search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர் பவனி"

    • முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் தகவல்
    • மின்வயர்களை, புதைவடங்களாக மாற்றும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    திமுக தணிக்கைக்குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் மகிழ்ச்சி யான செய்தி வந்துள்ளது. 23.08.2022 அன்று மின்வாரியத்திற்கு நான் அளித்த புகார் மனுவை அடிப்படை யாகக்கொண்டு, கடந்த 27.10.2022 அன்று தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற் றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலா ஜியை தலைமை செயலகத் தில் நேரில் சந்தித்து குமரி மாவட்டத்தில் இந்து சமய அற நிலையத்துறையின் கீழ் இயங்கி வரும் கோவில்களின் தேர் பவனி செல்லும் பகுதிக ளில் அமைந்துள்ள மின்வ யர்களை, புதைவடங்களாக மாற்றுவது தொடர்பாக கோரிக்கைமனு அளித்திருந் தேன். மனுவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளை தமிழ் நாடு அமைச்சர் செந்தில்பா லாஜி தொடர்பு கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக் கும்படி கேட்டுக்கொண்டார். தற்போது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்து றையின் கீழ் இயங்கி வரும் நாகர்கோவிலில் அமைந் துள்ள நாகராஜா கோவில், கிருஷ்ணன்கோவிலில் அமைந்துள்ள கிருஷ்ணசு வாமி கோவில், வடிவீஸ்வ ரத்தில் அமைந்துள்ள அழ கம்மன்கோவில் மற்றும் பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்கசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் தேர் ஓடும் பகுதியில் உள்ள மின்வயர்களை, புதைவடங் களாக மாற்றும் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அனுமதிக் காக சமர்ப்பிக்கப்பட்டுள் ளது. அனுமதி பெற்ற உடன் வாரிய விதிமுறைப்படி பணிகள் தொடங்கப்படும் என்பதை அரசாங்க தரப் பில் இருந்து கடிதம் மூல மாக தெரிவித்துள்ளனர்.

    பக்தர்கள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு என்னுடைய கோரிக்கையின் அடிப்ப டையில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழ் நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    • வாடிப்பட்டி ஆரோக்கிய தேவாலயத்தில் அன்னை தேர் பவனி நடந்தது
    • மதுரை-திண்டுக்கல் நகர்புறசாலை வழியாக பழையநீதிமன்றம் வரை சென்று திரும்பியது.

    வாடிப்பட்டி

    தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா கடந்தமாதம் 29-ந்தேதி மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று (வியாழக்கிழமை) ஆரோக்கிய அன்னையின் பிறப்புப்பெருவிழா, இறைவார்த்தை சபை 147-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 22-வதுஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடந்தது.

    முப்பெரும் விழா கூட்டுத் திருப்பலியை சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் நடத்தினார். குழந்தைஏசுவை கையில் ஏந்தியபடி ஆரோக்கியஅன்னை தேர்பவனி புறப்பட்டது.

    மதுரை-திண்டுக்கல் நகர்புறசாலை வழியாக பழையநீதிமன்றம் வரை சென்று திரும்பியது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், கேரளா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இன்று காலை ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றிதிருப்பலியுடன் விழா நிறைவுபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை எஸ்.வி.டி.அதிபர் அந்தோணி ஜோசப் அடிகளார், பங்குத்தந்தை வளன், உதவி பங்குதந்தை குழந்தையேசுதாஸ் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் அன்பியங்கள் பங்கு மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் கனக சபாபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

    • வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது.
    • தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்து திருவிழாவை முன்னிட்டு வருடம்தோறும் பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருகிறார்கள்.

    திருச்சி,

    வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 7-ந்தேதி தேர் பவனி நிகழ்ச்சி நடக்கிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் பல நாடுகளில் இருந்தும் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் செல்வது வழக்கமானது.

    தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்து திருவிழாவை முன்னிட்டு வருடம்தோறும் பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருகிறார்கள். திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ காலனி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இருந்து அப்பகுதியில் உள்ள பக்தர்கள் ஆண்டுதோறும் பாதையாத்திரை சென்று வருகிறார்கள்.

    இதனை முன்னிட்டு 31-வது ஆண்டாக திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் பாதயாத்திரை செல்லும் குழுவினருக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியை பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் நடத்தி வைத்தார். பின்னர் பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்பவனியில் இருந்த வேளாங்கண்ணி மாதா சிலையை பங்கு தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து மந்திரித்தார்.

    இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேர் பவனியோடு வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றார்கள். பாதயாத்திரை மற்றும் தேர் பவனிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்களான பி.ஜான் பீட்டர், கே.ரெத்தினம், பி.பிரபு, ஆர்.எஸ்.சுரேஸ், ஆட்டோஅருண், பி.ஆனந்த ராஜ், கீர்த்தி வினோத் ஆகியோர் செய்து இருந்தனர்.


    • சாயல்குடியில் வேளாங்கண்ணி ஆலய தேர் பவனி விழா நடந்தது.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்பவனியில் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தினமும் மாலையில் ஆலய வளாகத்தில் ஜெபமாலை ஜெபித்து பவனியை வழிநடத்தி திருப்பலியில்பங்கேற்றனர்.

    திருப்பலிக்கு முன் ஒப்புரவு அருள் சாதனம் வழங்கப்பட்டது. திருப்பணியை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மின் ஒளி அலங்காரத்தில் அன்னை ஆரோக்கிய மாதா சாயல்குடி வீதிகளில் நகர்வலம் வந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு சாயல்குடி பங்குத்தந்தை பாஸ்கர் டேவிட் தலைமை தாங்கினார்.தொன் போஸ்கோ சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் ஆரோக்கியம், முதல்வர் ஆல்பிரட், பங்கு தந்தைகள் சார்லஸ், பிரபு முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை மாதா கோவில் நிர்வாக தலைவர்- செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் காமராஜ் தொம்மை செபஸ்டியன் ஆகியோர் செய்து இருந்தனர். சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகள் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்பவனியில் பங்கேற்றனர்.

    • தேரை பங்குத்தந்தை வின்சென்ட்–தேவராஜ் புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.
    • 5-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை மாலை நவநாள் ஜெபம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரத்தில் புனிதசெபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 51-வது ஆண்டு திருவிழாவானது கடந்த 4-ந்தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 5-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை மாலை நவநாள் ஜெபம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.தேரை பங்குத்தந்தை வின்சென்ட்–தேவராஜ் புனிதம் செய்து தொடங்கி வைத்தார். இதில் மின் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் முன்னதாக மிக்கேல் சம்மன்சு தேரும், அடுத்து புனிதபாத்திமா அன்னை, சூசையப்பர், திருப்பூண்டி பங்குத்தந்தை வின்சென்ட்தேவராஜ், நாகை மறை மாவட்ட அதிபர் பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.மற்றும் செபஸ்தியார், கடை சியாக ஆரோக்கியமாதா தேர் சென்றது. அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது.

    தேரானது முக்கிய வீதிவழியாக சென்று பின்னர் ஆலயத்தை அடைந்தது. நேற்று காலை பங்குத்தந்தை தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து குழந்தைகளுக்கு ஞானஸ்தானம், புதுநன்மை வழங்கப்பட்டது. பின்னர் மாலை கொடி இறக்கம் நடைபெற்றது.

    இதில் புனித அன்னாள் சபை சகோதரிகள், புனித செபஸ்தியார் இளைஞரா நற்பணிமன்றம், ஆரோக்கிய ஆன்னை அன்பியம், புனிதசெபஸ்தியார் அன்பியம் மற்றும் பக்தர்கள் ஆலய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தூய இஞ்ஞாசியர் ஆலய தேர் பவனி நடைபெற்றது.
    • 22-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே சாத்தம்பட்டியில் தூய இஞ்ஞாசியர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை நவநாள் திருப்பலி பூஜைகள் நடைபெற்று வந்தன. திருவிழா சிறப்பு திருப்பலியை மறை மாவட்ட அதிபர் அருட்பணி அருளானந்தம் அடிகளார் நிறைவேற்றினார். பின்னர் மின் அலங்கார தேரை மந்திரித்து புனிதம் செய்து ஆலயத்தை சுற்றி முக்கிய வீதிகள் வழியாக இழுத்து வந்தனர்.

    அதில் முதல் சப்பரத்தில் மைக்கேல் சம்மனசும், இரண்டாவது சப்பரத்தில் சூசையப்பரும், மூன்றாவது சப்பரத்தில் புனித தூய இஞ்ஞாசியர் சொரூபம் தாங்கி முக்கிய வீதிகளில் உலா வந்தன. அப்போது பக்தர்கள் மெழுகுவர்த்தி, மாலை, ஊதுபத்தி, தூபம் காட்டியும், காணிக்கை செய்து கிறிஸ்தவர்கள் வழிபட்டனர். இதில் மகுதுபட்டி, பாணிபட்டி, விட்டானிலைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல் ஆலங்குடி அருகே உள்ள புனித சந்தியாகப்பர் ஆலய ஆண்டு பெருவிழா நடைபெற்றது. இதனையொட்டி ெகாடியேற்றம் மற்றும் பங்குகுரு, உதவி பங்குத்தந்தையர்களால் கூட்டுப்பாடல் மற்றும் திருப்பலி பூஜைகள் நடைபெற்றன. புனிதரின் ஆசிபெற கிராம பொதுமக்கள் மற்றும் மின்னொளி இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் சுற்றுவட்டார கிராம பொது மக்கள் சந்தியாகப்பரின் ஆண்டு பெருவிழாவில் கலந்துகொண்டனர்.திரு விழாவில் வடகாடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×