கத்திமுனையில் பெண்களிடம் ரூ.2 லட்சம் நகைகள் பறிப்பு

மர்ம ஆசாமிகள் இருவரும் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகளை பறித்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
கத்திமுனையில் பெண்களிடம் ரூ.2 லட்சம் நகைகள் பறிப்பு
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ராஜா (வயது 48). இவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று இரவு மார்ட்டின் ராஜா வெளியே சென்றிருந்த நிலையில் 3 மர்ம ஆசாமிகள் அவரது வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.அப்போது மார்ட்டின் ராஜாவின் மனைவி பாஸ்கல் ஜோஸ்வினா, மாமியார் லூர்துமேரி ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.

அவர்களை கத்திமுனையில் மிரட்டிய மர்ம ஆசாமிகள் இருவரும் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகளை பறித்தனர்.இந்நிலையில் வெளியே சென்றிருந்த மார்ட்டின் ராஜா வீட்டுக்குள் நடப்பது தெரியாமல் உள்ளே நுழைந்தார்.

இதையடுத்து அவரை இரும்பு தடியால் தாக்கி காயப்படுத்திவிட்டு மர்ம ஆசாமிகள் 3 பெரும் தப்பி ஓடி விட்டனர்.இதில் காயமடைந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மார்ட்டின் ராஜா கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

பறிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.2,17,500 என்று கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com