ.6000 வரை கேஷ்பேக்
    - தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தினால் ரூ.6000 கேஷ்பேக்
    - சாம்சங் அப்கிரேடு சலுகையின் கீழ் பழைய நோட் 9 ஸ்மார்ட்போனை கொடுத்து ரூ.6000 அப்கிரேடு போனஸ் பெறலாம்



    சாம்சங் கேலக்ஸி நோட் 9 சிறப்பம்சங்கள்:

    – 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960×1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ்
    – ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 GPU
    – ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர், மாலி G72MP18 GPU
    – 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    – 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
    – மெமரியை நீட்டிக்கும் வசதி
    – ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ)
    – சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    – 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5, எல்.இ.டி. ஃபிளாஷ், 960fps சூப்பர் ஸ்லோ-மோ
    – 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    – 8 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா, f/1.7
    – வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    – ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
    – BLE எஸ் பென்
    – 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.1
    – 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - வயர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் முழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். #GalaxyNote9 #GalaxyUnpacked


    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி நோட் 9 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் நோட் 9 ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, பெசல்-லெஸ் ஸ்கிரீன், நோட் 8 போன்றே காட்சியளிக்கிறது. 

    புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எஸ்9 சீரிஸ் போன்றே 12 எம்பி பிரைமரி கேமரா, f/1.5, f/2.4 அப்ரேச்சர், 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் கொண்ட இரண்டாவது பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஐரிஸ் சென்சார், கைரேகை சென்சார் இம்முறை கேமராவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, பிக்ஸ்பி அசிஸ்டண்ட் சேவை மற்றும் இதனை இயக்க பிரத்யேக ஹார்டுவேர் பட்டன் வழங்கப்பட்டுள்ளது.



    மேம்படுத்தப்பட்ட எஸ் பென் ஸ்டைலஸ் ப்ளூடூத் வசதி மற்றும் பட்டன் கொண்டுள்ளது. இதை கொண்டு செல்ஃபி மற்றும் வழக்கமான புகைப்படம் போன்றவற்றை எடுக்க முடியும். கேமராவை ஆன் செய்து ஸ்டைலஸ்-இல் உள்ள பட்டனை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது. மேலும் இந்த பட்டன் கொண்டு வீடியோவை பிளே, பாஸ் மற்றும் பல்வேறு அம்சங்களை இயக்க முடியும்.

    நோட் 9 ஸ்மார்ட்போனில் AKG டியூன் செய்த ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சவுன்டு சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள ஏ.ஆர். எமோஜி மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் முகத்தில் உள்ள 100-க்கும் அதிக முக நுனுக்கங்களை கண்டறிந்து 3D மாடல் ஒன்றை உருவாக்கி உங்களது முகபாவனைகளை உருவாக்குகிறது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் நோட் 9 மாடலில் அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி நோட் 9 சிறப்பம்சங்கள்:

    – 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960×1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    – கார்னிங் கொரில்லா கிளாஸ்
    – ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 GPU
    – ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 9810 பிராசஸர், மாலி G72MP18 GPU
    – 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
    – 8 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
    – மெமரியை நீட்டிக்கும் வசதி
    – ஆன்ட்ராய்டு 8.1 (ஓரியோ)
    – சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    – 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5, எல்.இ.டி. ஃபிளாஷ், 960fps சூப்பர் ஸ்லோ-மோ
    – 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    – 8 எம்பி ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா, f/1.7
    – வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
    – ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
    – BLE எஸ் பென்
    – 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. 3.1
    – 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், வயர் மற்றும் வயர்லெஸ்

    சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், லாவென்டர் பர்ப்பிள், மெட்டாலிக் காப்பர் நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இந்த நிறங்களுக்கு ஏற்ற நிறத்தில் எஸ் பென், ஓசன் புளு ம்ற்றும் எல்லோ எஸ் பென் வழங்கப்படுகிறது.

    கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி வெர்ஷன் விலை 999.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.68,750) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் 8 ஜிபி ரேம் மாடல் 1249.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.85,940) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்சமயம் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி நோட் 9 விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி துவங்குகிறது. #GalaxyNote9 #GalaxyUnpacked #Unpacked2018 
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #GalaxyNote9 #Unpacked


    சாம்சங நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 அறிமுக வீடியோ இணையத்தில் லீக் ஆனதில் ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் தெரியவந்தது. இந்நிலையில், ஸ்மார்ட்போன் பெட்டியின் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது. 

    அதன்படி 6.4 இன்ச் QHD+ சூப்பர் AMOLED ஸ்கிரீன், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது. இது முந்தைய கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலை விட பெரியதாக இருக்கும். இதன் சிப்செட் மற்றும் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படுகிறது.

    இத்துடன் புதிய 512 ஜிபி வெர்ஷனும் அறிமுகமாகிறது, எனினும் 8 ஜிபி ரேம் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.



    சாம்சங் கேலக்ஸி நோட் 9 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 6.4 இன்ச் குவாட் ஹெச்.டி. பிளஸ் 2960x1440 பிக்சல் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் / அட்ரினோ 630 GPU
    - ஆக்டாகோர் சாம்சங் எக்சைனோஸ் 9 சீரிஸ் 9810 பிராசஸர் / மாலி G72MP18 GPU
    - 6ஜிபி ரேம் 
    - 64 ஜிபி / 128 ஜிபி / 512 ஜிபி மெமரி
    - மெமரியை நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - சிங்கிள் / ஹைப்ரிட் டூயல் சிம்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.4-f/1.5 வேரியபிள் அப்ரேச்சர், எல்இடி ஃபிளாஷ், 960fps சூப்பர் ஸ்லோ-மோ
    - 12 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 8 எம்பி ஆட்டோ ஃபோக்கஸ் செல்ஃபி கேமரா, வைடு-ஆங்கிள் லென்ஸ்
    - வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)
    - ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் AKG, Dolby Atmos டியூன் செய்யப்பட்டுள்ளன
    - கைரேகை சென்சார், ஐரிஸ் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 4000 எம்ஏஹெச் பேட்டரி 
    - ஃபாஸ்ட் சார்ஜிங், வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்

    சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மிஸ்டிக் பிளாக், என்ஜினீர்டு புளு மற்றும் ஆர்டிசன் காப்பர் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் என்றும் இதன் 128 ஜிபி மாடலின் விலை 69,990 ரூபெல்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.75,705), 512 ஜிபி விலை 89,990 ரூபெல்ஸ் (இந்திய மதிப்பில் ரூ.97,340) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. #GalaxyNote9 #Unpacked

    புகைப்படம் நன்றி: Dmitriy Ryabinin
    கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் இரண்டு அறிமுக வீடியோக்கள் தவறுதலாக லீக் ஆகி பின் உடனே எடுக்கப்பட்டு விட்டது. வீடியோக்களில் கிடைத்திருக்கும் தகவல்களை பார்ப்போம். #Unpacked #GalaxyNote9


    சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் இரண்டு அதிகாரப்பூர்வ அறிமுக வீடியோக்களை வெளியிட்டு, பின் அவற்றை எடுத்து விட்டது. புதிய வீடியோக்களின் மூலம் நோட் 9 ஸ்மார்ட்போனில் 512 ஜிபி மெமரி வழங்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட இருக்கிறது.





    நோட் 9 ஸ்மார்ட்போனுடன் புதிய எஸ் பென் ஸ்டைலஸ், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது. இதன் எஸ் பென் கீழ்புறம் பட்டன் மற்றும் க்ளிக்கர் ஒன்றை கொண்டுள்ளது.

    ஸ்மார்ட்போனின் பின்புறம் டூயல் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கேமராவின் கீழ் புறம் சாம்சங் பிரான்டிங் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் ஐரிஸ் சென்சார் முன்பக்கம் வழங்கப்படுகிறது. புதிய நோட் 9 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9810 அல்லது ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம்.



    இதன் கேமரா சென்சார்கள் தற்சமயம் விற்பனையாகும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். இத்துடன் சாம்சங்கின் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவை மேம்படுத்தப்பட்டு பிக்ஸ்பி 2.0 வெர்ஷன் அறிமுகம் செய்யலாம். புதிய நோட் 9 ஸ்மார்ட்போன் பிளாக், புளு, கிரே, லாவென்டர் மற்றும் புதிய பிரவுன் நிறங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    புதிய கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை 1000 டாலர்களுக்குள் நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்டு 9-ம் தேதி தெரியவரும். #Unpacked #GalaxyNote9
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதன் முன்பதிவு துவங்கப்பட்டு விட்டது. #GalaxyNote9


    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. எனினும் சாம்சங் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விவரங்கள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் வலம் வருகின்றன.

    இதுவரை டீசர்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், கேலக்ஸி நோட் 9 மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி துவங்கும் என தெரிவிக்கப்பட்டது.

    சாம்சங் தனது புதிய நோட் 9 ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் வியாழன் கிழமை (ஆகஸ்டு 9) நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாம்சங் வலைதளம் அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலியில் உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் டெலிகாம் நிறுவனம் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யலாம்.

    தற்சமயம் நடைபெறுவது வெறும் முன்பதிவு தான் என்பதால், பயனர்கள் எவ்வித கட்டணும் செலுத்த வேண்டியதில்லை, எனினும் இவ்வாறு முன்பதிவு செய்வதன் மூலம் அறிமுக தினத்திலேயே ஸ்மார்ட்போனினை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் வலைதளம் மற்றும் செயலியில் புதிய ஸ்மார்ட்போனிற்கு எக்சேஞ்ச் மூலம் 450 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.30,800) வரை தள்ளுபடி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



    எனினும் புதிய நோட் 9 மாடலின் விலை, ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் நிறம் சார்ந்த விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். நிறத்தை பொருத்த வரை கேலக்ஸி நோட் 9 மாடல் கிரே நிறத்தில் வெளியிடப்படாது என்றும் இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் பிளாக், புளு, காப்பர், லாவென்டர் மற்றும் கிரெ நிறங்களில் வெளியிடப்படலாம் என கூறப்பட்டிருந்தது. 

    சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட டிஸ்ப்ளே, மேம்படுத்தப்பட்ட எஸ் பென், ப்ளூடூத் வசதியுடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. கீக்பென்ச் விவரங்களின் படி நோட் 9 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9820 சிப்செட், அமெரிக்காவில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய நோட் 9 மாடலில் 512ஜிபி வெர்ஷன் அறிமுகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் பயனர்களை கவரும் வகையில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் கேமரா அளவில் மேம்படுத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா, பெரிய பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படலாம். #GalaxyNote9 #Samsung
    சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை சார்ந்த தகவலை சாம்சங் அறிவித்துள்ளது. #GalaxyNote9


    சாம்சங் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டிற்கான வருவாய் அறிக்கை வெளியீட்டின் போது சாம்சங் தனது கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் விலை அதன் தரத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படும் என தெரிவித்தது. 

    எனினும் ஸ்மார்ட்போனின் சரியான விலையை அறிவிக்காத சாம்சங், கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் 128 ஜிபி மாடல் விலை IDR 13,500,000 (இந்திய மதிப்பில் ரூ.64,400) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டது. 

    கடந்த ஆண்டு சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் 64 ஜிபி விலை ரூ.67,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. சாம்சங் தனது கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு 9-ம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்கூட்டியே அறிமுகமாக இருப்பதால் நோட் 9 விற்பனை அதிகரிக்கும் என சாம்சங் நம்புவதாக தெரிகிறது.



    ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் சாம்சங் நிறுவன வருவாய் KRW 10.98 ட்ரில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.61,753 கோடி) ஆக இருந்தது. எனினும் ஒட்டுமொத்த விற்பனை நான்கு சதவிகிதம் குறைந்து KRW 58.48 ட்ரில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.3.6 லட்சம் கோடி) ஆக இருக்கிறது. மேலும் இதன் மொபைல் போன் வியாபாரம் சரிவடைந்து, நிர்வாக வருவாய் KRW1.39 ட்ரில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.8,500 கோடி) குறைந்தது. 

    எனினும் இந்த நிலை கேலக்ஸி நோட் 9 வரவுக்கு பின் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட டிஸ்ப்ளே, மேம்படுத்தப்பட்ட எஸ் பென், ப்ளூடூத் வசதியுடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. கீக்பென்ச் விவரங்களின் படி நோட் 9 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9820 சிப்செட், அமெரிக்காவில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய நோட் 9 மாடலில் 512ஜிபி வெர்ஷன் அறிமுகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் பயனர்களை கவரும் வகையில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் கேமரா அளவில் மேம்படுத்தப்பட்ட டூயல் பிரைமரி கேமரா, பெரிய பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்படலாம். #GalaxyNote9 #Samsung
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. #GalaxyNote9


    சாம்சங் நிருவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9-ம் தேதி அறிமுகமாக இருக்கும் நிலையில், தற்சமயம் ப்ளிப்கார்ட் தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    ப்ளிப்கார்ட் தளத்தின் மொபைல் போன் பிரிவில் கேலக்ஸி நோட் 9 அறிமுக தேதி மற்றும் சாம்சங் இதுவரை வெளியிட்டிருக்கும் கேலக்ஸி நோட் 9 டீசர்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன. மேலும் கேலக்ஸி நோட் 9 இந்திய வெளியீட, சர்வதேச அறிமுக நிகழ்வை தொடர்ந்து மிகவிரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய விற்பனைக்கு இம்முறையும் சாம்சங் ப்ளிப்கார்ட் உடன் கைகோர்த்திருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கேலக்ஸி அன்பேக்டு விழாவுக்கென பிரத்யேக பகுதி ப்ளிப்கார்ட் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த பிரத்யேக பகுதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐ.எ.எஸ். மொபைல் செயலிகளில் வழங்கப்படுகிறது. 



    எனினும் இந்த பகுதியில் மொபைலின் விலை மற்றும் விற்பனை சார்ந்த விவரங்கள் இடம்பெறவில்லை. இத்துடன் கேலக்ஸி நோட் 9 வெளியீடு சார்ந்த நோட்டிஃபிகேஷன்களை அறிந்து கொள்ள சைன்-அப் செய்யக்கோரும் ஆப்ஷனும் வழங்கப்ட்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் தங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.

    ப்ளிப்கார்ட் தளத்தில் விலை குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படாத நிலையில், ஏற்கனவே வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 24-ம் தேதி முதல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் என்றும் இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை PLN 4,299 (இந்திய மதிப்பில் ரூ.79,500) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  

    முன்னதாக வெளியான தகவல்களின் படி வரை கேலக்ஸி நோட் 9 சிறப்பம்சங்களை பொருத்த வரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றொரு வெர்ஷனில் எக்சைனோஸ் சிப்செட், 8 ஜிபி ரேம், 512 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற கேமரா அமைப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    512 ஜிபி அளவு இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் பட்சத்தில், பேஸ் வேரியன்ட் இன்டெர்னல் மெமரி 64 ஜிபியில் இருந்து 128 ஜிபியாக அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மேம்படுத்தப்பட்ட எஸ் பென் பல்வேறு நிறங்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. #GalaxyNote9 #flipkart
    சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி நோட் 9 இரண்டு புதிய டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளது. #Unpacked #GalaxyNote9


    சாம்சங் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், இரண்டு புதிய டீசர்களை சாம்சங் வெளியிட்டிருக்கிறது.

    புதிய டீசர்களில் ஸ்மார்ட்போனின் மெமரி மற்றும் வேகம் சார்ந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. அதன்படி புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் 512 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் வழங்கலாம் என தெரிகிறது.



    வெளியீட்டு தேதி தவிர கேலக்ஸி நோட் 9 சார்ந்து எவ்வித தகவலையும் சாம்சங் வழங்காமல் இருந்த நிலையில், புதிய டீசர்களில் நோட் 9 மிகப்பெரிய பேட்டரி வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது.


    பேட்டரி சார்ந்து வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில் ஐபோனில் பேட்டரி தீர்ந்து போவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. 30 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோவின் இறுதியில் A lot can change in a day என்ற வாசகம் மற்றும் ஆகஸ்டு 9, 2018 என்ற தேதியுடன் நிறைவுறுகிறது.

    சிறப்பம்சங்களை பொருத்த வரை கேலக்ஸி நோட் 9 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றொரு வெர்ஷனில் எக்சைனோஸ் சிப்செட், 8 ஜிபி ரேம், 512 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் மாடல்களில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற கேமரா அமைப்பு வழங்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    512 ஜிபி அளவு இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் பட்சத்தில், பேஸ் வேரியன்ட் இன்டெர்னல் மெமரி 64 ஜிபியில் இருந்து 128 ஜிபியாக அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் மேம்படுத்தப்பட்ட எஸ் பென் பல்வேறு நிறங்களில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

    புதிய கேலக்ஸி நோட் 9 மாடலுடன் வரும் எஸ் பென் மியூசிக் கன்ட்ரோல் பிளேபேக், செல்ஃப் டைமர் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கலாம். #Unpacked #GalaxyNote9
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் புதிய ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இம்முறை கிடைத்திருக்கும் தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #Samsung #GalaxyNote9



    கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் புதிய விவரங்கள் மீண்டும் லீக் ஆகியுள்ளது. @evleaks மூலம் வெளியாகி இருக்கும் ரென்டர்களில் நீல நிற நோட் 9 ஸ்மார்ட்போனுடன் மஞ்டள் நிற எஸ் பென், பிளாக் மற்றும் பிரவுன் நிற ஸ்மார்ட்போன்களுடன் மேட்சிங் நிறத்தில் எஸ் பென் வழங்கப்படுகிறது.

    முன்னதாக கடந்த வாரம் வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 9 முதல் ரென்டர்Kளில் எஸ் பென் தங்க அல்லது மஞ்சள் நிறம் கொண்டிருப்பது தெரியவந்தது. புதிய எஸ் பென் ப்ளூடூத் சப்போர்ட் கொண்டிருக்கும் என்பது ஏற்கனவே தெரிந்துவிட்ட நிலையில், மியூசிக் பிளேபேக், நீண்ட நேர செல்ஃப்-டைமர் வசதியும் சேர்க்கப்படலாம் என கூறப்பட்டது.

    எஸ் பென்-இல் வழக்கமான க்ளிக்கருடன் பட்டன் ஒன்றும் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் மாற்றப்படாமல், பின்புறம் டூயல் பிரைமரி கேமரா செட்டப் முந்தைய நோட் 8 ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் இம்முறை கைரேகை சென்சார் கேமரா மாட்யூலின் கீழ் பொருத்தப்பட்டு, இதனுடன் சாம்சங் பிரான்டிங் செய்யப்பட்டுள்ளது.



    முன்பக்கம் ஐரிஸ் ஸ்கேனர் மாற்றப்படாது என்றும் கூறப்படுகிறது. நோட் 9 ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9810 அல்லது ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்பட்டு, கேமரா சென்சார்கள் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலை போன்றே இடம்பெறலாம் என கூறப்படுகிறது. 

    புதிய நோட் 9 சாதனத்தில் அதிகபட்சம் 512ஜிபி மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் மாடலில் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் நோட் 9 அறிமுக விழாவில் பிக்ஸ்பி 2.0 அறிமுகம் செயய்ப்படலாம் என கூறப்படுகிறது.

    சாம்சங் தனது கேலக்ஸி நோட் 9 மாடலை ஆகஸ்டு 9-ம் தேதி வெளியிட இருக்கும் நிலையில், இதே நிகழ்வில் அந்நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் சாதனமும் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் கியர் எஸ்4 சாதனம் தான் கேலக்ஸி வாட்ச் என்ற பெயரில் வெளியாகலாம் என கூறப்பட்டு இருந்தது. #Samsung #GalaxyNote9 

    புகைப்படம் நன்றி: /Leaks
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இதன் லைவ் படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. #Samsung #GalaxyNote9



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் வெளியீட்டு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், புதிய நோட் 9 சார்ந்த பல்வேறு தகவல்கள் மற்றும் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி வருகிறது.

    இதுவரை கான்செப்ட் படங்கள், சிறப்பம்சங்கள், போன்ற தகவல்கள் வெளியான நிலையில், கேலக்ஸி நோட் 9 நிஜ புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகிவிட்டது. இதில் ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா, கைரேகை சென்சார் கேமரா சென்சாரின் கீழ் பொருத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    கேலக்ஸி நோட் 8 போன்றே நோட் 9 ஸ்மார்ட்போனும் செவ்வக வடிவில் பிளாக் டிசைன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் எக்சைனோஸ் 9810 அல்லது ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என்றும் இதன் கேமரா சென்சார்கள் கேலக்ஸ் எஸ்9 பிளஸ் போன்றும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    புதிய நோட் 9 சாதனத்தில் அதிகபட்சம் 512ஜிபி மெமரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி எஸ்9 சீரிஸ் மாடலில் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் நோட் 9 அறிமுக விழாவில் பிக்ஸ்பி 2.0 அறிமுகம் செயய்ப்படலாம் என கூறப்படுகிறது. புதிய நோட் 9 ஸ்மார்ட்போனுடன் மேம்படுத்தப்பட்ட எஸ் பென், மியூசிக் பிளேபேக் கன்ட்ரோல், செல்ஃபி டைமருக்கு நீண்ட நேரம் போன்ற வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    சாம்சங் தனது கேலக்ஸி நோட் 9 மாடலை ஆகஸ்டு 9-ம் தேதி வெளியிட இருக்கும் நிலையில், இதே நிகழ்வில் அந்நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் சாதனமும் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் கியர் எஸ்4 சாதனம் தான் கேலக்ஸி வாட்ச் என்ற பெயரில் வெளியாகலாம் என கூறப்பட்டு இருந்தது. #Samsung #GalaxyNote9

    புகைப்படம் நன்றி: /Leaks
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி வாட்ச் சாதனம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #GalaxyNote9 #smartwatch



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் FCC தளத்தில் SM-R815U மாடல் நம்பருடன் சான்று பெற்றிருக்கிறது. இதில் வாட்ச் சாதனம் 51.2 x 43.4 அளவில் 30.2 மில்லிமீட்டர் அல்லது 1.19 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரியவந்திருக்கிறது.

    சாம்சங் புதிய ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதே நிகழ்வில் அந்நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் சாதனமும் அறிமுகமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் கியர் எஸ்4 சாதனம் தான் கேலக்ஸி வாட்ச் என்ற பெயரில் வெளியாகலாம் என தெரிவித்திருந்தது.



    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களிலும் கேலக்ஸி வாட்ச் மற்றும் நோட் 9 ஒரே நிகழ்வில் அறிமுகமாகி, விற்பனை ஆகஸ்டு 24-ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மட்டும் ஆகஸ்டு 9-ம் தேதி வெளியாக இருப்பதை சாம்சங் டீசர் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறது.

    கேலக்ஸி வாட்ச் சாதனம் டைசன் ஓ.எஸ். இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் வெவ்வேறு அளவுகளில், இரண்டு வித வேரியண்ட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் இந்த சாதனத்தில் மேம்படுத்தப்பட்ட உடல்நலம் சார்ந்த அம்சங்கள், உடற்பயிற்சி சார்ந்த தலைசிறந்த செயலிகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

    கேலக்ஸி வாட்ச் முன்பதிவுகள் ஆகஸ்டு 14-ம் தேதி துவங்கலாம் என கூறப்படுகிறது, இதே தினத்தில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவுகளும் துவங்கயிருக்கிறது. கேலக்ஸி சீரிஸ் முதல் வாட்ச் என்பதால், இந்த சாதனம் கேலக்ஸி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. #GalaxyNote9 #smartwatch
    சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #GalaxyNote9



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் மீண்டும் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதுவரை வெளியானதில் இம்முறை லீக் ஆகியிருக்கும் புகைப்படங்களில் கேலக்ஸி நோட் 9 மாடலில் 3.5 எம்.எம். ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் பர்ப்பிள் மற்றும் கோல்டு என இரண்டு நிறங்களில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 24-ம் தேதி விற்பனைக்கு வரும் என்றும் இதே நாளில் போலாந்து நாட்டில் இந்த ஸ்மார்ட்போன்  அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

    ஐஸ் யுனிவர்ஸ் ட்விட்டர் தளத்தில் பதிவிடப்பட்டு இருக்கும் புதிய புகைப்படங்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் புதிதாக பர்ப்பிள்-கோல்டு நிறத்தில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இந்த மாடலுடன் கோல்டு நிறம் கொண்ட எஸ் பென் வழங்கப்படுகிறது.




    முந்தைய நோட் மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய நிறம் பார்க்க விசித்திரமாக காட்சியளிக்கும் நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் புதிய நிறம் தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த மாதம் சாம்சங் சார்பில் அனுப்பப்பட்ட நோட் 9 அழைப்பிதழில் தங்க நிறம் கொண்ட எஸ் பென் புகைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக வெளியான தகவல்களில் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன்: புளு, பிரவுன், பிளாக், லாவென்டர் மற்றும் கிரெ என ஐந்து வித நிறங்களில் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. கடந்த  ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நோட் 8 ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், மேப்பிள் கோல்டு, ஆர்சிட் கிரே மற்றும் டீப் சீ நிறங்களில் வெளியிடப்பட்டது. 

    கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 9-ம் தேதி நடைபெற இருக்கும் அறிமுக விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதே தினத்தில் முன்பதிவு துவங்கி ஆகஸ்டு 24-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை PLN 4,299 இந்திய மதிப்பில் ரூ.79,500 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #GalaxyNote9 #smartphone

    புகைப்படம்: நன்றி Twitter/ Ice universe
    ×