search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் இடமாற்றம்: தமிழக அரசுக்கு முஸ்லிம் மக்கள் நன்றி
    X

    கோப்பு படம்

    கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் இடமாற்றம்: தமிழக அரசுக்கு முஸ்லிம் மக்கள் நன்றி

    • நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஆய்வு செய்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.
    • எம்.எல்.ஏ., மேயர், எம்.பி., அமைச்சர், முதல்-அமைச்சர் ஆகியோருக்கும், தமிழக அரசுக்கும் வார்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 45-வது வார்டு காயிதே மில்லத் நகரில் மாநகராட்சியின் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க முற்பட்டபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திட்டம் நிறுத்தப்பட்டது. மேலும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சம்பந்தப்பட்ட பகுதிக்கு ஆய்வு செய்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.

    இந்தநிலையில் அனைத்து இஸ்லாமிய குழு தலைவர் ஷாஜகான் நிருபர்களிடம் கூறும்போது, காயிதேமில்லத் நகர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க கடந்த 6 மாதமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். மேயர், எம்.எல்.ஏ., எம்.பி. ஆகியோரிடம் முறையிடப்பட்டது. முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, காயிதேமில்லத் நகர் பகுதிக்கு வந்து முஸ்லிம் மக்களிடம் விவரங்களை கேட்டார். வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக வைத்த கோரிக்கையை ஏற்று, கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

    இதற்காக எம்.எல்.ஏ., மேயர், எம்.பி., அமைச்சர், முதல்-அமைச்சர் ஆகியோருக்கும், தமிழக அரசுக்கும் வார்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். இதில் முஸ்லிம் அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×