search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நரபலி"

    • மகனை காணாமல் தேடிய அவனுடைய தந்தை, கழுத்தறுப்பட்ட நிலையில் அவனை பிணமாக பார்த்து திடுக்கிட்டார்.
    • கட்டுமான தொழிலாளர்கள் தாங்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    புதுடெல்லி:

    பீகாரை சேர்ந்தவர்கள் விஜய்குமார், அமர்குமார். இவர்கள் டெல்லியில் லோதி காலனியில் தங்கி, கட்டுமான தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். அதே இடத்தில் கட்டுமான தொழிலாளியாக உள்ள ஒருவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருந்தான்.

    நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட பிறகு, அந்த சிறுவனை விஜய்குமாரும், அமர்குமாரும் சமையலறை பகுதிக்கு அழைத்தனர். அங்கு வந்த அவனை தலையில் தாக்கினர். பிறகு அவனது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தனர். அப்போது அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தி இருந்தனர்.

    மகனை காணாமல் தேடிய அவனுடைய தந்தை, கழுத்தறுப்பட்ட நிலையில் அவனை பிணமாக பார்த்து திடுக்கிட்டார். அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், விஜய்குமாரும், அமர்குமாரும் கைது செய்யப்பட்டனர்.

    தாங்கள் கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். போதைப்பொருள் சாப்பிட்டவுடன், பணம் குவிக்க நரபலி கொடுக்க வேண்டும் என்ற தவறான நம்பிக்கை உண்டாகி, இந்த கொலையை செய்ததாக அவர்கள் கூறினர்.

    • புணர்விகாவிற்கு அவரது தாய் மஞ்சள் நீர் ஊற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மகள் புணர்விகா (வயது 3). வேணுகோபால் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார்.

    வேணுகோபாலுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டதால் மந்திரவாதி ஒருவர் கூறியதின் பேரில் புணர்விகாவை நேற்று முன்தினம் இரவு நரபலி கொடுக்க முடிவு செய்தார்.

    அதன்படி இரவு 11 மணி அளவில் புணர்விகாவிற்கு அவரது தாய் மஞ்சள் நீர் ஊற்றி வாயில் குங்குமத்தை திணித்து பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் சிறுமியின் கை கால்களை கட்டி நரபலி கொடுக்க முயன்றனர்.

    இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த புணர்விகா கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பெற்றோரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.

    வேணுகோபாலை அங்குள்ள கட்டிலில் கட்டி அறையில் போட்டு பூட்டினர். இதுகுறித்து அத்மகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு புணர்விகா பரிதாபமாக இறந்தார்.

    வாயில் குங்குமம் திணிக்கப்பட்டதால் அவர் மூச்சு திணறி இறந்துள்ளார்.

    இதுகுறித்து போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×