search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடமாடும்"

    • மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடமாடும் மதி எக்ஸ்பிரஸ் என்ற வாகன அங்காடி இயக்குவதற்கு, சுய உதவிக்குழு உறுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மகளிர் மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர், விதவை மகளிர் மாற்றுத்திறனாளிகள், ஆண் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே விற்பனை வாகன அங்காடி வழங்கப்படும்.

    தேர்வு செய்யப்படும் உறுப்பினர் உள்ள சிறப்பு சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு தேசிய ஊரக வாழ்வாதார இயக்க இணையத்தில் பதிவு பெற்றிருத்தல் வேண்டும். பொருட்கள் உற்பத்தி, விற்பனையில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும், சிறப்பு சுய உதவிக்குழு தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் பூர்த்தி செய்திருக்க வேண்டும், வாகன அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும், அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் பயனாளிக்கு வழங்கப்படும், வாகனத்தை விற்பனை செய்யவோ, வேறு நபருக்கு மாற்றவோ உரிமை இல்லை, வாகன அங்காடி நடத்த இயலாத பட்சத்தில் மீண்டும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திற்கே ஒப்படைக்கவேண்டும். விதிமுறைகள் மீறி செயல்படும் உறுப்பினரிடமிருந்து வாகன அங்காடி திரும்ப பெற்றுக்கொள்ளப்படும். தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு மேல் வாகனம் இயக்கப்படவில்லை எனில் வாகன அங்காடி பறிமுதல் செய்யப்படும். வாகன அங்காடிக்கு வாடகை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. பராமரிப்பு செலவினங்களை சம்பந்தப்பட்ட பயனாளியே மேற்கொள்ள வேண்டும்.

    ஒன்றுக்கு மேற்பட்ட தகுதி உடைய பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் நலிவுற்ற குடும்ப உறுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் நபர் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் இவ்வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, பயனாளிகளை தேர்வு செய்யப்படவுள்ளது. எனவே, மதி எக்ஸ்பிரஸ் வாகன அங்காடி இயக்க தகுதியானவர் விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நிறைமதி கிராமம், நீலமங்கலம்(அஞ்சல்) கள்ளக்குறிச்சி மாவட்டம் என்ற முகவரிக்கு வருகிற 16-ந் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனம் மூலமாக குற்ற சம்பவம் நடந்த இடத்திலேயே குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவியல் ரீதியான சேவைகளை வழங்க முடியும்.
    • சம்பவ இடத்தில் உள்ள ரத்தகறை, வெடி பொருட்கள், போதை பொருள் மற்றும் துப்பாக்கி சூடு படிமங்கள் ஆகியவற்றை நடமாடும் தடய அறிவியல் வாகனத்தில் உள்ள பரிசோதனை கூடத்திலேயே உடனடியாக பரிசோதிக்க முடியும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டுக்காக குற்ற சம்பவம் நடந்த இடத்திலேயே ஆரம்பகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை தமிழக முதல்-அமைச்சர், திருப்பூர் மாநகரம் உள்பட 5 மாநகரங்களுக்கும், 8 மாவட்டங்களுக்கும் வழங்கியுள்ளார்.

    திருப்பூர் மாநகருக்கு வழங்கப்பட்ட நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனத்தை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனம் மூலமாக குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற சம்பவம் நடந்த இடத்திலேயே குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவியல் ரீதியான சேவைகளை வழங்க முடியும். சம்பவ இடத்தில் உள்ள ரத்தகறை, வெடி பொருட்கள், போதை பொருள் மற்றும் துப்பாக்கி சூடு படிமங்கள் ஆகியவற்றை நடமாடும் தடய அறிவியல் வாகனத்தில் உள்ள பரிசோதனை கூடத்திலேயே உடனடியாக பரிசோதிக்க முடியும்.

    குற்றம் நடந்த இடத்தில், அடையாளம் காணுவதற்கான கருவிகளை கையாள்வதற்கும், எந்தவித வெளிப்புற மாசுபடுத்துதலுக்கும் தடய பொருட்கள் உட்படாதவகையில் ஆய்வு மேற்கொள்வதற்கும் உரிய உள்கட்டமைப்புடன் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக குற்ற சம்பவங்களை குறுகிய காலத்தில் புலனாய்வு செய்து குற்றத்தை கண்டுபிடிக்க முடியும். இந்த வாகனத்தில் தடய அறிவியல் உதவி இயக்குனர் பணியில் இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காசநோய் கண்டறியும் இலவச நடமாடும் புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
    • வாரத்தில் 5 நாட்கள் செயல்படும்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:இந்த வாகனத்தில் மிக துல்லியமாக நோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே, நோய் கண்டறியும் கணினி வசதி, குளிர் சாதனப் பெட்டி போன்ற சாதனங்கள் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.45 லட்சம் ஆகும். இந்த வாகனம் மூலம் மக்களின் இருப்பிடத்திற்கே சென்று எக்ஸ்ரே மூலம் நோய்கள் கண்டறியப்படும். நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு அன்றைய தினமே சளி பரிசோதனை மேற்கொள்ளப்படும்.சளி பரிசோதனையில் காசநோய் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்படும். மேலும், நோயாளியின் ஆரோக்கியத்திற்காக ஊட்டசத்து நிறைந்த உணவுப் பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும். நோயாளிகளுக்கு நோயின் தன்மை மற்றும் நோய் குணமாகும் வழிமுறைகள், நோய் தடுப்பு முறைகள் போன்றவை விளக்கமாக எடுத்துரைக்கப்படும்.இவ்வாகனம் வாரத்தில் 5 நாட்கள் செயல்படும். இரண்டு வாரங்களுக்கு தொடர் இருமல், பசியின்மை, தொடர்ச்சியாக எடை குறைதல், சளியுடன் ரத்தம் வருதல் காசநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த அறிகுறியுடையோர் இவ்வாகனத்தை அணுகி சளி பரிசோதனை செய்துகொள்ளலாம். காசநோய் இல்லா அரியலூர் மற்றும் காசநோய் இல்லா தமிழகம் 2025 என்ற இலக்கினை அடைய இந்த வாகனம் உறுதுணையாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் வகையில் வாகனத்தினை பயன்படுத்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, கு.சின்னப்பா எம்.எல்.ஏ., காசநோய் பிரிவு துணை இயக்குனர் நெடுஞ்செழியன், நகர் மன்ற தலைவர் சாந்தி கலைவாணன் உட்பட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




    ×