search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொட்டிப்பாலம்"

    • பூங்காவை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன
    • பூங்கா மறுசீரமைப்பு பணிக்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டு உள்ளது.

    நாகர்கோவில் :

    திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் தொட்டி பாலம், மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது.

    இங்குள்ள ஆற்றின் கரையோரத்தில் பூங்கா உள்ளது. சிதிலமடைந்து கிடக்கும் இந்த பூங்காவை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. பூங்கா எவ்வாறு அமைய வேண்டுமென பொது மக்களின் கருத்து கேட்கும் வகையில் கட்டிட கலை குறித்து போட்டிகள் நடத்தப்பட்டது.

    மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் கருத்துருவாக்கம் மற்றும் திட்ட மதிப்பீடு செய்யப் பட்டு, அரசின் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து பூங்காவினை மறு சீரமைப்பது குறித்து அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்ட னர்.

    தொடர்ந்து அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் சீரமைத்து, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அரசு மேம்படுத்தி வருகிறது.

    அதன்படி மாத்தூர் தொட்டிப்பாலம் பூங்கா வினை சீரமைப்பது குறித்து மக்களிடம் கருத்து பெறப் பட்டு, திட்டமதிப்பீடும் செய்யப்பட்டு, அரசின் ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    பூங்கா மறுசீரமைப்பு பணிக்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட் டு உள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள பூங்காவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணி களை கவரும் வகையில் வண்ண மயமான அருமை யான அருங்காட்சியகம், கண்கள் குளிர மலர் கண்காட்சிகள், செடி வகைகள் அமைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது மாவட்ட சுற்றுலா அலுவலர் சந்தீப் குமார், பேரூராட்சி தலைவர்கள் பெனிலா ரமேஷ் (திருவட்டார்), மவுண்ட் மேரி மனோஜ் (வேர்கிளம்பி), திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலர் யசோதா, அரசு வக்கீல் ஜாண்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கடந்த ஆண்டை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம்
    • மாத்தூர் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் மிகவும் முக்கியமான சுற்றுலா தலங்களில் மாத்தூர் தொட்டிப் பாலமும் ஒன்று.

    இது ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிகாலத்தில் இது மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும், கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டது.

    1240 அடி நீளம், 103 அடி உயரம் கொண்ட இந்த பாலம் கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    மாத்தூர் தொட்டிப்பா லத்தைக் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.

    தொட்டிப்பாலத்தின் முகப்பு பகுதி அருவிக்கரை ஊராட்சியில் உள்ளது. அருவிக்கரை ஊராட்சிக்கு வருமானம் தரும் ஒன்றாக மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளது. ஆண்டு தோறும் சுற்றுலாபயணிகள் தொட்டிப்பாலத்திற்கு வரும்போது கார்கள் மற்றும் நுழைவுக்கட்டணம் வசூலிப்பது ஏலம் விடப்படுகிறது.

    கடந்த ஆண்டுக்கான குத்தகை காலம் வரும் 31-ந் தேதியுடன் முடிவடைவதால் 2023-ம் ஆண்டுக்கான ஏலம் அருவிக்கரை ஊராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஏலத்தில் 30 பேர் கலந்து கொண்டனர். இறுதியில் கார்பார்க்கிங் ரூ.23 லட்சத்து 65 ஆயிரத்து 900,-க்கும், நுழைவு கட்டணம், வீடியோ கேமரா கட்டணம் ரூ.17 லட்சத்து 85 ஆயிரத்திற்கும், என மொத்தம் ரூ.41 லட்சத்து 50 ஆயிரத்து 900-க்கும் ஏலம் போனது.

    கடந்த ஆண்டு இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் ரூ.17 லட்சத்துக்கு ஏலம் போனது.கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிக தொகைக்கு இந்த ஆண்டு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    மாத்தூர் தொட்டி பாலத்தின் மேல் சென்று தொட்டிப்பாலத்தை சுற்றிப்பார்த்து வர ரூ.5 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. இதுபோல மாத்தூர் தொட்டிப்பாலத்தில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5, ஆட்டோவுக்கு ரூ.15, கார்களுக்கு ரூ.40, மினி வேன், வேன்களுக்கு ரூ.50, பஸ்களுக்கு ரூ.75, வீடியோ கேமராவுக்கு ரூ.25, புகைப்பட கேமராவுக்கு ரூ5 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

    ×