search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனீ வளர்ப்பு"

    • நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி நடை பெற்றது.
    • தேனீ வளர்ப்பின் பயன் மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும் கூறப்பட்டது.

    திருவாரூர்:

    தேசிய தேனீ வாரியம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் நீடாமங்கலத்தில் இயங்கும் வேளாண் அறிவியல் நிலையத்தில் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு குறித்து 7 நாள் பயிற்சி தொடங்கியது.

    இந்த பயிற்சியை விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் தொடங்கி வைத்து தேனீ வளர்ப்பு குறித்த தொழில்நுட்ப கையேட்டை வெளியிட்டார்.

    உழவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேனீ வளர்ப்பின் பங்கு குறித்தும், சுற்றுச்சூழல் சமநிலைப்படுத்துதலில் தேனீக்களின் பங்கு குறித்தும் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலெட்சுமி, தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் ஆகியோர் பேசினர்.

    இதனை தொடர்ந்து திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பெரியார் ராமசாமி, தொழில்நுட்ப வல்லுனர்(பயிர் பாதுகாப்பு) ராஜேஷ் ஆகியோர் தேனீ வளர்ப்பின் பயன் மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும், பயிற்சியின் நோக்கம் மற்றும் திட்ட செயல்பாடுகள் குறித்தும் பேசினர்.

    பயிற்சியில் தேனீவளர்ப்பு கருத்துக்காட்சியும் இடம் பெற்றிருந்தது. இதில் 25 பேர் கலந்து கொண்டனர்.

    • வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை (அட்மா) திட்டத்தின் மூலம் தேனீ வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு கண்டுணர்வு பயணம் வழங்கப்பட்டது.
    • மோகனூர் கனவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி நீலமேகம் என்பவரது தேனீ பண்ணைக்கு நாமக்கல் வட்டார விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை (அட்மா) திட்டத்தின் மூலம் தேனீ வளர்ப்பு குறித்து

    விவசாயிகளுக்கு கண்டுணர்வு பயணம் வழங்கப்பட்டது. அதன்படி,

    தேனீ வளர்த்து விவசா யத்தில் கூடுதல் வருமானம் பெற்று வரும் மோகனூர் கனவாய்ப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி நீலமேகம் என்பவரது தேனீ பண்ணைக்கு நாமக்கல் வட்டார விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

    தேனீ வளர்ப்பு குறித்த அவரது அனுபவங்களை நேரில் பெறவும், தேனீ வளர்ப்பின் தொழில் நுட்பங்கள் செயல் விளக்கத்துடன் செய்து காண்பிக்கவும், தேனீ பெட்டியின் பராமரிப்பு, தேனீ கூட்டம் பிரிந்து செல்லாமல் இருக்கப் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், தேன் பிரித்தெ டுக்கும் முறைகள், கலப்படம் இல்லாத தேனை நாமே தயாரித்து கூடுதல் வருமானம் பெறுதல், வேளாண்மை சார்ந்த உபதொழிலாக தேனீ வளர்க்கலாம் என விவசாயிகளுக்கு விரிவாக விளக்கப்பட்டது.

    இந்த கண்டுணர்வு பயண ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் ஆகியோர் செய்தி ருந்தனர்.

    • நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • திங்கள் முதல் வெள்ளி வரை 30 நாட்களுக்கு பயிற்சி நடைபெறும்.

    உடுமலை :

    தமிழக அரசு வழிகாட்டுதல்படி தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு சில பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தோட்டக்கலைத்துறை வாயிலாக இந்தாண்டு பூங்கொத்து, பூ அலங்காரம் செய்தல், நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவுதல் மற்றும் பராமரிப்பு செய்தல் தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.இப்பயிற்சியில் நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்கள் பயன்பெறலாம். உடுமலை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 30 நாட்கள் பயிற்சி வழங்கப்படும்.

    வார வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை 30 நாட்களுக்கு பயிற்சி நடைபெறும்.வருகை பதிவேடு பராமரிக்கப்பட்டு பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு 30 நாட்களுக்கான போக்குவரத்து செலவாக நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படும்.பெண்கள் ,ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்பயிற்சியானது முதலில் பதிவு செய்யும் 10 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நபர்கள் நாளை 26ந் தேதிக்குள் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயிற்சிக்கான விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வன உரிமை சட்டத்தின் கீழ் தற்போது மலைவாழ் மக்களுக்கு விவசாய நிலங்களுக்கான பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
    • தேனீ வளர்ப்பு வாயிலாக மலைவாழ் மக்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

    உடுமலை :

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனச்சரகத்தில் 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் குறைந்த பரப்பில், விவசாயம் மேற்கொள்கின்றனர்.மேலும்வடுமாங்காய், சீமாறு புல் சேகரித்து சமவெளிப்பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்தும் வருகின்றனர்.வன உரிமை சட்டத்தின் கீழ் தற்போது அப்பகுதி மக்களுக்கு விவசாய நிலங்களுக்கான பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தங்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில் வேளாண் சார்ந்த தொழில் துவங்க அரசு உதவ வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன் மலைவாழ் கிராமங்களில் சிறு, குறு தொழில்கள் மேற்கொள்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி சுற்றுசூழலுக்கு பாதிப்பில்லாதவனத்தோடு தொடர்புடைய தேனீ வளர்ப்பு வாயிலாக அப்பகுதி மக்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அப்போது கோவை வேளாண் பல்கலைக்கழகம் உதவியுடன், ஆட்டுமலை, பொருப்பாறு, கரட்டுப்பதி கிராமங்களைச்சேர்ந்த 50 பேருக்குதேனீ வளர்ப்பு பயிற்சியும், 30 பேருக்கு, தேனீ வளர்ப்பு பெட்டி மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.இத்திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், அனைத்து மலைவாழ் கிராமங்களிலும், தேனீ வளர்ப்பு பயிற்சியும், உபகரணங்களையும் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.இதன் வாயிலாக நிரந்தர வருவாய் கிடைப்பதுடன், புதிதாக மேற்கொள்ளும் விவசாய சாகுபடிக்கும் உதவியாக இருக்கும். பாரம்பரியமாக தேன் சேகரிப்பில் அனுபவம் உள்ளதால், இத்தொழிலை தொடர்ந்து மேற்கொள்ளவும் முடியும் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

    ×