search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில்"

    • சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனை நினைத்து வழிபட தொடங்கினார்.
    • திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தின் பட்டராக இருந்தவர், சுப்பிரமணியன்.

    திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தின் பட்டராக இருந்தவர், சுப்பிரமணியன். இவர் தை அமாவாசை நாளில் கோவிலில் அபிராமி அம்மனை நினைத்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது தஞ்சையை தலைநகராகக்கொண்டு ஆண்ட மராட்டிய மன்னர், திருக்கடையூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அங்கிருந்த பலரும் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

    ஆனால் அபிராமி அம்மன் சன்னதியில் இருந்த சுப்பிரமணிய பட்டர் மன்னரை கவனிக்காமல் தன்னை மறந்து அபிராமி அம்மனை நினைத்து ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இதைக்கண்ட மன்னர், சுப்பிரமணிய பட்டர் தியானத்தில் இருந்து விழித்ததும், "இன்று என்ன திதி?" என்று கேட்டார். அப்போது சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனின் திருமுகத்தை மனதில் நினைத்தவாறு இன்று "பவுர்ணமி" என்று தவறாக கூறிவிட்டார். இதனால் சினம் கொண்ட மன்னர் இன்று இரவு வானில் முழு நிலவைக் காட்ட வேண்டும். முழு நிலவு தோன்றாவிட்டால் உங்களை(சுப்பிரமணிய பட்டரை) அக்னி குண்டத்தில் ஏற்றிவிடுவேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    மன்னர் அங்கிருந்து அகன்ற பிறகுதான், சுப்பிரமணிய பட்டருக்கு தான் தவறாக அமாவாசை நாளை பவுர்ணமி என கூறியது நினைவுக்கு வந்தது. இதனால் அச்சம் அடைந்த சுப்பிரமணிய பட்டர் அபிராமி அம்மனை நினைத்து வழிபட தொடங்கினார். இது ஒரு புறம் இருக்க அபிராமி அம்மன் சன்னதி எதிரே சுப்பிரமணிய பட்டரை அக்னி குண்டத்தில் ஏற்ற ஏற்பாடுகள் தொடங்கியது. எரியும் நெருப்பின்மேல் தொங்கும் உறியில் சுப்பிரமணிய பட்டர் ஏற்றப்பட்டார். சுப்பிரமணிய பட்டரும் அபிராமி அந்தாதி பாடல்களை பாட தொடங்கினார்.

    79-வது பாடலை சுப்பிரமணிய பட்டர் பாட தொடங்கும்போது, அன்னை அபிராமி அம்மன் வானில் காட்சி தந்து, தனது இடது காதில் இருந்த சந்திர தாடங்கத்தினை கழற்றி வானில் வீசினாள். அது பலகோடி நிலவின் ஒளியை அந்த அமாவாசை வானில் வெளியிட்டது. இதனால் அமாவாசை இருள் நீங்கி, வானில் முழு பவுர்ணமி நிலவு தோன்றியது. உறியின் கீழே மூட்டப்பட்டிருந்த நெருப்பு முழுவதும் நறுமண மலர்களாய் மாறியிருந்தன. மன்னா் உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும், அபிராமி அம்மனின் அருளையும், சுப்பிரமணிய பட்டரின் பக்தியையும் எண்ணி மெய்சிலிர்த்தனர். மேலும் சுப்பிரமணிய பட்டருக்கு 'அபிராமி பட்டர்' என்ற பட்டத்தை மன்னர் சூட்டினார். தை அமாவாசை தினத்தன்று, ஆண்டுதோறும் திருக்கடையூர் அபிராமி அம்மன் சன்னதி முன்பாக அபிராமி அந்தாதி பாடப்படுவதுடன், பவுர்ணமி தோன்றும் நிகழ்வும் நடத்திக் காட்டப்படுகிறது.

    • பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 1,008 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி வீதி உலா நடந்தது.தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடந்த சோமவார விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல திருவெண்காடு அருகே நாங்கூர் நம்புவோருக்கு அன்பர் கோவிலில் சோமவார வழிபாடு நடந்தது. முன்னதாக சாமி, அம்மனுக்கு பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற கோவில் ஆகும்.
    • அபிராமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்த கடேஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி தீர்த்தவாரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர தீர்த்தவாரி கோவிலில் உள்ள திருக்குளத்தில் நேற்று நடந்தது.

    இதையொட்டி விநாயகர், சண்டிகேஸ்வரி, சோமாஸ்கந்தர் அபிராமி ஆகியோர் கோவில் குளக்கரையில் எழுந்தருளினர். அப்போது அஸ்திரதேவருக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் அபிராமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது. முன்னதாக தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு, ஆராதனையும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
    • 1-ந் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அட்ட வீரட்டான தலங்களுள் ஒன்றாகும். அட்ட வீரட்டான தலங்கள் ்என்பவை சிவனின் வீரத்திருவிளையாடல்கள் நடந்த 8 தலங்களாகும். காவிரி தென்கரை சிவத்தலங்களில் 47-வது தலமான இங்கு காலசம்ஹார மூர்த்தி உற்சவராக அருள்பாலித்து வருகிறார். அமிர்தமே லிங்கமாக வீற்றிருப்பதால் இக்கோவில் இறைவனை அமிர்தலிங்கேஸ்வரர் என அழைக்கிறார்கள். இங்கு ஆயுள் விருத்திக்கான பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

    பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு விநாயகர், அபிராமி அம்மன், அமிர்தகடேஸ்வரர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.

    1-ந் தேதி அபிராமி அம்மன் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    ×