search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நன்றி"

    • 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 1.1.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
    • அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கத்தின் பல்வேறு சங்க நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 1.1.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    இந்த அகவிலைப்படி உயர்வால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுகிறார்கள். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் தி.மு.க. அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

    அகவிலைப்படி உயர்வை அறிவித்ததையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கத்தின் பல்வேறு சங்க நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

    • நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார்.
    • எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு இணையாக பல்வேறு மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறார்.

    இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் தனது கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைத்துள்ளதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே நம் இலக்கு என்று குறிப்பிட்டிருந்தார். இவருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,

    திரைத்துறை நண்பர்கள், பாசத்திற்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் அனைவரும் நன்றி எனவும், எனது நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு தனது அரசியல் பயணத்தை தொடங்கி உள்ளதாக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

    வாழ்த்து தெரிவித்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

    • 63-வது வார்டு வார்டு சபை கூட்டத்தில் தீர்மானம்
    • பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு

    கோவை.

    கோவை மாநகராட்சி 63-வது வார்டில் நாகப்பன் தேவர் வீதியில் வார்டு சபை கூட்டம் கவுன்சிலர், பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து மனுக்களை அளித்தனர்.

    மேலும் மக்களின் அடிப்படை பிரச்சனை களான சாலை, குடிநீர், ஆழ்குழாய் கிணறு நீர், தினசரி குப்பைகள் சேகரித்தல் உள்ளிட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மக்களின் குறைகளை உடன டியாக மத்திய மண்டல உதவ ஆணையாளர்,மண்டல சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்,சுகாதார மேற்பார்வையாளர்களிடம் எடுத்து கூறி உடனடியாக தீர்வு காண அறிவுறுத்தினார்.

    மேலும் மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை எடுத்துக்கொண்டு மத்திய மண்டல அலுவலகத்தில் உள்ள குறைதீர் மையத்தை அனுகினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமை தொகை வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    இந்த வார்டு சபை கூட்டத்தில் மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் மு.மா.ச.முருகன்,வெ.நா.உதயகுமார்,வார்டு செயலாளர் சண்முக சுந்தரம்,விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன் அணி கோவை மாநகர் மாவட்ட துணை அமைப்பாளர் உதயகுமார், முன்னாள் வட்ட பொறுப்பாளர் திரு செந்தில் குமார், பூத் கமிட்டி நிர்வாகிகள் பழனிசாமி,வசந்தகுமார், சன் செந்தில், சித்தி விநாயகர் கோயில் அறங்காவல் தலைவர் தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

    • வறட்சி நிவாரணம் அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
    • யூனியன் மானேஜர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம் யூனியன் சேர்மன் சன்முகப் பிரியா ராஜேஷ் தலைமை யில் வட்டார வளர்ச்சி அலு வலர் அன்புக்கண்ணன் (கிராம ஊராட்சிகள்) ஆணையாளர் ஜானகி ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது. யூனியன் மானே ஜர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார். மொத்தம் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    கவுன்சிலர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:- லட்சுமி (தி.மு.க.):- கீழத்தூவல் கண்மாயை தூர்வார வேண்டும்.

    சசிகலா(அ.தி.மு.க.):- எஸ்.ஆர்.என்.பழங்குளம் கிராமத்தில் சத்துணவு கூடம் இடிந்து கிடக்கிறது. புதிதாக சத்துணவுகூடம் கட்டித்தர வேண்டும். காமாட்சிபுரத்திலிருந்து சடையனேரி செல்லும் சாலையை தார்சாலையாக மாற்றித் தரவேண்டும்.

    அர்ச்சுனன் (வளநாடு, அ.தி.மு.க.):- மட்டியரேந்தல், தாழியரேந்தல் கிராமத்திற்கு ஒரே ஒரு நாள் மட்டுமே மக்கள் போராட்டம் நடத்திய போது குடிநீர் வந்தன. அதன் பின்பு காவிரி கூட்டு குடிநீர் வரவில்லை. மக்களுக்கு முறையாக குடிநீர் கிைடக்கிறதா? என பார்வையிட குடிநீர் வாரிய அதிகாரிகள் வருவதில்லை. மக்கள் கவுன்சிலரிடம் புகார் செய்கிறார்கள். நாங்கள் ஆைணயாளரிடம் புகார் செய்தால் எந்த நடவடிக்கையும் எடுப்ப தில்லை. செலவை அங்கீக ரிக்கவே கூட்டம் நடத்து கிறீர்கள்.

    சண்முகப்பிரியா ராஜேஷ் (சேர்மன்):- ராமநாதபுரம் மாவட்ட வறட்சி நிவாரணத்திற்கு ஏக்கருக்கு ரூ.5400 அறிவித்த முதல்-அமைச்சருக்கும், வறட்சி நிவாரணம் வழங்க கோரி சட்டமன்றத்தில் குரல் கொடுத்த காதர் பாட்சா முத்துராமலிங்கத் திற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    • நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஆய்வு செய்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.
    • எம்.எல்.ஏ., மேயர், எம்.பி., அமைச்சர், முதல்-அமைச்சர் ஆகியோருக்கும், தமிழக அரசுக்கும் வார்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு காயிதே மில்லத் நகரில் மாநகராட்சியின் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க முற்பட்டபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திட்டம் நிறுத்தப்பட்டது. மேலும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஆய்வு செய்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.

    இந்தநிலையில் அனைத்து இஸ்லாமிய குழு தலைவர் ஷாஜகான் நிருபர்களிடம் கூறும்போது, காயிதேமில்லத் நகர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க கடந்த 6 மாதமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். மேயர், எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியோரிடம் முறையிடப்பட்டது. முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, காயிதேமில்லத் நகர் பகுதிக்கு வந்து முஸ்லிம் மக்களிடம் விவரங்களை கேட்டார். வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக வைத்த கோரிக்கையை ஏற்று, கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

    இதற்காக எம்.எல்.ஏ., மேயர், எம்.பி., அமைச்சர், முதல்-அமைச்சர் ஆகியோருக்கும், தமிழக அரசுக்கும் வார்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். இதில் முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் சிவகாசியில் நின்று செல்ல போராடிய அனைவருக்கும் மாணிக்கம் தாகூர் எம்.பி. நன்றி தெரிவித்தார்.
    • சிவகாசி மக்களுக்கும், மதுரை எம்.பி. வெங்கடேசன், வைகோவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் எண்.16101 சிவகாசியில் நின்று செல்ல வேண்டும் என்று 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் ரெயில்வே மந்திரியிடம் கடிதம் மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் கொடுத்தார்.

    அதன் பின் கடந்த செப்டம்பர் 2022-ல் மதுரை எம்.பி. ரெயில் மறியல் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். மேலும் இது குறித்து தென்னக ரெயில்வே ஆேலாசனை கூட்டத்திலும் வைகோவுடன் இணைந்து வலியுறுத்தினார்.

    இந்நிலையில் தற்போது சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் சிவகாசியில் நின்று செல்லும் ரெயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. தன்னுடன் போராடிய சிவகாசி மக்களுக்கும், மதுரை எம்.பி. வெங்கடேசன், வைகோவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    மேலும், இது தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மத்திய ரெயில்வே மந்திரிக்கு ஒரு கடிதம் மட்டும் எழுதிவிட்டுதான் இதற்கு ஏற்பாடு செய்ததாக கூறுவது ஏற்புடையதல்ல என்றும் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.

    • குமரி மாவட்ட 4 வழிச்சாலைக்கு நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தார்
    • முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை

    கன்னியாகுமாரி:

    முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குமரி மாவட்டத்தில் பல்வேறு சாலைத் திட்டப் பணிகள், நான் பாராளு மன்ற உறுப்பினராக இருந்த போது பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டலில் மத்திய சாலை போக்கு வரத்து மந்திரி நிதின் கட்கரி ஒப்புதல் மற்றும் உறுதுணையுடன் நிறைவேற்றப்பட்டது.

    அந்த வகையில் எனது வேண்டுகோளை ஏற்று கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை யிலான 4 வழிச்சாலையில் சிறியதும், பெரியதுமாக 48 பாலங்கள் கட்ட மத்திய நெடுஞ்சாலைப் போக்கு வரத்து துறை ரூ.1141.78 கோடி நிதியை ஒதுக்கியது.

    இதனால் குமரி மாவட்ட வளர்ச்சிக்கு என்றும் தனது முழு ஒத்துழைப்பை நல்கும் நிதின் கட்கரியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்தேன்.

    நான் இன்று பாராளு மன்ற உறுப்பினராக இல்லாமல் இருந்தாலும் எனது முயற்சியில் கொண்டு வந்த திட்டம் தொய்வின்றி தொடர்ந்து நடந்திட அவ்வப்போது கோரிக்கைகள் வைக்கும் போது, முழு ஆதரவை தரும் நிதின் கட்கரிக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரி விப்பது எனது கடமை யாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இத்திட்டம் நீலகிரி மாவட்டத்தில் 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 3 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியார் மருத்துவ மனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விபத்தினால் ஏற்படும் உயிர்சேதங்களை தவிர்க்கும் பொருட்டு இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

    ஊட்டி,

    இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டம், நீலகிரி மாவட்டத்தில் 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 3 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியார் மருத்துவ மனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் 787 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 மணி நேர திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற குமார் கூறியதாவது:-

    என் பெயர் குமார் (வயது 24). என் தகப்பனார் பெயர் தயாளன், நாங்கள் கேத்தி பாலாடா அருகே வசித்து வருகிறோம். நான் 05.05.2023 அன்று மோட்டார் சைக்கிளில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

    உடனே என்னை ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி அழைத்து சென்று இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 நேரம் திட்டத்தின் கீழ் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். இதுபோன்ற திட்டத்தினை அறிவித்த முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றி. இவ்வாறு தெரிவித்தார்.

    இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற அருண் பிரசாத் கூறியதாவது:-

    என் பெயர். அருண் பிரசாத் எனக்கு 30 வயதாகிறது. என் தகப்பனார் பெயர் செல்வராஜ். நான் 16.04.2023 அன்று, கல்லட்டி அருகே உள்ள பைசன் வியூ பாயிண்டில் எனது நான்கு சக்கர வாகனத்தில் சென்ற போது திடீரெனெ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் நான் காயம் அடைந்தேன்.

    உடனே ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி அழைத்து சென்று நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டத்தின் கீழ் போதிய சிகிச்சை அளிக்கப் பட்டது.

    தற்போது சிகிச்சைக்கு பின் நான் நலமாக உள்ளேன். திடீரென ஏற்படும் விபத்துக்களை சாதாரணமாக என்னாமல் உயிர் சேதத்தினை தவிர்க்கும் வகையில், உயிர்காக்கும் நோக்கத்தில் இதுபோன்ற திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போதைய காலத்தில் வாகனம் இல்லாமல் பயணிப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். இது போன்ற சூழ்நிலையில், விபத்தினால் ஏற்படும் உயிர்சேதங்களை தவிர்க்கும் பொருட்டு இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசிற்கு நீலகிரி மாவட்ட மக்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    • நாகையில் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.
    • முதல்- அமைச்சர், நகராட்சி நிர்வாகம், அமைச்சர் கே.என். நேரு ஆகியோருக்கு நன்றி.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

    இது குறித்து ஷாநவாஸ் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் இது குறித்து பேசியதோடு, அமைச்சரிடமும் வலியுறுத்தி வந்தேன்.

    இந்நிலையில் தமிழக முதலமைச்சரிடம் வழங்கப்பட்ட 10 முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இதை எழுதிக் கொடுத்தேன்.

    நமது தொடர் முயற்சியின் விளைவாக, சட்டமன்றப் பேரவையில் 30-ந்தேதி நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையின் போது, அமைச்சர் கே.என்.நேரு நாகப்பட்டினத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு செய்தார்.

    இதைத் தொடர்ந்து முதலமைச்சர், நகராட்சி நிர்வாகம் அமைச்சர் கே.என். நேரு ஆகியோருக்குஷா நவாஸ் எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

    • கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தின் அளவு உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • இந்த அறிவிப்பு காரணமாக 1.60 லட்சம் விசைத்தறியாளர்கள் பயனடைவார்கள்.

    ஈரோடு:

    விசைத்தறிக்கான இலவச மின்சாரத்தின் அளவு 750 யூனிட்டில் இருந்து 1000 யூனிட்டாக உயர்த்தி அரசாணை பிறப்பி க்கப்பட்டுள்ளது. இதற்கு விசைத்தறி யாளர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறியாளர்கள் கூட்டமைப்பின் அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது விசைத்தறிக்கான இலவச மின்சாரத்தின் அளவு 1000 யூனிட்டாக உயர்த்தப்படும் என தி.மு.க. வாக்குறுதி அளித்தது.

    இதை நிறைவேற்ற வேண்டும். மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என எங்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்து இருந்தோம்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போதும் இந்த கோரிக்கையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரிடம் வலியுறுத்தி இருந்தோம்.

    இடைத்தேர்தல் முடிந்ததும் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என அவர்களும் உறுதி அளித்திருந்தனர்.

    அதன்படி விசைத்தறி க்கான இலவச மின்சாரத்தின் அளவு 750 யூனிட்டில் இருந்து ஆயிரம் யூனிட்டா கவும், கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தின் அளவு 200 யூனிட்டில் இருந்து 300 யூனிட்டாகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் எங்களது கோரிக்கையை ஏற்று ஆயிரம் முதல் 1500 யூனிட் வரையிலான மின் கட்டணத்தில் 35 பைசாவும், 1500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 70 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான மானியத்தை அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பு காரணமாக 1.60 லட்சம் மின் இணைப்புகள் உள்ள நிலையில் விசைத்தறி யாளர்கள் பயனடைவார்கள்.

    விசைத்தறியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துசாமி, சாமிநாதன், ஈஸ்வரன் எம்.எல்.ஏ ஆகியோருக்கு விசைத்தறியாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விஜய்வசந்த் எம்.பி. அறிக்கை வெளியீடு
    • ராகுல்காந்தி கன்னி யாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    நாகர்கோவில்:

    விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்தியாவில் ஒற்றுமையை நிலை நிறுத்த வும், இந்திய மக்களை ஒருங்கிணைக்கவும் தலை வர் ராகுல்காந்தி கன்னி யாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற் கொண்டு உள்ளார்.

    7-ந்தேதி பொதுக்கூட்டத் துடன் குமரியில் தொடங்கிய பயணம் 8,9,10 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு முனை முதல் மறுமுனை வரை வெகு சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் பங்கெடுத்த இந்த பயணம் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும், நமது மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தது.

    இந்த சரித்திர நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற உறுதுணையாக இருந்த தமிழகத்தை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    என்னோடு தோளோடு தோள் நின்று அனைத்து ஒத்துழைப்பும் தந்த குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், விஜயதரணி, மாவட்ட தலைவர்கள் கே.டி. உதயம், டாக்டர் பினுலால்சிங், நவீன்குமார், வட்டார, நகர, பஞ்சாயத்து தலைவர்கள், துணை அமைப்பு தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    மேலும் அனைத்து ஒத்துழைப்பும் அளித்த போலீஸ் அதிகாரிகள், போலீசார், மாவட்ட நிர்வாகம், மாநகர, நகர பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் ராகுல்காந்தியை பெருந்திரளாக கூடி வரவேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×