search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாசி உற்சவம்"

    • செய்களத்தூர் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி உற்சவத்தையொட்டி திருவிளக்கு வழிபாடு நடந்தது.
    • 2-வது நாளில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர் கடம்பவன காமாட்சி அம்மன் கோவிலில் மாசி வருடாந்திர உற்சவ விழா 2 நாட்கள் நடந்தது. இந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முதல் நாள் காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கோவிலில் இருந்து பூஜை பெட்டி களுடன் அருகே உள்ள வைகை ஆற்றுக்கு சென்று பூஜைகள் செய்து கரகம் சுமந்து சாமியாடி படி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அங்கு பக்தர்கள் அரிவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு கூறினர். பின்னர் அம்மனுக்கு பூஜைகள் நடந்தன.

    2-வது நாளில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து வேண்டுதல் நிறைவேற்றினர். அதைத்தொடர்ந்து காமாட்சி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. இரவு கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் கோவில் குடிமக்கள் உள்ளிட்ட திரளான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி பூஜை செய்தனர்.

    மங்கள ஆராத்தி முடிந்ததும் அலங்காரத்துடன் எழுந்தருளிய உற்சவர் காமாட்சி யம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதை ணத்தொடர்ந்து காமாட்சி யம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    ×