search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோட்டக்கலைத் துறை"

    • புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பூங்காக்களில் மரக்கன்றுகள் நடப்படுகிறது.
    • அடுத்த மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம்.

    சென்னை:

    சென்னை நகரை தூய்மையாக மாற்ற வேண்டும் என்பதற்காக மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சுற்றுச்சூழலை மேம்படுத்த மரக்கன்றுகளை ஆண்டுதோறும் நட்டு வருகிறது. கடந்த 2 வருடத்தில் 3 லட்சத்து 3 ஆயிரத்து 967 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

    நடப்பு ஆண்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அந்த பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர்.

    சென்னையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பூங்காக்களில் மரக்கன்றுகள் நடப்படுகிறது. அதுபோல பொது இடங்கள், சாலையோர, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் உள்ள காலி இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்படுகிறது. அந்த இடங்களில் நாட்டு மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

    குடியிருப்பாளர் நலச்சங்கங்கள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாவலர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடப்படுகின்றன. எந்தெந்த இடங்களில் வைக்க வேண்டும் என்று தன்னார் வலர்கள், பொதுமக்கள் விரும்புகிறார்களோ அந்த இடம் சரியானதாக இருக்குமா? என்பதை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

    குடியிருப்போர் நலசங்கங்கள், பொதுமக்கள் மாநகராட்சியிடம் மரக்கன்று நடுவதற்கு அணுகலாம். எந்த பகுதியில் வைக்க வேண்டும் என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடன் மரக்கன்று நடப்படும்.

    இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள் அந்தந்த வார்டு அலுவலகம், பூங்கா ஊழியர்களை அணுகலாம். இதுவரையில் இதுபோன்று 74 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அடுத்த மாதம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

    அதற்காக சென்னையில் மரக்கன்றுகளை நடுவதற்கு இடங்களை தெரிவு செய்து வருகிறோம். மரக்கன்றுகள் வனத்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் வாங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
    • கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    தோட்டக்கலைத் துறையின் சார்பில் வழங்கப்படும் நலத் திட்டங்கள் குறித்து குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அதிகரித்து வரும் காளான் தேவையை பூர்த்தி செய்திடவும், பெண் விவசாயிகள் காளான் வளர்ப்பில் ஈடுபட்டு அதிகலாபம் ஈட்டவும், தினசரி வருமானம் பெற்றிடவும் ஏதுவாக 2021 - 2022 மற்றும் 2022 2023-ம் நிதியாண்டுகளில் மொத்தமாக ரூ.9.50 லட்சத்தில் 17 பயனாளிகள் காளான் வளர்ப்புக் கூடம் அமைத்து பயன் பெற் றுள்ளனர்.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத் தின் கீழ் (2021-2022) ரூ.1.06 லட்சம் மதிப்பில் வீட்டுத் தோட்ட தளைகள் அமைக்க 2375 பயனாளிகளுக்கு வினி யோகிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய தோட்டக்கலை பயிர்களுக்கு 95 பயனாளிக ளுக்கு ரூ.1.90 லட்சம் மதிப்பில் மானியம் வழங்கப்பட்டுள்ளது. 1000 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் வரப்பு ஓரங்களில் பழக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகள் நடுவதற்கு வினியோகம் என மொத்தம் 3470 பயனாளிகளுக்கு ரூ.3.96 லட்சம் மதிப்பில் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2021 - 2022 காய்கறி விதை தளைகள், மாடித் தோட்ட தளைகள், ஊட்டச்சத்து தளை, முட்டுக் கொடுத்தல், காளான் வளர்ப்பு குடில், பயிர் ஊக்கத் தொகை, நெகிழி கூடைகள், அலுமினிய ஏணி, பழம் அறு வடை செய்ய பயன்படும் வலைக் கருவி, மலர் அறுவ டைக்கான முகப்பு விளக்கு, கவாத்து கத்தரி ஆகியவை 6943 பயனாளிகளுக்கு ரூ.33.92 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது,

    தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் (2021- 2022) உயர்ரக காய்கறிகள் விரிவாக்கம், அவகேடோ பரப்பு விரிவாக்கம், பலா பரப்பு விரிவாக்கம், நறுமண பயிர்கள் விரிவாக்கம் (மிளகு, கிராம்பு, ஜாதிக்காய்), டிராகன் பழம் பரப்பு விரிவாக்கம், பண்ணை குட்டை அமைத்தல் என 423 பயனாளிகளுக்கு ரூ.67.71 லட்சம் மதிப்பில் பரப்பு விரிவாக்கம் செய்ய வும், பசுமை குடில், ஒருங்கி ணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, அங்கக வேளாண்மை முதலாம் ஆண்டு, அங்கக வேளாண்மை 2-ம் ஆண்டு, மண் புழு படுக்கை என 241 பயனாளிகளுக்கு ரூ.14.33 லட்சம் மதிப்பில் பாதுகாக்கப்பட்ட சாகுபடி மேற்கொள்ளவும், தேனீ குடும்பங்கள், தேனீ பெட்டிகள், தேனீ வளர்ப்பு உபகரணங்கள் என 300 பய னாளிகளுக்கு ரூ.24 லட்சம் மதிப்பில் தேனீ வளர்ப்பின் மூலம் அயல் மகரந்த சேர்க் கையை ஊக்குவிக்கவும் வாழைத்தார் உறை, சிப்பம் கட்டும் அறை என 168 பயனாளிகளுக்கு ரூ.22.50 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த அறுவடை பின்செய் மேலாண்மை மேற்கொள்ளவும் திட் டங்கள் வழங்கப்பட் டுள்ளது. மொத்தத்தில் 348 பயனாளிகளுக்கு ரூ.41.95 லட்ச மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×