search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடைப்பயிற்சி"

    • நடைப்பயிற்சியை மிதமாகத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரியுங்கள்.
    • கரடுமுரடான ஓடுதளத்தைத் தவிர்த்துவிடுங்கள்.

    • சரியான நிலையில் நடப்பது மிகவும் அவசியம். தலையைத் தாழ்த்தியபடி முன்னோக்கிச் சாய்ந்தபடி நடப்பதால், கழுத்து வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி ஏற்படலாம். எனவே, முதுகை வளைக்காமல், நடக்கும்போதும் ஓடும்போதும் நேராக இருங்கள். முதுகின் இயல்பான தன்மையைப் பின்பற்றுங்கள்.

    • வயிற்றை உள்ளிழுத்தபடி பயிற்சியில் ஈடுபடுங்கள். கால்கள் நடப்பதற்கு ஏற்ப நம் உடலை பேலன்ஸ் செய்யும் வகையில் கைகள் அசைகின்றன. இதனால் வேகமாக நடக்கலாம். கைகள் அசைக்காமல் நடக்கும்போது, அது முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, தாராளமாகக் கைகளை வீசி நடைபோடுங்கள்.

    வாக்கிங்... ஜாகிங்...

    • சம தளத்தில் பயிற்சியில் ஈடுபடுங்கள். கரடுமுரடான ஓடுதளத்தைத் தவிர்த்துவிடுங்கள்.

    • ஒரே இடத்தில் நடைப்பயிற்சி செய்யாமல், அவ்வப்போது நடக்கும் இடத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

    • நடைப்பயிற்சியை மிதமாகத் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரியுங்கள். அதேபோல முடிக்கும்போது வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துப் பயிற்சியை முடியுங்கள்.

    • ஆண்களை விட, பெண்கள் உடலில்தான் கொழுப்பு அதிகம் சேருகிறது.
    • 35 வயதைத் தாண்டிய பெண்கள், கண்டிப்பாக ஜாகிங் செய்ய வேண்டும்.

    உடல் பயிற்சிக்காக ஓடுபவர்கள், ஓடும் விதத்தைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, ஓடும் தூரத்தைப் பார்க்கக் கூடாது. தொடர்ந்து நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபடும்போது சோர்வு, வலி ஏற்படும். இதனால் பயிற்சியில் ஈடுபடுவதற்கான மனநிலை பாதிக்கப்படும். எனவே, பயிற்சிக்கு இடையே அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்

    • ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு உடலை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

    • இதயம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் நடைப்பயிற்சி செய்வதே போதுமானது. மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு ஓடுவது நல்லது.

    • நடைப்பயிற்சியில், ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுபவர்கள் பருத்தி மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. இதனால் உடலின் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.

    • சிந்தடிக் ஆடைகளை அணிந்து ஓடுவதால் வியர்வை நம் உடலின் மேற்பரப்பில் தேங்கும். உடல் குளிர்ச்சியாக இருப்பதுடன், உடல் வெப்பமடைவதை இது தவிர்க்கும்.

    • சாலை ஓரத்தில் பயிற்சியில் ஈடுபடுபவர், ஒளிரும் தன்மைகொண்ட ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும்.

    • காலுக்குப் பொருத்தமான, எடை குறைந்த காலணிகளை அணிந்து பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. மிகவும் இறுக்கமான காலணி அணிந்துகொண்டு நடைப்பயிற்சி செய்வது வலியை ஏற்படுத்தும்.

    • புதிதாக ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இரண்டு நிமிடம் ஓட்டம், ஒரு நிமிடம் நடைப்பயிற்சி என்று மாற்றிமாற்றிச் செய்ய வேண்டும். இதனால், இதயத்துக்கு அதிக சிரமம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

    ஜாகிங் பயன்கள்

    ஆண்களை விட, பெண்கள் உடலில்தான் கொழுப்பு அதிகம் சேருகிறது. 35 வயதைத் தாண்டிய பெண்கள், கண்டிப்பாக ஜாகிங் செய்ய வேண்டும். தேவை இல்லாத கொழுப்புகள் குறையும். ரத்த ஓட்டம் சீராகும். நாள் முழுக்கத் துடிப்புடன் செயல்பட முடியும். உயர் ரத்த அழுத்தம் குறையும். சர்க்கரையின் அளவு குறையும். எலும்பின் அடர்த்தி அதிகமாவதுடன் தசைகள் வலுவாகும்.

    ஓடுவதால் எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கிறதோ, அதேபோல் முறையாக ஓடவில்லை என்றால் பாதிப்புகளும் வரும். ஓட்டப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு 'ரன்னர்ஸ் நீ' (runners knee) என்ற பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எடுத்த எடுப்பிலேயே மிகக் கடுமையாக ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதால் இது ஏற்படுகிறது. இதனால், மூட்டில் உள்ள குருத்தெலும்பு தேய்ந்து வலி ஏற்படும். ஆரம்பத்தில் இந்த வலியை உணர முடியாது. மாடிப்படிகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் நாற்காலியில் அதிக நேரம் உட்காரும்போதும் இந்தப் பாதிப்பை உணரலாம். எனவே, அதிக ஆர்வத்தில் கால்களுக்கு அதிக பளுவைக் கொடுக்கக் கூடாது.

    • ஓடும் முறைகளிலேயே, சில வித்தியாசங்கள் இருக்கின்றன.
    • ஜாக்கிங், ரன்னிங், ஸ்பிரின்டிங்... மூன்றுக்குமான வித்தியாசங்களை தெரிந்து கொள்வோமா...?

    உடற்பயிற்சிக்காக சிலர் நடக்கிறார்கள். சிலர் ஓடுகிறார்கள். வாக்கிங் மற்றும் ஜாக்கிங் இவை இரண்டிற்கும் நமக்கு வித்தியாசம் தெரியும். ஆனால் ஓடும் முறைகளிலேயே, சில வித்தியாசங்கள் இருக்கின்றன. ஜாக்கிங், ரன்னிங், ஸ்பிரின்டிங்... இப்படி மூன்று பெயர்களில் அழைக்கிறார்கள். இவை மூன்றுக்குமான வித்தியாசங்களை தெரிந்து கொள்வோமா...?

    ஜாக்கிங் : ஜாக்கிங் என்பது வேக நடை. இதில் ஓடுவதற்கு பதிலாக வேகமாக நடக்கிறோம். மற்றவற்றை ஒப்பிடும்போது, இது குறைவான ஆற்றல் கொண்ட உடற்பயிற்சி. எப்பொழுது நீங்கள் ஜாக்கிங் செல்கிறீர்களோ அப்பொழுது உங்களது வேக அளவு ஒரு மைல் தூரத்திற்கு 10 நிமிடம் என்ற கணக்கில் இருக்கும். உங்களது வேகம் அதை விட அதிகமானால், அது 'ரன்னிங்' பயிற்சியாகிவிடும். அதனால் மிதமான வேகத்தை பராமரிக்க வேண்டும். மேலும் ஜாக்கிங் செய்யும்போது நீங்கள் சீராக சுவாசிப்பதும் அவசியம். அப்போதுதான், இதயத்துடிப்பு சாதாரணமாக இருக்கும். அதிக தொலைவிற்கு ஜாக்கிங் செய்ய உதவும். உடலில் கார்டிசால் அளவை ஜாக்கிங் குறைக்கும். மேலும் இதய ஆரோக்கியத்திற்கு இது சிறந்ததாகும்.

    ரன்னிங் : இது ஓட்டப்பயிற்சி. உங்கள் உடலின் இயல்பான வேகத்தில் ஓடுவதுதான் ரன்னிங். இது ஜாக்கிங்கை விட இருமடங்கு ஆற்றல் கொண்ட உடற்பயிற்சி. அதனால் அதிக கலோரிகளை எரிக்க முடியும். ஆனால் ஜாக்கிங்கைவிட, ரன்னிங் பயிற்சிக்கு அதிக ஆற்றலும், வெகுநாள் பயிற்சியும் அவசியம். உங்களது கால் களின் உறுதிக்கு ரன்னிங் உதவியாக இருக்கும். மேலும் இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாக அமையும்.

    * ஸ்பிரின்டிங் : தன் இயல்பான ஓட்டத்திறனைவிட, சற்று வேகமாக ஓடுவதுதான் ஸ்பிரின்டிங். இதில் தனது வழக்கமான ஓட்ட வேகத்தை விட அதிகபட்ச வேகத்தை சீராக பராமரிக்க வேண்டும். மேலும் ஸ்பிரின்டிங்கில் செயல்பட அதிக ஆற்றல் தேவைப்படும். இது குறைந்த தூரத்தை வேகமாக கடக்க உதவும். இந்த உடற்பயிற்சியானது அதிகபட்ச கலோரிகளை எரிக்கவும், நுரையீரலின் செயல்பாட்டை அதிகப் படுத்தவும் உதவும். ஸ்பிரின்டிங் இளைஞர்களின் எடை குறைப்பு முயற்சியை விரைவாக செயல்படுத்த சிறந்ததாகும்.

    • நடக்கும் பழக்கத்தை பின்பற்றுவது உடல் நலத்திற்கு அவசியமானது.
    • நடப்பதால் கிடைக்கும் நன்மைகளை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

    தினமும் காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்ள நேரம் ஒதுக்க முடியாவிட்டாலும் சிறிது தூரம் நடக்கும் பழக்கத்தை பின்பற்றுவது உடல் நலத்திற்கு அவசியமானது. நடப்பதால் கிடைக்கும் நன்மைகளை பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

    சமீபத்திய ஆய்வு முடிவின்படி ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அடிகள் நடப்பது புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். முதுமையை தள்ளிப்போடும். திடீர் இறப்பு அபாயத்தை தடுக்கும் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆய்வு முடிவு ஜமா இன்டர்னல் மெடிசின் மற்றும் ஜமா நியூராலஜி இதழில் வெளியிடப்பட்டது.

    40 முதல் 79 வயதுக்குட்பட்ட 78 ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் புற்றுநோய், டிமென்ஷியா உள்ளிட்ட எந்தவொரு நோய் பாதிப்புக்கும் ஆளாகாதவர்கள். அவர்கள் அனைவரும் தினமும் 10 ஆயிரம் அடி தூரம் நடக்க வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வேகமாக நடப்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டது.

    தெற்கு டென்மார்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இணை பேராசிரியர் போர்ஜா டெல் போசோ க்ரூஸ், ''ஒரு நாளைக்கு 3,800 அடிகள் நடப்பது கூட டிமென்ஷியா அபாயத்தை 25 சதவிகிதம் குறைக்க உதவும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது'' என்றார். ஒரு நாளைக்கு 10 ஆயிரம் அடிகள் நடப்பதன் மூலம் 8 முதல் 11 சதவீதம் வரை அகால மரணம் அடையும் அபாயத்தை குறைக்கலாம் என்பதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    • முட்டி வலியைக் குறைக்கிறது.
    • இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்ள உதவுகிறது.

    பின்னோக்கி நடப்பதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமான சில:

    உடலின் சமநிலை மேம்படுகிறது.

    முன்னால் நடக்கும் போது அதிகமாகப் பயன்படுத்தப்படாத தசைகள் பின்னோக்கி நடைப்பயிற்சி செய்யும் போது பயன்படுத்தப்படுகின்றன. Rectus femoris மற்றும் vastus medialis ஆகிய தொடை தசைகள் முன்னால் நடப்பதை விட பின்னால் நடக்கும் போது கூடுதலாக இயக்கப் பெறுகிறது என்று ஆய்வு ஒன்று அறிவிக்கிறது. மேலும் கணுக்கால் தசைகளிலும் அதிக இயக்கம் இருப்பதாகவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

    உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது.

    ஆற்றலை அதிகரிக்கிறது.

    இருதய நலனை மேம்படுத்துகிறது.

    வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

    முன்னோக்கி நடப்பதன் மூலம் எரிக்கும் கலோரிகளை விட அதிகக் கலோரிகளை பின்னோக்கிய நடைப்பயிற்சி எரிக்கிறது.

    முட்டி வலியைக் குறைக்கிறது.

    அடி முதுகு வலியைப் போக்குகிறது.

    இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்ள உதவுகிறது.

    மூளையின் ஆற்றலை மேம்படுத்துகிறது. அறிவுத்திறனை வளர்ப்பதாக ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இக்கட்டான சூழலில் பின்னோக்கி நடத்தல் சூழ்நிலையில் தெளிவைப் பெறவும் இக்கட்டிலிருந்து விடுபட வழி கண்டுபிடிக்கவும் உதவுவதாக ஆய்வு அறிவிக்கிறது.

    மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

    • பின்னோக்கி நடத்தல் அற்புதமான பலன்களைத் தரும் ஒரு பயிற்சி.
    • 100 அடிகள் பின்னோக்கி நடப்பது 1000 அடிகள் முன்னோக்கி நடப்பதற்கு சமமானது.

    தினமும் ஒரே விதமாக நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்போது சிலர்க்கு சலிப்பு ஏற்படும் அதை தவிர்க்க வாரத்தில் சில நாட்கள் பின்னோக்கி நடைப்பயிற்சியோ, ஜாக்கிங்கோ செய்யலாம். அவைகளை 20 நிமிடங்கள் செய்தால் கூட போதுமானது. அந்த பயிற்சிகளில் உடலுக்கும், மனதுக்கும் நலம் சேர்க்கும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்வது பெரும்பாலானோரின் அன்றாட வழக்கமாக இருக்கிறது

    பின்னோக்கி நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் இயக்கங்கள் ஒருங்கிணைப்புடன் நடைபெறும். அதனால் உடல் நலம் பெரும். ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தவும் உதவும். இரவில் சுழற்சி அடிப்படையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தூக்கம் சீராக வரும். சிந்தனை திறனை மேம்படுத்தும். மனதில் நல்ல யோசனைகள் உதிர்க்க உதவும். பார்வை திறனை மேம்படுத்த துணைபுரியும்.

    பின்னோக்கி நடைபயிலும்போது கால் தசைகளின் வலிமை அதிகரிக்கும். முழங்கால் காயங்களால் அவதிப்படுபவர்கள் பின்னோக்கி நடைபயிற்சி மேற்க்கொள்வது நல்லது. விரைவில் காயங்கள் குணமாகும். நடைப்பயிற்சியை முறையாக மேற்கொள்ளுவதற்கும் வழிவகை செய்யும். உடல் சமநிலையில் இருக்கவும் உதவி புரியும் அதிக கலோரிகளை எரிக்கவும் உதவும். உடல் எடையை சீராக பராமரிக்கவும் பின்னோக்கி நடை பயில்வது பயனளிக்கும்.

    எலும்புகளும், தசைகளும் வழு பெறுவதற்கு பின்னோக்கி நடப்பது நல்லது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும். வீட்டிலேயே பின்னோக்கி நடைபயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்கள் டிரெட்மில் பயன்படுத்தலாம். அதில் சவுகரியமாகவும், பாதுகாப்பாகவும் அமையும். முதலில் டிரெட்மில்லில் மெதுவாக நடக்க தொடங்கி பின்னர் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும்.

    நடைப்பயிற்சிக்கான பொது இடங்கள் மற்றும் பூங்காக்களில் செய்யும் போது சவால் பல மடங்கு கூடுதலாக இருக்கும். பலன்களும் கூட. ஏனெனில் வீட்டு மொட்டை மாடியில் நாம் வேறு யாரையும் கவனிக்க வேண்டியதில்லை. சாலையில் பயிலும் போது சக நடைப்பயிற்சியாளர்கள் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு பயிலும் போது co-ordination நன்கு அதிகரிக்கிறது. தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது.

    • சீக்கிரம் சோர்வடைய செய்யாத உடற்பயிற்சிகளுள் நடைப் பயிற்சி முக்கியமானதாகும்.
    • நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பல உடல்நலப் பிரச்சினைகளை குறைக்கலாம்.

    காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கத்தை பலரும் பின்பற்று கிறார்கள். இதனை உடற்பயிற்சியாகத்தான் கருத வேண்டும் என்றில்லை. காலை பொழுதில் சிறிது தூரம் நடந்து சென்று வரும் வழக்கத்தை தினமும் பின்பற்றி வந்தால் உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாக ஏராளமான நன்மைகளை பெறலாம். பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளில் இருந்தும் விலகி இருக்கலாம். அதிகாலை வேளையில் ஏன் நடைப்பயிற்சி அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.

    சீக்கிரம் சோர்வடைய செய்யாத உடற்பயிற்சிகளுள் நடைப் பயிற்சி முக்கியமானதாகும். உடலின் ஆற்றல் அளவை அதிகப் படுத்தவும் உதவும். நடைப்பயிற்சியின்போது உடல் தொடர்ச்சியான இயக்கத்தில் இருப்பதால் செல்கள் வழக்கத்தை விட அதிக ஆற்றலை உற்பத்தி செய்யும். அதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அதிகரிக்கும். வீட்டிற்குள் அங்கும் இங்கும் 10 நிமிடங்கள் நடப்பது, நடைப்பயிற்சியில் சேராது. சரியான நடைப்பயிற்சி என்பது பூங்காவிலோ, தெருவிலோ குறைந்தபட்சம் 20 முதல் 30 நிமிடங்கள் நடப்பதாகும். தூக்கம் வராமல் தவிப்பவர்கள் 10 நிமிடங்கள் படிக்கட்டுகளில் நடப்பது அதிக ஆற்றலை தரும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து வேலை செய்வதும், அதே வழக்கத்தை ஒவ்வொரு நாளும் பின்பற்றுவதும் மனச்சோர்வடையச் செய்யலாம். காலையில் நடப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதோடு மனநிலையையும் மேம்படுத்தக்கூடியது. ஏனென்றால், நடைப்பயிற்சி ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் வேலை கொடுக்கிறது. அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. நேர்மறையான மன நிலையை உண்டாக்குகிறது. சுய மரியாதையை மேம்படுத்துதல், பதற்றத்தை குறைத்தல், மனச்சோர்வை குறைத்தல், நேர்மறை எண்ணத்தை உருவாக்குதல், மனநலப் பிரச்சினைகளை குறைத்தல் போன்ற சிறப்பம்சங்களும் நடைப்பயிற்சிக்கு உண்டு. தினமும் காலையில் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது நடக்க வேண்டும்.

    காலையில் நடைப்பயிற்சி செய்வது உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளில் பெரும் பகுதியை ஈடு செய்துவிடும். காலை வேளையில் 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்கலாம். இதய பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் குறையும். ஒரு நாளைக்கு குறைந்தது 150 முதல் 300 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்றும், வாரத்தில் 7 நாட்களில் குறைந்தது 5 நாட்களாவது காலையில் நடக்க முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

    காலையில் நடைப்பயிற்சி செய்வது கலோரிகளை எரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவும். காலை பொழுதில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால், சுமார் 400 கலோரிகளை எரிக்கலாம். இது நடையின் வேகத்தைப் பொறுத்ததும், ஒவ்வொரு நபரின் ஆரோக்கியத்தை பொறுத்தும் மாறுபடும். காலையில் வயிறு காலியாக இருப்பதாலும், அந்த சமயத்தில் ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக உடலில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்படுவதாலும் நடைப்பயிற்சி செய்வது மிகவும் நன்மை பயக்கும்.

    காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பல உடல்நலப் பிரச்சினைகளை குறைக்கலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அதிகாலை நடைப்பயிற்சி சிறந்தது. இது பல்வேறு வைரஸ், பாக்டீரியா தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்க உதவும். சுவாச திறனை மேம்படுத்தவும் வழிவகுக்கும். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் நடத்திய ஆய்வின்படி, தினமும் 30 நிமிடங்கள் நடக்க ஆரம்பித்தால், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் அபாயத்தை 19 சதவீதம் குறைக்கலாம்.

    உடலில் ரத்த சர்க்கரை அளவை நிர்வகித்து, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் நடைப்பயிற்சி உதவும். நீண்ட நேரம் காலை நேர நடைப்பயிற்சி மேற்கொள்வது சில வகையான புற்றுநோய் களின் அபாயத்தில் இருந்தும் காக்கும்.

    நடைப்பயிற்சி உடலின் அனைத்து முக்கிய தசைகளையும் வேலை செய்ய தூண்டும் ஆற்றலும் கொண்டது. இதன் மூலம் தசை ஆரோக்கியம் பலப்படும். கால் தசைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேகமாக நடக்கலாம். படிக்கட்டுகளில் ஏறலாம். அல்லது சாய் தள பரப்பில் நடந்து பயிற்சி செய்யலாம்.

    காலையில் நடைப்பயிற்சி செய்பவர்களின் தூக்க திறன் மேம்படு வதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய உடலியல் நிறுவனம் நடத்திய ஆய்வில், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை நேர உடற்பயிற்சியின் காரணமாக இரவில் நன்றாக தூங்கி எழுவது தெரியவந்துள்ளது. தூக்கமின்மை பிரச் சினையை எதிர்கொண்டவர்கள் காலை நேர உடற்பயிற்சிக்கு பிறகு நன்றாக தூங்கி எழுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாலை நேர பயிற்சிகளை விட காலை நேர பயிற்சியே சிறந்தது. மாலையில் உடற்பயிற்சி செய்யும்போது உடல் சோர்வு மற்றும் தசைகள் பலவீனம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    • சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் வாக்கிங் செல்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
    • சாப்பிட்ட பிறகு செய்யும் வாக்கிங் இதய பாதிப்புகளை குறைக்கும்.

    சாப்பிட்ட பிறகு செய்யும் வாக்கிங் இதய பாதிப்புகளை குறைக்கும் என்றும் ஆய்வு ஒன்று கூறுகிறது. 10 நிமிட நடைப்பயிற்சியில் வளர்ச்சிதை மாற்றத்திலும் முன்னேற்றம் இருக்கும். கலோரிகளும் குறையும். சர்க்கரை நோய் வருவதையும் தடுக்க முடியும்.

    சாப்பிட்ட பிறகு நிச்சயம் பலருக்கும் உடலில் அணுவும் அசையாது என்பதுபோல தான் இருக்கும். அப்படியே கொஞ்சம் படுக்கலாமா என சோம்பேறித்தனமும் ஒட்டிக்கொள்ளும். ஆனால் அவ்வாறு படுத்தால் நெஞ்சு எரிச்சல், வாயு பிரச்சனை ஆகியவை வரும். இவற்றையெல்லாம் தவிர்க்க சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் வாக்கிங் செல்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். அதோடு சாப்பிட்ட பிறகு செய்யும் வாக்கிங் இதய பாதிப்புகளை குறைக்கும் என்றும் ஆய்வு ஒன்று கூறுகிறது.

    பொதுவாக இரவு உணவுக்குப் பிறகு நடை பயிற்சி செல்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல பயனை தரும். குறிப்பாக, உடல் நலன் மட்டுமல்லாமல் மனநலனை மேம்படுத்தவும் இது உதவிகரமாக இருக்கும். அந்த வகையில் இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

    இரவு நேரத்தில் நடந்து செல்வதால் சாப்பிட்ட உணவு எளிமையாக ஜீரணம் அடையும். இது வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

    சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்வதால் நமது மெட்டபாலிசம் மேம்பாடு அடைகிறது.

    நடைப்பயிற்சியை தொடர்ந்து உணவுகள் வேகமாக செரிமானம் அடைவதால் நமது உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேறுகின்றன. இதனால், உடல் உள் உறுப்புகளின் நலன் மேம்பாடு அடையும். அதுமட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்

    தினசரி நடைப்பயிற்சி செய்வதன் மூலமாக இதை கட்டுப்படுத்த முடியும். 15 நிமிடங்கள் அதிவேகமாக நடந்தீர்கள் என்றால் பசி உணர்வை கட்டுப்படுத்த முடியும்.

    இரவில் நீங்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர் என்றால், உணவு சாப்பிட்ட பிறகு நடந்து செல்வது நல்ல பலனை தரும். உங்கள் ஸ்ட்ரெஸ் அளவை குறைத்து நன்றாக தூக்கம் வரும்.

    மன அழுத்தம் அல்லது ஸ்ட்ரெஸ் போன்ற பாதிப்புகளை எதிர்கொண்டு வருபவர் என்றால், இரவு நேரத்தில் நடப்பது உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். உங்கள் உடலுக்கு ரிலாக்ஸ் உணர்வு கிடைக்கும்.

    ×