search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிளக்கு வழிபாடு"

    • விநாயகர் சதுர்த்தியையொட்டி 32-ம் ஆண்டு வெற்றி முதல் நாள் நிகழ்ச்சி காப்புகட்டுதல், பால்குடம், முளைப்பாரி, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • மதுரை திருமூலர் தவயோகி சிவகிரி மகரிஷிசுவாமிகள் திருமந்திரம் கூற பெண்கள் விநாயகர், அம்மனை வழிபட்டனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 32-ம் ஆண்டு வெற்றி முதல் நாள் நிகழ்ச்சி காப்புகட்டுதல், பால்குடம், முளைப்பாரி, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    2-வது நாளாக நேற்று காளியம்மன் கோவில் வளாகத்தில் 303 பெண்கள் திருவிளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மதுரை திருமூலர் தவயோகி சிவகிரி மகரிஷிசுவாமிகள் திருமந்திரம் கூற பெண்கள் விநாயகர், அம்மனை வழிபட்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விஸ்வஹிந்துபரிசித், ஆன்மீக சேவாசங்க நிர்வாகிகள் மற்றும் சிலுக்குவார்பட்டி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே! ஜோதி மணிவிளக்கே சீதேவி பொன்மணியே!
    • அன்னையே அருந்துணையே! அருகிருந்து காருமம்மா! வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாருமம்மா!

    வீட்டில் தீபம் ஏற்றி வணங்கும் பெண்கள் தீபத்தை ஏற்றி வைத்து விட்டு கீழ்க்காணும் பாடல் வரிகளை, படிக்கவேண்டும். மகாலட்சுமியின் அருள் பூரணமாக எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் ஒவ்வொரு வரிக்கும் ஒரு மலராகத் தூவி வழிபடலாம்.

    அகவல்

    விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே!

    ஜோதி மணிவிளக்கே சீதேவி பொன்மணியே!

    அந்தி விளக்கே அலங்கார நாயகியே!

    காந்தி விளக்கே காமாட்சித் தாயாரே!

    பசும்பொன் விளக்கு வைத்துப் பஞ்சுத் திரிபோட்டு

    குளம்போல எண்ணெய்விட்டுக் கோலமுடன் ஏற்றிவைத்தேன்;

    ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடிவிளங்க

    வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான்விளங்க

    மாளிகையில் ஜோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்

    தரணியிலே ஜோதியுள்ள தாயாரைக் கண்டுவந்தேன்

    மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா!

    சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா!

    பெட்டி நிறையப் பூஷணங்கள் தாருமம்மா!

    பட்டி நிறையப் பால் பசுவைத் தாருமம்மா!

    கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாருமம்மா!

    புகழுடம்பைத் தாருமம்மா! பக்கத்தில் நில்லுமம்மா!

    அல்லும்பகலுமென்றன் அண்டையிலே நில்லுமம்மா!

    சேவித் தொழுந்திருந்தேன்; தேவி வடிவம்கண்டேன்

    வச்சிரக் கிரீடங்கண்டேன்; வைடூர்ய மேனி கண்டேன்

    முத்துக் கொண்டை கண்டேன்; முழுப்பச்சை மாலை கண்டேன்

    சவுரி முடிகண்டேன் தாழைமடல் சூடக் கண்டேன்

    பின்னழகு கண்டேன்; பிறைபோல நெற்றி கண்டேன்

    சாந்துடன் நெற்றி கண்டேன்; தாயார் வடிவங்கண்டேன்

    குறுக்கிடும் நெற்றிகண்டேன்; கோவைக்கனி வாயும் கண்டேன்

    கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டுங் கண்டேன்

    மார்பில் பதக்கம் மின்ன மாலையனசயக் கண்டேன்

    கைவளையல் கலகலஎனக் கணையாழி மின்னக் கண்டேன்

    தங்க ஒட்டியாணம் தகதகஎன ஜொலிக்கக் கண்டேன்

    காலில் சிலம்புகண்டேன்; காலணி பீலி கண்டேன்

    மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்

    அன்னையே அருந்துணையே! அருகிருந்து காருமம்மா!

    வந்தவினையகற்றி மகாபாக்கியம் தாருமம்மா!

    தாயாகும் உன்றன் தாளடியில் சரணம் என்றேன்

    மாதாவேயுன்றன் மலரடியில் நான் பணிந்தேன்.

    இந்த அகவலைப் பாடி முடித்த பின்னர் பதினாறு தடவை கும்பிட வேண்டும். அதன்பின்னர் தீப லட்சுமியிடமிருந்து வேண்டிய வரங்களைத் தந்தருளும்படி வேண்டிக் கொள்ள வேண்டும்.

    • செய்களத்தூர் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி உற்சவத்தையொட்டி திருவிளக்கு வழிபாடு நடந்தது.
    • 2-வது நாளில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர் கடம்பவன காமாட்சி அம்மன் கோவிலில் மாசி வருடாந்திர உற்சவ விழா 2 நாட்கள் நடந்தது. இந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முதல் நாள் காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கோவிலில் இருந்து பூஜை பெட்டி களுடன் அருகே உள்ள வைகை ஆற்றுக்கு சென்று பூஜைகள் செய்து கரகம் சுமந்து சாமியாடி படி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அங்கு பக்தர்கள் அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினர். பின்னர் அம்மனுக்கு பூஜைகள் நடந்தன.

    2-வது நாளில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர். அதைத்தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. இரவு கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் கோவில் குடிமக்கள் உள்ளிட்ட திரளான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி பூஜை செய்தனர்.

    மங்கள ஆராத்தி முடிந்ததும் அலங்காரத்துடன் எழுந்தருளிய உற்சவர் காமாட்சி யம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதை ணத்தொடர்ந்து காமாட்சி யம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    ×