search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மரக்கன்றுகள் நடுதல்"

    • அரூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையை பயன்படுத்தி மரக்கன்றுகள் நட விவசாயிகளுக்கு வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
    • தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி தேக்கு, சிவப்பு சந்தனம், மகோகனி, சில்வர் ஓக், மலைவேம்பு, நாவல், புளியன், ஈட்டி, வேங்கை உள்ளிட்ட வகையான பயனுள்ள மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்யலாம்.

    தருமபுரி:

    தமிழ்நாடு வனத்துறை பசுமை போர்வைத் திட்டம் மற்றும் தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாத்தல் மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டத்தில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

    மொரப்பூர், அரூர், தீர்த்தமலை வனச்சரகங்கள், அரூர் சமூகக் காடுகள் மற்றும் வன விரிவாக்க விளம்பர சரகம், பாப்பிரெட்டிப்பட்டி சேர்வராயன் வனச்சரகம் ஆகியவற்றின் சார்பில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேலாக மரக்கன்று நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

    விவசாய நிலங்கள், தொழிற்சாலைகளில் உள்ள காலி இடங்களில் மரக்கன்றுகளை நட்டு பசுமை மயமாக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி தங்களது நிலங்களில் தேக்கு, சிவப்பு சந்தனம், மகோகனி, சில்வர் ஓக், மலைவேம்பு, நாவல், புளியன், ஈட்டி, வேங்கை உள்ளிட்ட வகையான பயனுள்ள மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்யலாம்.

    சிட்டா நகல், 2 புகைப்படம், ஆதார் அட்டை நகல் இவற்றுடன் அந்தந்தப் பகுதி வனச் சரகர்கள், வனவர்கள் ஆகியோரை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 750 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
    • ஆதனூர் கிராமம் நெடுஞ்சாலை ஓரத்தில் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    தருமபுரி,

    தமிழ்நாடு முன்னாள் முதல் அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை ஓரங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் தருமபுரி கோட்டத்திற்குட்பட்ட சாலை ஓரங்களில் 12000 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 750 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

    அதன் ஒரு பகுதியாக ஒகேனக்கல், பென்னாகரம், தருமபுரி, திருப்பத்தூர் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஆதனூர் கிராமம் நெடுஞ்சாலை ஓரத்தில் 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இதில் மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

    • சாலை சீரமைப்பு பணிகள் மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.
    • உதவி தலைமையாசிரியர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் கடந்த 7 நாட்கள் நடைபெற்றது. இதில் தினமும் தூய்மை படுத்தும் பணிகள், சாலை சீரமைப்பு பணிகள் மரக்கன்றுகள் நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிலையில் முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதற்கு உதவி தலைமையாசிரியர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார்.

    இன்ஸ்பெக்டர் ராஜேஷ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பிரவீன் குமார், ஆசிரியர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக உதவி திட்ட அலுவலர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். திட்ட அலுவலர் ராஜாராமன் செயல் அறிக்கை வாசித்தார். இதில் டி.எஸ்.பி. விவேகானந்தன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

    நிகழ்ச்சி யில் பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்த லைவர் சௌந்தர ராஜன், ஆலங்காடு பள்ளி தலைவர் கோபி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முகாம் உதவி அலுவலர் மகேஷ் நன்றி கூறினார்.

    ×