search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாமக்கல் ஆஞ்சநேயர்"

    ஒவ்வொரு வருடமும் இத்திருக்கோவில்களில் இவ்விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    * தமிழ் மாதம் முதல் ஞாயிறு சிறப்பு வடைமாலை அபிஷேகம் பங்குனித் தேர்த்திருவிழா

    * தை வெள்ளி

    * வைகுண்ட ஏகாதசி

    * ஆஞ்சநேயர் ஜெயந்தி

    * நவராத்திரி விழா

    * நரசிம்ம ஜெயந்தி

    * கிருஷ்ணர் ஜெயந்தி

    * ஆடி வெள்ளி

    * ஆவணி அவிட்டம்

    * புரட்டாசி ஐந்து சனிக்கிழமை

    * யுகாதி பண்டிகை

    * திருக்கார்த்திகை தீபம்

    ஒவ்வொரு வருடமும் இத்திருக்கோவில்களில் இவ்விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    • ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி-காலை 6.30 முதல் 1.30 மணி
    • மாலை 4.30 முதல் 8.30 மணி

    ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி

    காலை 6.30 முதல் 1.30 மணி

    மாலை 4.30 முதல் 8.30 மணி

    ஸ்ரீ நரசிம்மர் சன்னதி

    காலை 6.30 முதல்1.30 மணி

    மாலை 4.30 முதல் 8.30 மணி

    ஸ்ரீஅரங்கர் சன்னதி

    காலை 9.00 முதல் முதல் 11.00 மணி

    மாலை 5.00 முதல் 7.00 மணி

    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சன்னதி தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
    • பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படுகிறது.

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சன்னதி தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

    9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    அதன் பிறகு 9.30 மணி முதல் 10.30 மணி வரை ஆஞ்சநேயர் வடை மாலையுடன் காட்சி அளிப்பார்.

    அதன்பிறகு ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

    முதலில் நல்லெண்ணை காப்பு செய்யப்படுகிறது. பிறகு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படுகிறது.

    பின்னர் சீயக்காய், பால், தயிர், மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், சொர்ண அபிஷேகம் ஆகிய அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது.

    ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசி பழம், மாதுளம் பழம், திராட்சை பழம் ஆகியவற்றை கொண்டும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படுகிறது.

    அதன்பிறகு உச்சிகால பூஜை நடத்தப்படுகிறது.

    • நாமக்கல்லில் வாயு மைந்தன் அனுமான் வானமே கூரையாக கொண்டு அருள்பாலிக்கிறார்.
    • நாமகிரி தாயார் கோவிலுக்கு பின்னால் உள்ள குடவரைக் கோவில்தான் நரசிம்மர் கோவில் ஆகும்.

    நாமக்கல்லில் வாயு மைந்தன் அனுமான் வானமே கூரையாக கொண்டு அருள்பாலிக்கிறார்.

    இவரது சன்னதியில் கோபுரம், மேற்கூரை கிடையாது...

    சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் வாயு மைந்தன் என்பதால் காற்று போல எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்பதே இதன் தத்துவமாகும்.

    இவருக்கு கோபுரம் கிடையாது.

    வெயிலிலும், மழையிலும், காற்றிலும் பொலிவு மாறாமல் காட்சி அளிக்கிறார்.

    நரசிம்மர் நாமகிரி தாயார் கோவிலுக்கு நேர் எதிரில்தான் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    எதிரில் உள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார்.

    நரசிம்மருக்கு கோபுரம் இல்லை. அவர் அமர்ந்திருக்கும் இடம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது.

    அவருக்கு கோபுரம் இல்லாததால், அவரது தாசனான தனக்கும் கோபுரம் தேவையில்லை என்று ஆஞ்சநேயர் கூறியதாக வரலாற்றுத் தகவல் மூலம் தெரிய வருகிறது.

    நாமகிரி தாயார் கோவிலுக்கு பின்னால் உள்ள குடவரைக் கோவில்தான் நரசிம்மர் கோவில் ஆகும்.

    மலையின் மேற்கு புறம் உள்ள மலைக்கோவிலில் இந்த நரசிம்மர் நாமகிரி தாயார் கோவில் உள்ளது.

    நரசிம்மரின் சிலை மலையைக் குடைந்து வடிக்கப்பட்டு உள்ளது.

    நாமகிரி தாயாரின் கோவில் மலையைக் குடைந்து செய்யப்படாமல் தனியாக உள்ளது. இது ஒரு குடவரைக் கோவில் ஆகும்.

    பல்லவர் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. மலையின் கிழக்கு புறம் அரங்கநாதன் கோவில் உள்ளது.

    இங்கு 5 தலையுடைய பாம்பரசன் கார்கோடகன் மீது படுத்தவாறு திருவரங்கன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்ட திப்பு சுல்தான் பயன்படுத்திய நாமக்கல் மலைக்கோட்டை தற்போது தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இதன்மீது ஏறுவதற்கு மலையின் தென்மேற்கு பகுதியில் சிறிய படிக்கட்டு உள்ளது.

    பாறையை செதுக்கி இந்த படிகள் உருவாக்கப்பட்டு உள்ளது.

    நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கில் நேரு பூங்காவும், தெற்கில் செலம்ப கவுண்டர் பூங்காவும் உள்ளது.

    • பிரசாதம் என்பதால் பக்தர்களும் இதனை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.
    • 20 டிகிரி செல்சியஸ் அளவில் சுவாமி சிலையை குளிர வைக்க வேண்டும்.

    ஒவ்வொரு ஆண்டும் மார்கழி, தை மாதங்களில் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாத்துப்படி அலங்காரம் நடைபெறும்.

    பிரசாதம் என்பதால் பக்தர்களும் இதனை மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.

    இதுபற்றி கோவில் அர்ச்சகர்கள் கூறுகையில், ஆஞ்சநேயருக்கான வெண்ணெய் அலங்காரம் மேற்கொள்ள 10 அர்ச்சகர்கள் பணியில் உள்ளோம்.

    பிற்பகல் 3 மணிக்கு தொடங்கினால் இரவு 7 மணியாகிவிடும்.

    20 டிகிரி செல்சியஸ் அளவில் சுவாமி சிலையை குளிர வைக்க வேண்டும்.

    இதற்காக ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்துசிலை மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருப்போம்.

    குளிர்காலத்தில் மட்டுமே இதனை செய்ய முடியும்.

    அதன்பிறகு 110 கிலோ வெண்ணெய்யை கொஞ்சம், கொஞ்சமாக சாத்தி கட்டளை தாரர்கள் விரும்பும் வகையில் வெண்ணெய் சாத்துப்படி அலங்காரம் செய்யப்படும்.

    குறைந்தபட்சம் 4 மணி நேரம் மட்டுமே வெண்ணெய் அலங்காரம் சிலையில் இருக்கும்.

    பின்னர் உதிரத் தொடங்கி விடும். 110 கிலோவில் சுமார் 10 கிலோ வெண்ணெய் வீணாகி விடும்.

    கட்டளை தாரர்களுக்கு 50 கிலோ, அர்ச்சகர்களுக்கு 40 கிலோ வெண்ணெய் வழங்கப்படும்.

    10 கிலோ வெண்ணெய் கோவில் நிர்வாகம் சார்பில் விற்கப்படும்.

    சுவாமிக்கு சாத்தப்பட்ட வெண்ணெய்யை நெய்யாக உருக்கி வீட்டில் பயன்படுத்தினால் அனைத்து வளமும் கிடைக்கும் என்றனர்.

    • நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பவுர்ணமிதோறும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.
    • பவுர்ணமி அன்று மாலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை இந்த பூஜை நடைபெறும்.

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பவுர்ணமிதோறும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.

    கோவில் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் பவுர்ணமி அன்று மாலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை இந்த பூஜை நடைபெறும்.

    இதற்கு அனுமதி இலவசம்.

    பெண்கள் பூஜை பொருட்களை கொண்டு வரவேண்டும்.

    • ஐயப்ப சீசன் என்பதால் அந்நேரங்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அலை மோதுகிறது.
    • சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பாகும்.

    அனுமன் ஜெயந்தி, அமாவாசை, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    ஐயப்ப சீசன் என்பதால் அந்நேரங்களில் ஐயப்ப பக்தர்களின் கூட்டமும் அலை மோதுகிறது.

    சனி ஓரையில் ஆஞ்சநேயரை தரிசிப்பது நன்மை தரும் என்றும், மனதில் நினைத்ததை நிறைவேற்றுவார் என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

    சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பாகும்.

    வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சுந்தரகாண்டம் படித்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது வெண்ணை காப்பு சாத்தி வழிபடலாம்.

    • ஈசனின் அருளால் குஞ்சரனுக்குப் பிறந்த மகள், அஞ்சனை என்ற திருநாமம் கொண்டு வளர்ந்தாள்.
    • மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார்.

    திரேதாயுகத்தில் வாழ்ந்த சிவபக்தனான குஞ்சரன் என்பவர் குழந்தை வரம் கேட்டு ஈஸ்வரனை நோக்கித் தவம் புரிந்தார்.

    'சர்வலட்சணமும் கொண்ட அழகிய மகள் உனக்குப் பிறப்பாள்.

    அவளுக்குப் பிறக்கும் மகன் எனது அம்சமாகத் தோன்றி வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான்' என்று ஈசன் வரமளித்து மறைந்தார்.

    ஈசனின் அருளால் குஞ்சரனுக்குப் பிறந்த மகள், அஞ்சனை என்ற திருநாமம் கொண்டு வளர்ந்தாள்.

    மணப்பருவம் அடைந்த அஞ்சனை, கேசரி என்னும் வானர மன்னரை மணந்து கொண்டாள்.

    திருமணம் முடிந்தும் அஞ்சனைக்குப் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது.

    இதனால் எந்நேரமும் ஈசனை எண்ணி கண்ணீர் வடித்தாள் அஞ்சனை.

    பக்தியும், நற்குணங்களும் கொண்ட அஞ்சனையின் நல்ல குணங்களை மெச்சி தர்மதேவதை அவளின் முன்தோன்றி,

    'அஞ்சனையே நீ மாலவன் வீற்றிருக்கும் திருவேங்கடமலைக்கு உன் கணவருடன் சென்று தங்கி, ஈசனைக் குறித்து தவம்செய் ஈசன் அருளால் எவராலும் வெல்ல முடியாத அழகிய மகனைப் பெறுவாய்' என்று ஆசி கூறினாள்.

    தர்மதேவதை கூறியவாறே திருமலைக்குச் சென்று கடும் தவம் இருந்தாள் அஞ்சனை.

    பஞ்சபூதங்களும் வியக்கும் வண்ணம் அவள் இருந்த தவம் கண்டு வாயு தேவன் மகிழ்ந்தார்.

    ஈசனின் ஆணைப்படி அஞ்சனையின் தவத்தை மெச்சி வாயுதேவன் ஓர் அற்புதக்கனியைப் பரிசளித்து ஆசிர்வதித்தார்.

    அந்தக் கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள்.

    மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார்.

    சிவசக்தி அருளால் தோன்றிய அனுமன், வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று திருப்பெயர்கள் கொண்டார்.

    • இதனால், நாமக்கல் திருமூர்த்தி ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
    • திருக்கோவிலின் மூலஸ்தானமும், அர்த்தமண்டபமும் குகையுள்ளே இருக்கின்றன.

    நாமக்கல் தலத்தில் மகாலட்சுமி தாயாரின் வேண்டுதலுக்கு இணங்கி நரசிம்மர் அமைதி அடைந்து தாயாருக்கு வரங்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

    அது முதலாகத் தாயார் நாமகிரி லட்சுமி என்றும் பகவான் லட்சுமி நரசிம்மர் என்றும் நாமம் கொண்டு அருள் பொழிகின்றனர்.

    நரசிம்ம சுவாமி குகைக்கோவிலில் பல அழகிய கலைப்படைப்புகளிடையே வீற்றிருக்கிறார்.

    திருக்கோவிலின் மூலஸ்தானமும், அர்த்தமண்டபமும் குகையுள்ளே இருக்கின்றன.

    நரசிம்ம சுவாமி பிரதம தானத்திலும், உடன் சனகர், சனாதனர், சூரியர், சந்திரர் சாமரம் வீச, சிவபெருமானும் பிரம்ம தேவரும் சுவாமியை வணங்கும் கோலத்திலும் நிலை பெற்று உள்ளனர்.

    இதனால், நாமக்கல் திருமூர்த்தி ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

    மேலும் இந்தக்கோவிலில் சங்கரநாராயணரையும் தரிசிக்க முடிகிறது.

    நரசிம்மர் கோவிலில் உள்ளது போன்ற வாமன அவதாரத்தையும் காண முடிகிறது.

    இக்கோவிலும் இதன் கலை வல்லமைகளைக்கூறும் சிற்பங்களும் மாநில அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் தொல்பொருள் ஆய்வுத்துறையால் பாதுகாக்கப் பட்டு வருகின்றன.

    ஆகம விதிப்படி நித்திய கால (பூஜை) வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.

    நாமகிரி தாயாரின் புகழ் பாரதத்தின் இமயம் முதல் குமரிவரை பரவி உள்ளது.

    நாமக்கல் வந்து தாயாரை வணங்கும் பக்தர்கள் தங்கள் குறைகளையும் அவரிடம் சமர்ப்பிக்கின்றனர்.

    நோய்களிலிருந்து விடுதலை பெறவும், சந்தான பாக்கியம் வேண்டியும், பிற வேண்டுதல்களையும் வைக்கின்றனர்.

    கனிந்த காலத்தில் நாமகிரி அன்னையின் கருணையால் அவர்களின் குறைகள் நீங்கப்பெற்று மகிழ்வடைகின்றனர்.

    தங்கள் வாழ்வை நிறைவாக்கிய அன்னைக்குக் காணிக்கைகள், சேலைகள், நகைகள் ஆகியவற்றை பக்தர்கள் சமர்ப்பிக்கின்றனர்.

    நாமகிரி அம்மனுக்கு பத்து நாட்கள் தசரா திருவிழா கொண்டாடப்படுகின்றது.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத ஹஸ்த நட்சத்திரத்தில் நரசிம்மர், ரங்கநாதர், அனுமன் ஆகியோருக்குத் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

    இவ்விழா 15 நாட்களுக்கு நடைபெறுகின்றது.

    மார்கழி மாதம் அமாவாசையன்று அனைத்து பக்தர்களாலும் அனுமன் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது.

    நாமகிரி தாயாரின் கருணைக் கண்கள் கவலைகளைப் போக்கும் பேரழகு வாய்ந்தவை.

    நாமகிரி தாயார், தாமரைக் கண்கள் கொண்டவள்.

    தாமரை முகத்தாள், தாமரைக் கரத்தாள்.

    அவள் பாதங்களும் பத்மம்.

    அவள் பிறந்ததும் தாமரையிலே, அமர்ந்திருப்பதும் தாமரையிலே, கைகளில் கொண்டிருப்பதும் தாமரையையே!

    • அதே சுவரில் மகா விஷ்ணு திரிவிக்ரமனராக விண்ணையும் மண்ணையும் அளந்தவராகக் காட்சியளிக்கிறார்.
    • அடுத்து, நான்கு வேதங்களையும், பூமாதேவியையும் தாங்கியவராகக் காட்சியளிக்கிறார்.

    நாமக்கல் திருக்கோவிலின் அர்த்தமண்டப சுவற்றில் ஸ்ரீமகா விஷ்ணுவின் அவதாரங்களின் அழகிய கலை வடிவங்களைக் காணமுடிகிறது.

    சூரியன், சந்திரனோடு சிவபெருமான், பிரம்ம தேவர், மார்க்கண்டேயர் மற்றும் பூமாதேவி ஆகியோர் வைகுண்ட நாராயணரோடு அருள் தருகின்றனர்.

    அபய நரசிம்மரும் எழுந்தருள்கிறார்.

    அடுத்த சுவற்றில், உக்ர நரசிம்மர் தனது கூரிய நகங்களால் இரணியனின் மார்பைக் கிழிக்கும் காட்சி இடம் பெற்று உள்ளது.

    சுவற்றின் மறுபுறத்தில் வாமனமூர்த்தி மகாபலி சக்கரவர்த்தியிடம் தானம் பெறுவதையும், தானம் தருவதைத் தடுக்கும் சுக்ராசாரியரைத் தண்டிக்கும் கருடாழ்வாரையும், ஜாம்பவானையும் காணமுடிகிறது.

    அதே சுவற்றில் மகா விஷ்ணு திரிவிக்ரமனராக விண்ணையும் மண்ணையும் அளந்தவராகக் காட்சி தருகிறார்.

    அடுத்த சுவற்றில், நான்கு வேதங்களையும், பூமாதேவியையும் தாங்கியவராகக் காட்சி தருகிறார்.

    இப்பாறையின் கிழக்குப்புறத்தில் உள்ள குகைக்கோவிலில் ரங்கநாதர் கார்கோடக நாகர் மீது பள்ளி கொண்டு அருள் தருகிறார்.

    • பல நூற்றாண்டு கடந்த சிறப்புகளை கொண்டது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்
    • நாமக்கல் நகர் புராணகால சிறப்புகளை உடையது. இதை ஷைலஷேத்திரம் என்றும் கூறுவார்கள்.

    பல நூற்றாண்டு கடந்த சிறப்புகளை கொண்டது நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்

    நாமக்கல் நகர் புராணகால சிறப்புகளை உடையது. இதை ஷைலஷேத்திரம் என்றும் கூறுவார்கள்.

    ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு சவுடுகர் மகரிஷிகள் சூத முனிவரை ஸ்ரீ சைலஷேத்திரத்தின் பெருமையை அறிய அணுகினார்.

    அப்போது ஸ்ரீ விஷ்ணுவின் தசாவதாரத்திலிருந்து நரசிம்மர் பற்றிய புராணத்தைக் கூறியதாக வடமொழியான சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளின் அடிப்படையில் இந்த வரலாறு அளிக்கப்படுகிறது.

    தேவ சபையில் சகல சுத்த குணம் பொருந்தியவர் மகாவிஷ்ணுவே என்ற கருத்து இருந்தது.

    அதனையொட்டி துர்வாச முனிவரிடம் வணங்கி தேவேந்திரன் விளக்கம் கேட்டார்.

    துர்வாச முனிவர் ராஜகோளத்தில் பிரம்மாவும், மகாலட்சுமியும் தாமச உலகில் ஈஸ்வரனும், சரஸ்வதியும் சத்வகுண உலகில் ஸ்ரீ மகாவிஷ்ணுவும், பரமேஸ்வரியும் தோன்றியதாக கூறினார்.

    சரஸ்வதியை நான்முகனும், ஈஸ்வரியை ஈஸ்வரனும், லட்சுமியை மகாவிஷ்ணுவும் மணந்ததாகக் கூறினார்.

    சகலவிதமான பொறுமையுடன் ராஜ கோலத்தில் பிறந்த மகாலட்சுமியை வகித்து உலகத்தைக் காப்பாற்றி வருவதால் மகாவிஷ்ணுவே சிறந்தவராவார் எனக் கூறினார் துர்வாச முனிவர்.

    இதைக் கேட்ட இந்திரன் இதனைப் பரீட்சை மூலம் அறிய நினைக்கிறேன் என்றார்.

    பகவானை மனதில் தியானித்து துர்வாசர் சத்யலோகம் சென்றார். அங்கு மகாவிஷ்ணு நித்திரையில் இருந்தார்.

    துர்வாச முனிவரின் வேகத்தைக் கண்ட துவார பாலகர்கள் அவரைத் தடுக்கவில்லை.

    தான் வந்தும் மகாவிஷ்ணு நித்திரையில் இருப்பதைக் கண்டவுடன் மகாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார்.

    மகாவிஷ்ணு கோபம் கொள்ளாமல் சாந்தமுகத்துடன் முனிவரை பார்த்து தாங்கள் உதைத்ததால் மார்புப் பகுதி புனிதம் அடைந்ததாகவும் தங்கள் பாதம் வலிக்குமே எனக் கூறி முனிவரின் பாதத்தை வருடினார்.

    உடனே துர்வாசர் தெளிவடைந்து மகாவிஷ்ணுவிடம் பிழை பொருத்தருளுமாறு கேட்டார்.

    இட்ட பணியை செய்யத் தவறிய துவார பாலகர்களை மூன்று பிறவிகள் எடுத்து (தமக்கு விரோதிகளாக) இருப்பிடம் அடைவீர்! என தண்டனை கொடுத்தார்.

    பகவானை பிரிய மனமற்ற துவாரபாலகர்கள் கட்டளையின்படி மூன்று பிறவிகள் விரோதிகளாகப் பிறக்கிறோம்.

    ஆனால் தங்களாலேயே மரணம் அடைய வேண்டும் என வேண்ட, இறைவனும் அவ்வாறே வரம் தந்தார்.

    அவர்கள் அரக்கன் மதுகைடகர்போல் துவார பாலகர் இருவரும் இரண்யகசிபு மற்றும் இரண்யாட்சன் ஆகப்பிரிந்து இரண்யாட்சன் பூமியை அபகரித்து பாதாளத்தில் ஒளிந்துகொள்ள மகாவிஷ்ணு யக்ஞவராக அவதாரம் எடுத்து வதம் செய்து பூமிதேவியைக் காப்பாற்றினார்.

    இரண்யகசிபு கடும் தவத்தை மேற்கொண்டு பரமசிவனிடமிருந்து 50 கோடி ஆட்களையும் தேவர், மானுடர், நீர், அக்னி, விஷம், ஆயுதங்கள் இவைகளாலும் பூமி, ஆகாயம், பகல், இரவு வேளைகளில் சாகா வரம் பெற்றார்.

    பரமேஸ்வரனின் வரத்தால் மூவுலகையும், முனிவர்களையும், தேவர்களையும், மனிதர்களையும் ஆண்ட இரணியன் ஆட்சியில் எவ்வித யாகமும், பஜனைகளும் நடைபெறவில்லை.

    இதனைக் கண்ட தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட அவர் சக்கரத்தாழ்வாரை பிரகலாதனாக, இரணியன் மகனாகப் பிறக்க கட்டளையிட்டார்.

    கருவிலேயே நாரதரால் அனைத்தும் கற்ற பிரகலாதனைத் தக்க வயதில் குருகுலத்திற்கு இரணியன் அனுப்பினான்.

    இரணியன் கட்டளைப்படி 'இரணியாய நமக' என ஆசிரியர் முதலடி போதிக்க அவன் 'ஓம் நமோ நாராயணாய நமக' எனக் கூறினான்.

    பலவகைகளிலும் தண்டித்து முயற்சித்து பார்த்தான் இரணியன்.

    கொடுமையான தண்டனைகள், கொலை முயற்சிகள் கூட பிரகலாதனை புஷ்பங்களாக மாறி தர்மம் மற்றும் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் ஆசிர்வாதம் ஆகியன காத்தன.

    இதனைக்கண்ட இரணியன் பிரகலாதனிடம், நாராயணனை எனக்கு காட்டு' எனக்கூற பிரகலாதன் எங்கும் நிறைந்திருக்கிறான் எனக் கூறினான்.

    அப்பொழுது அங்குள்ள தூணை இரணியன் அடிக்க அங்கிருந்த நரசிம்மமூர்த்தி காட்சியளித்தார்.

    அவன் பெற்ற வரங்கள் மாறுபடாமல் இரணியனைத் தன் சிங்கநகம் போன்ற கூரிய நகத்தால் அவனை அழித்தார்.

    அப்படியும் கோபம் அடங்காத ஸ்ரீ நரசிம்ம அவதார மூர்த்தியான ஸ்ரீமத் நாராயணனை சாந்தப்படுத்த மகாலட்சுமியை தேவர்கள் வேண்ட அவளும் அருகில் செல்ல பயந்தாள்.

    பிரகலாதன் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியை சாந்தமடையச் செய்ய, ஸ்ரீ நரசிம்மர் ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து அருள்பாலித்தார்.

    அவனும் அதுமுதல் பூஜித்து வரலானான்.

    அதுமுதல் மகாலட்சுமி பெருமாளைப் பிரிந்து ஒரு நீர் நிலையருகே பர்ணசாலை அமைத்து பகவானை நோக்கி கடும் தவமியற்றினாள்.

    திரேதா யுகத்தில் ராமவதாரத்தில் ராவணனால் வானர சேனைகளும், ராமரும் மூர்ச்சையடைந்தனர்.

    அப்பொழுது சாம்பவானால் அறிவுறுத்தப்பட்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் இமயமலையை வாயுபகவானின் உதவியுடன் தாண்டி சிரஞ்சீவி மலையை பெயர்த்துவந்து சஞ்சீவி மூலிகைகளால் எழுப்பிவிட்டு பழையபடி சஞ்சீவி மலையை வைத்துவிட்டுத் திரும்பினார்.

    அப்போது நேபாளத்தில் கண்டகி நதியில் ஓர் சாளக்கிராம மலையைப் பார்த்தார்.

    அதில் ஸ்ரீ நரசிம்மர் பாவித்திருப்பதைக் கண்ட அனுமான் சாலிக்கிராம மலையை வழிபாட்டிற்காகப் பெயர்த்தெடுத்து ஆகாய மார்க்கமாக இலங்கை நோக்கி பயணித்தார்.

    சூர்யோதயக் காலம் நெருங்குவதைக் கண்ட அனுமான் அனுஷ்டானம் செய்யத் தீர்மானித்து மகாலட்சுமி தவம் செய்யும் நீர்நிலைகள் அடங்கிய அந்த இடத்தில் வைத்துவிட்டு அனுஷ்டானம் செய்தார்.

    திரும்பி வந்து எடுக்க முயன்ற அனுமனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை.

    அப்பொழுது ஸ்ரீ நரசிம்மமூர்த்தி ஆஞ்சநேயருக்கு அருள்பாலித்து ராமர் கைங்கரியத்தை முடித்து ராமாவதாரத்திற்குப் பின்பு திரேதாயுகத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயரும், கார்கோடகனும் ஆவிர் பவித்து ஸ்ரீ நரசிம்மர் தூணிலும் சாலிக்கிராமத்திலும் இருந்து ஸ்ரீ மகாலட்சுமியின் தவத்திற்காக சாளக்கிராமகிரி ரூபத்தில் இங்கு எடுத்துவந்து ஸ்தாபிக்கப்பட்டார்.

    க்ஷராப்தி நாதர் திருக்கோலத்தில் சேவை சாதிப்பதினாலும் உதரத்திலும் ரட்சிப்பதாலும் இந்த நாமக்கல் நகரம் ஸ்ரீ சைலசேத்திரம் என்றும் ஸ்ரீ சைலகிரி என்றும் கார்கோடகன் நற்கதியடைந்ததால் நாகவனம் என்றும் நாமகிரி என்றும் கூறப்படுகிறது.

    • ஆஞ்சநேயரின் 108 போற்றிகளை துதித்து வணங்கினால் சகல கிரக தோஷங்களும் விலகும்.
    • கோடி புண்ணியம் கிடைக்கும்

    மாதந்தோறும் மூலம் நட்சத்திரம், வாரந்தோறும் சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயரின் 108 போற்றிகளை துதித்து வணங்கினால் சகல கிரக தோஷங்களும் விலகி கோடி புண்ணியம் கிடைக்கும்.

    செல்வ வளந்தரும் ஆஞ்சநேயரின் 108 போற்றி வருமாறு,

    1. ஓம் அனுமனே போற்றி

    2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி

    3. ஓம் அறக்காவலனே போற்றி

    4. ஓம் அவதார புருஷனே போற்றி

    5. ஓம் அறிஞனே போற்றி

    6. ஓம் அடக்கவடிவே போற்றி

    7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி

    8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி

    9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனேபோற்றி

    10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி

    11. ஓம் ஆனந்த வடிவே போற்றி

    12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி

    13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி

    14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி

    15. ஓம் இசை ஞானியே போற்றி

    16. ஓம் இறை வடிவே போற்றி

    17. ஓம் ஒப்பிலானே போற்றி

    18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி

    19. ஓம் கதாயுதனே போற்றி

    20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி

    21. ஓம் களங்கமிலாதவனே போற்றி

    22. ஓம் கர்மயோகியே போற்றி

    23. ஓம் கட்டறுப்பவனே போற்றி

    24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி

    25. ஓம் கடல் தாவியவனே போற்றி

    26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி

    27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி

    28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி

    29. ஓம் கூப்பிய கரனே போற்றி

    30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி

    31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி

    32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி

    33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி

    34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி

    35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி

    36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி

    37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி

    38. ஓம் சீதாராம சேவகனே போற்றி

    39. ஓம் சூராதி சூரனே போற்றி

    40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி

    41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி

    42. ஓம் சூரியனின் சீடனே போற்றி

    43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி

    44. ஓம் சோக நாசகனே போற்றி

    45. ஓம் தவயோகியேபோற்றி

    46. ஓம் தத்துவஞானியே போற்றி

    47. ஓம் தயிரன்னப் பிரியனேபோற்றி

    48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி

    49. ஓம் தீதழிப்பவனே போற்றி

    50. ஓம் தீயும் சுடானே போற்றி

    51. ஓம் நரஹரியானவனே போற்றி

    52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி

    53. ஓம் நாமகிரி காவலனே போற்றி

    54. ஓம் நாமக்கல் ஆஞ்சநேயா போற்றி

    55. ஓம் பண்டிதனே போற்றி

    56. ஓம் பஞ்சமுகனே போற்றி

    57. ஓம் பக்தி வடிவனே போற்றி

    58. ஓம் பக்த ரட்சகனே போற்றி

    59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி

    60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி

    61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி

    62. ஓம் பயம் அறியாதவனே போற்றி

    63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி

    64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி

    65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி

    66. ஓம் பீம சோதரனே போற்றி

    67. ஓம் புலனை வென்றவனே போற்றி

    68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி

    69. ஓம் புண்ணியனே போற்றி

    70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி

    71. ஓம் மதி மந்திரியே போற்றி

    72. ஓம் மனோவேகனே போற்றி

    73. ஓம் மாவீரனே போற்றி

    74. ஓம் மாருதியே போற்றி

    75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி

    76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி

    77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி

    78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி

    79. ஓம் ராமதாசனே போற்றி

    80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி

    81. ஓம் ராமதூதனே போற்றி

    82. ஓம் ராம சோதரனே போற்றி

    83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி

    84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி

    85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி

    86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி

    87. ஓம் ராமாயண நாயகனே போற்றி

    88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி

    89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி

    90. ஓம் ருத்ர வடிவனே போற்றி

    91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி

    92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி

    93. ஓம் லங்கா தகனனே போற்றி

    94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி

    95. ஓம் வஜ்ர தேகனே போற்றி

    96. ஓம் வாயுகுமாரனே போற்றி

    97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி

    98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி

    99. ஓம் விஷ்ணு சொரூபனே போற்றி

    100. ஓம் விளையாடும் வானரனே போற்றி

    101. ஓம் விஸ்வரூபனே போற்றி

    102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனேபோற்றி

    103. ஓம் வித்தையருள்பவனே போற்றி

    104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி

    105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி

    106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி

    107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி

    108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

    ×