search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் முடிவுகள்"

    • திரிபுராவில் ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்ற நிலையில், 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது
    • மேகாலயாவின் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    புதுடெல்லி:

    திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் திரிபுராவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றி உள்ளது.

    60 தொகுதிகளை கொண்ட திரிபுராவில் ஆளும் பாஜக 55 இடங்களில் போட்டியிட்டது. மீதமுள்ள 5 தொகுதிகளில் கூட்டணி கட்சியான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கட்சி (ஐ.பி.எப்.டி.) போட்டியிட்டது.

    வாக்குகள் இன்று மாலை எண்ணி முடிக்கப்பட்டன. ஆட்சியமைக்க 31 இடங்கள் தேவை என்ற நிலையில், 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. கூட்டணி கட்சியான ஐ.பி.எப்.டி. ஒரு தொகுதியில் வென்றது. திப்ரா மோதா கட்சி 13 தொகுதிகளை கைப்பற்றி இரண்டாம் இடத்தை பிடித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்11 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

    இதேபோல் 60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்து மாநிலத்தில் பாஜக- தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக-என்டிபிபி கூட்டணி 37 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 12 தொகுதிகளிலும், என்டிபிபி 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ்-7, தேசிய மக்கள் கட்சி-5, நாகா மக்கள் முன்னணி-2, லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்)-2, ஐக்கிய ஜனதா தளம்-1 மற்றும் சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். நாகாலந்தின் தற்போதைய முதல்-மந்திரி ரியோ அங்காமி 2 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

    மேகாலயாவின் சோஹியாங் தொகுதியில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால், 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சியமைக்க 31 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும் என்ற நிலையில், முதல்வர் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) அதிகபட்சமாக 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐக்கிய ஜனநாயக கட்சி 11 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மக்களின் குரல் கட்சி 4 தொகுதிகளிலும், மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி, மக்கள் ஜனநாயக முன்னணி தலா 2 இடங்களிலும், சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு யாருக்கும் பெரும்பான்மைக்கு கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. அதிக தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள என்பிபி கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்போம் என்று பாஜக தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்தது.
    • மேகாலயாவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது.

    வடகிழக்கு பகுதியில் 8 மாநிலங்கள் உள்ளன. இதில் திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் கடந்த மாதம் 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேகாலயா மற்றும் நாகாலாந்தில் கடந்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடந்தது.

    60 தொகுதிகளை கொண்ட திரிபுராவில் ஆளும் பாஜக 55 இடங்களில் போட்டியிட்டது. மீதமுள்ள 5 தொகுதிகளில் கூட்டணி கட்சியான திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கட்சி (ஐ.பி.எப்.டி.) போட்டியிட்டது.

    பாஜகவை எதிர்த்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சிகள் முதல் முறையாக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. மாநில கட்சியான திப்ரா மோத்தா 42 தொகுதிகளில் போட்டியிட்டது. இதனால் இங்கு மும்முனை போட்டி நிலவியது.

    இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் திரிபுராவில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்தது. பா.ஜனதா கூட்டணி 28 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு- காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களிலும், திப்ரா மோத்தா கட்சி 13 இடங்களிலும் முன்னிலையில் இருந்தன. மற்றவை ஒரு இடத்தில் முன்னிலையில் இருந்தது.

    60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்தில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்.டி.பி.பி.)-பா.ஜனதா ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. என்.டி.பி.பி. கட்சி 40 தொகுதிகளிலும் பா.ஜனதா 19 தொகுதிகளிலும் களம் இறங்கின. நாகா மக்கள் முன்னணி (என்.பி.எப்.) 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

    தேசிய மக்கள் கட்சி 12 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 12 இடங்களிலும் களம் இறங்கின.

    இங்கு பா.ஜனதா கூட்டணி முன்னிலையில் உள்ளது. அந்த கூட்டணி 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. நாகா மக்கள் முன்னணி 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.

    மற்ற கட்சிகள் 13 இடங்களில் முன்னிலையில் உள்ளன. அகுலுடோ தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இதன்மூலம் நாகாலாந்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கிறது.

    60 தொகுதிகளை கொண்ட மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி யுடன் கூட்டணியில் இருந்த பா.ஜனதா, இந்த தேர்தலில் தனித்து களம் இறங்கியது.

    இதில் பா.ஜனதா 60 தொகுதிகளிலும், காங்கிரஸ் 60 தொகுதிகளிலும் போட்டியிட்டது. தேசிய மக்கள் கட்சி 57 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 58 தொகுதிகளிலும் போட்டியிட்டன. சோஹியாங் தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

    இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் தேசிய மக்கள் கட்சி 22 இடங்களில் முன்னிலையில் இருந்தது. பா.ஜனதா 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், முன்னிலையில் இருந்தன.

    மற்ற கட்சிகள் 26 இடங்களில் முன்னிலை வகித்தன. இதன் மூலம் மேகாலயாவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் இழுபறி நீடிக்கிறது.

    ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பாடத்திட்டங்களில் 10, 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. #ICSE #ISC #ExamResults
    சென்னை:

    நாடுமுழுவதும் ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி பாடத்திட்டங்களில் 10, 12 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. 

    தமிழகத்தில் 77 ஐசிஎஸ்இ பள்ளிகளில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 99.79% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 43 ஐஎஸ்சி பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களில் 99.30% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
    ×