search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பதி தேவஸ்தானம்"

    • உடைமைகளை அலட்சியமாக தூக்கி எறியும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    • தேவஸ்தான ஊழியர்கள் லக்கேஜ்களை தூக்கி வீசும் கைவிட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தல்

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் உடைமைகள், தேவஸ்தானம் சார்பில் லக்கேஜ் கவுண்டரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் முடிந்து வரும்போது திருப்பி வழங்கப்படுகிறது. இந்நிலையில், லக்கேஜ்களை தேவஸ்தான ஊழியர்கள் தூக்கி வீசிய நிகழ்வு பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், வேனில் கொண்டு வரப்பட்ட லக்கேஜ்களை, லக்கேஜ் கவுண்டரில் இறக்கும்போது, அவற்றை வேகமாக தூக்கி எறிவது பதிவாகியிருக்கிறது.

    இது கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு சேவை செய்வதற்காக வந்த தன்னார்வலர்களின் லக்கேஜ்கள் என்று கூறப்படுகிறது. இது பிரம்மோற்சவ விழாவின்போது எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது.

    உடைமைகளை தூக்கி எறியும் போக்கை தேவஸ்தான ஊழியர்கள் கைவிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட ஊழியர்களை தேவஸ்தான நிர்வாகம் எச்சரிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாத்து வாஸ்திர சேவை என்ற தரிசனத்திற்காக 2 பேருக்கு ரூ.12 ஆயிரத்து 250 கட்டி பதிவு செய்தார்.
    • தேவஸ்தானம் மீது சேலம் நுகர்வோர் குறை தீர்மானத்தில் வக்கீல் செல்வகீதன் மூலம் வழக்கு தொடரப்பட்டது.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் மணிமேகலை தெருவில் வசித்து வருபவர் ராஜகோபால். இவரது மகன் ஹரிபாஸ்கர் என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந்தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் மேல் சாத்து வாஸ்திர சேவை என்ற தரிசனத்திற்காக 2 பேருக்கு ரூ.12 ஆயிரத்து 250 கட்டி பதிவு செய்தனர். அப்போது அவர்களுக்கு எஸ்.எல். நம்பர் ஒதுக்கப்பட்டு 2020-ம் ஆண்டு ஜூலை 10-ந்தேதி தரிசனத்திற்கு ஒதுக்கப்பட்டு ரசீதும் குறிப்பிட்டு கொடுக்கப்பட்டது.

    ஆனால் அந்த நேரத்தில் கொரோனா தொற்று காரணமாக தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மேல் சாத்து வாஸ்திர சேவை இந்த தரிசனம் செய்ய வேறு தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. பின்னர் அந்த வாய்ப்பு இல்லை என்றும் தற்போது பிரேக் தரிசனம் செய்ய தேதி தரப்படும் என தேவஸ்தானம் மூலம் அறிவிப்பு அனுப்பப்பட்டது.

    ஆனால் 17 வருடம் காத்திருந்தும் தரிசனம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே தேவஸ்தானம் மீது சேலம் நுகர்வோர் குறை தீர்மானத்தில் வக்கீல் செல்வகீதன் மூலம் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி திருப்பதி தேவஸ்தானம் ஒரு வருட காலத்தில் மனுதாரருக்கு மேல் சாத்து வாஸ்திர சேவை என்ற தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக ரூ. 45 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    மேலும் இந்த தரிசனத்திற்காக கட்டிய ரூ.12,250 தொகையும் உத்தரவு பிறப்பித்த இரண்டு மாத காலத்தில் திருப்பி கொடுக்க வேண்டும். இல்லாவிடில் 6 சதவீதம் வட்டியுடன் சேர்த்து தர வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். திருப்பதி கோவில் நிர்வாகம் மீதான சேலம் நுகர்வோர் கோர்ட்டின் இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாநில அரசு தேவஸ்தானத்தை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டுவது வருந்தத்தக்கது.
    • உண்மைகளை சரிபார்க்காமல் பொய்யை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி:

    திருப்பதியில் வாடகை அறை முன்பதிவிற்காக பெறப்படும் முன்பணத் தொகையை மாநில அரசு பயன்படுத்துவதாகவும், அதனால்தான் பக்தர்கள் கணக்கில் தாமதமாகச் சென்றடைவதாகவும் சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர் என்றும், இதுபோன்ற பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் அவதூறு பிரசாரம் செய்ததாக தெலுங்கு தேச எம்.எல்.சி. பி.டெக் ரவி மீது திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் திருமலை 2-வது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    திருமலைக்கு வரும் பக்தர்கள் கரண்ட் புக்கிங் மற்றும் ஆன்லைன் புக்கிங் முறையில் வாடகை அறைகளை முன்பதிவு செய்து வருகின்றனர். தரிசனம் முடித்து அறைகளைக் காலி செய்த பிறகு, அவற்றுக்கான முன்வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற்கான தகுதி அறிக்கையானது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளான ஃபெடரல் வங்கி அல்லது எச்டிஎப்சி வங்கிக்கு அன்று மாலை 3 மணிக்குள் அனுப்பப்படும்.

    இந்த வங்கிகளின் அதிகாரிகள் அதே நாளில் (வங்கி வேலை நாள்களில்) நள்ளிரவு 12 மணிக்குள் சம்பந்தப்பட்ட வணிக சேவைகளுக்கு அனுப்புவார்கள். வணிக சேவைகள் அடுத்த நாள் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும். வாடிக்கையாளரின் வங்கி தொடர்புடைய தொகையை உறுதிப்படுத்தும் செய்தியையும் (ஏஆர் எண்) பணத்தையும் அந்தந்த பக்தரின் கணக்குக்கு அனுப்புகிறது.

    வங்கியின் மூலம் வாடிக்கையாளரின் கணக்கில் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படுவதை தேவஸ்தானம் கவனித்துள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, 7 வங்கி வேலை நாள்களுக்குள் பாதுகாப்பு வைப்புத் தொகையைத் திரும்பப் பெற வேண்டும். இந்த ஆண்டு, ஜூலை 11 முதல், தேவஸ்தான யுசிஐ முறையில் பணம் திரும்பப் பெறப்படுகிறது.

    இதனால் பணம் 4, 5 நாள்களில் திரும்பப் பெறப்படும். இதன் படி, பக்தர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில், பாதுகாப்பு வைப்புத்தொகை குறித்தும் தேவஸ்தானம் குறித்தும் சிலர் அவதூறு பிரசாரம் செய்வது நல்லதல்ல. உண்மையில், ரொக்க டெபாசிட் தொகை நேரடியாக பக்தர்களின் கணக்கில் செல்கிறது.

    மாநில அரசு தேவஸ்தானத்தை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டுவது வருந்தத்தக்கது. உண்மைகளை சரிபார்க்காமல் பொய்யை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வெளிநாட்டை சேர்ந்த இந்தியர்கள் இரண்டு பேர் ரூ.13.5 கோடி காணிக்கையாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #TTD
    ஐதராபாத் :

    அமெரிக்காவில் தொழிலதிபர்களாக உள்ள ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இருவர், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.13.5 கோடி காணிக்கையாக அளித்துள்ளனர்.

    இகா ரவி எனும் நபர் ரூ.10 கோடியை வெங்கடேஷ்வரா ஆன்லைன் உண்டியல் மூலமாக காணிக்கையாக அளித்தாகவும், மற்றொருவரான ஸ்ரீனிவாஸ் குட்டிகோண்டா என்பவர் காணிக்கையாக ரூ.3.5 கோடிக்கான காசோலையை நேரில் அளித்ததாகவும் திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி டி.ரவி தெரிவித்தார்.

    மேலும், திருப்பதியில் இயங்கிவரும் மக்கள் நல அறக்கட்டளைகள், மருத்துவமனைகள் மற்றும் அனாதை ஆசிரமங்களுக்கு தாம் அளித்த காணிக்கை தொகையை பயன்படுத்தி செலவிட வேண்டும் என ஸ்ரீனிவாஸ் குட்டிகோண்டா தேவஸ்தான அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

    திருப்பதி தேவஸ்தான தலைவர் புட்ட சுதாகர யாதவ், ஆந்திரப்பிரதேச தொழில்துறை அமைச்சர் என்.அமர்நாத ரெட்டி முன்னிலையில் அவர்கள் இந்த காணிக்கையை வழங்கினர். #TTD
    ×