search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forensic lab"

    • நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனம் மூலமாக குற்ற சம்பவம் நடந்த இடத்திலேயே குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவியல் ரீதியான சேவைகளை வழங்க முடியும்.
    • சம்பவ இடத்தில் உள்ள ரத்தகறை, வெடி பொருட்கள், போதை பொருள் மற்றும் துப்பாக்கி சூடு படிமங்கள் ஆகியவற்றை நடமாடும் தடய அறிவியல் வாகனத்தில் உள்ள பரிசோதனை கூடத்திலேயே உடனடியாக பரிசோதிக்க முடியும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டுக்காக குற்ற சம்பவம் நடந்த இடத்திலேயே ஆரம்பகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை தமிழக முதல்-அமைச்சர், திருப்பூர் மாநகரம் உள்பட 5 மாநகரங்களுக்கும், 8 மாவட்டங்களுக்கும் வழங்கியுள்ளார்.

    திருப்பூர் மாநகருக்கு வழங்கப்பட்ட நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனத்தை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனம் மூலமாக குற்றவாளிகளை விரைவில் கண்டறிய குற்ற சம்பவம் நடந்த இடத்திலேயே குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு அறிவியல் ரீதியான சேவைகளை வழங்க முடியும். சம்பவ இடத்தில் உள்ள ரத்தகறை, வெடி பொருட்கள், போதை பொருள் மற்றும் துப்பாக்கி சூடு படிமங்கள் ஆகியவற்றை நடமாடும் தடய அறிவியல் வாகனத்தில் உள்ள பரிசோதனை கூடத்திலேயே உடனடியாக பரிசோதிக்க முடியும்.

    குற்றம் நடந்த இடத்தில், அடையாளம் காணுவதற்கான கருவிகளை கையாள்வதற்கும், எந்தவித வெளிப்புற மாசுபடுத்துதலுக்கும் தடய பொருட்கள் உட்படாதவகையில் ஆய்வு மேற்கொள்வதற்கும் உரிய உள்கட்டமைப்புடன் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக குற்ற சம்பவங்களை குறுகிய காலத்தில் புலனாய்வு செய்து குற்றத்தை கண்டுபிடிக்க முடியும். இந்த வாகனத்தில் தடய அறிவியல் உதவி இயக்குனர் பணியில் இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×