search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைகள் பறிப்பு"

    • ஸ்கூட்டரில் சென்ற பெண் டாக்டரிடம் 8 பவுன் நகைகளை வாலிபர்கள் பறித்து சென்றனர்.
    • போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் அருண் பிரசாத். இவரது மனைவி யாழினி (வயது 30). டாக்டரான இவர் பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.டி. பட்ட மேற்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று இரவு மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்து பெரம்பலூருக்கு தனது ஸ்கூட்டரில் வந்து கடையில் பொருட்கள் வாங்க சென்றார்.

    பின்னர் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து திருச்சி-சென்னை புறவழிச்சாலை செல்லும் வழியில் வீடு ஏதேனும் வாடகைக்கு உள்ளதா? என்று விசாரிப்பதற்காக அபிராமபுரம் வடக்கு தெரு நுழைவு வாயில் அருகே சென்றார். அப்போது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், திடீரென டாக்டர் யாழினியின் ஸ்கூட்டரை வழிமறித்தனர்.

    மேலும் அவரை மிரட்டி அவர் அணிந்திருந்த தாலிக்கொடி மற்றும் மோதிரம் என 8 பவுன் நகைகளை பறித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இது குறித்து டாக்டர் யாழினி பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்சீவ்குமார், பெரம்பலூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மர்ம ஆசாமிகள் இருவரும் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகளை பறித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ராஜா (வயது 48). இவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

    நேற்று இரவு மார்ட்டின் ராஜா வெளியே சென்றிருந்த நிலையில் 3 மர்ம ஆசாமிகள் அவரது வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.அப்போது மார்ட்டின் ராஜாவின் மனைவி பாஸ்கல் ஜோஸ்வினா, மாமியார் லூர்துமேரி ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

    அவர்களை கத்திமுனையில் மிரட்டிய மர்ம ஆசாமிகள் இருவரும் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகளை பறித்தனர்.இந்நிலையில் வெளியே சென்றிருந்த மார்ட்டின் ராஜா வீட்டுக்குள் நடப்பது தெரியாமல் உள்ளே நுழைந்தார்.

    இதையடுத்து அவரை இரும்பு தடியால் தாக்கி காயப்படுத்திவிட்டு மர்ம ஆசாமிகள் 3 பெரும் தப்பி ஓடி விட்டனர்.இதில் காயமடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மார்ட்டின் ராஜா கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    பறிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.2,17,500 என்று கூறப்படுகிறது.

    • மூதாட்டியிடம் பிரதமர் நிதி திட்டத்தில் உங்களுக்கு ரூ. 2 ஆயிரம் பணம் பெற்று தருகிறேன்
    • மூதாட்டியை ஏமாற்றி நூதனமாக நகை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை,

    சுங்கம் பைபாஸ் ரோடு கோபி நகரை சேர்ந்தவர் சுசீலா(வயது70). சம்பவத்தன்று இவர் லங்கா கார்னர் சிக்னல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் மூதாட்டியிடம் பிரதமர் நிதி திட்டத்தில் உங்களுக்கு ரூ. 2 ஆயிரம் பணம் பெற்று தருகிறேன் என ஆசை வார்த்தை கூறினார்.பின்னர் உங்களை போட்டோ எடுக்க வேண்டும் என கூறினார். மேலும் அருகே உள்ள ஸ்டூடியோவுக்கு செல்லலாம் என கூறி அந்த நபர் மூதாட்டியை தாமஸ் வீதிஅருகே அழைத்து சென்றார்.

    பின்னர் போட்டோ எடுக்கும் போது அதிகளவில் நகை அணிந்து இருந்தால் உங்களுக்கு பிரதமர் நிதி திட்டத்தில் பணம் கிடைக்காது என கூறி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின் மற்றும் 1 பவுன் தங்க கம்மலை கழட்டி அந்த நபர் வாங்கி கொண்டார். அதனை ஒரு பேப்பரில் சுற்றி மூதாட்டியிடம் கொடுத்து விட்டு இங்கேயே இருங்கள் வந்து விடுகிறேன் என கூறி விட்டு சென்று விட்டார்.

    நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகத்தின் பேரில், மூதாட்டி அவர் நகையை சுற்றி கொடுத்த பேப்பரை பார்த்த போது அதில் நகைகளுக்கு பதிலாக சிறிய கற்கள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை ஏமாற்றி நூதனமாக நகை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தங்க மோதிரம், செயின் உள்பட 9 பவுன் தங்க நகைகளை பறித்தனர். பின்னர் 2 பெண் களும் அங்கு இருந்து தப்பிசென்றனர்.
    • முதியவரிடம் வீடு வாடகைக்கு கேட்பது போல நடித்து அவரை தாக்கி செயின் பறித்து சென்றவர்கள் என்பது தெரிய வந்தது.

    பொள்ளாச்சி

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோடு எஸ்.ஆர். லே- அவுட்டை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 58). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.

    அப்போது அங்கு 2 இளம்பெண்கள் வந்தனர். அவர்கள் தேவராஜிடம் வீடு வாடகைக்கு உள்ளதா? என கேட்டனர். அதற்கு அவர் பதில் கூறி கொண்டு இருந்தார். திடீரென அந்த பெண்கள் தேவராஜின் முகத்தை துணியால் மூடி தாக்கினர். இதில் நிலைகுலைந்த தேவராஜ் மயங்கினார். அப்போது அந்த இளம்பெண்கள் அவர் அணிந்து இருந்த தங்க மோதிரம், செயின் உள்பட 9 பவுன் தங்க நகைகளை பறித்தனர். பின்னர் 2 பெண் களும் அங்கு இருந்து தப்பிசென்றனர்.

    இதில் அதிர்ச்சியடைந்த தேவராஜ் இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு வாடகைக்கு கேட்பது போல நடித்து முதியவரை தாக்கி 9 பவுன் நகைகளை பறித்து சென்ற இளம்பெண்களை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் பல்லடம் ரோட்டில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 இளம்பெண் வந்தனர். அவர்கள் மீது போலீசாருக்கு சந்சதேகம் ஏற்பட்டது. 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    விசாரணையில் வீட்டில் தனியாக இருந்த முதியவரிடம் வீடு வாடகைக்கு கேட்பது போல நடித்து அவரை தாக்கி செயின் பறித்து சென்றவர்கள் என்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், கோட்டூர் மலை யாண்டிபட்டிணத்தை சேர்ந்த பவித்ரா தேவி (26), விஜயலட்சுமி (24) என்பது தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    ×