search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக செயல் தலைவர்"

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை புதுவை வருகிறார். கோரிமேடு எல்லையில் மாநில அமைப்பாளர்கள் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    தமிழகத்தில் தி.மு.க. சார்பில் 68 மாவட்டங்களில் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு நடத்தி முடித்துள்ளார்.

    புதுவை மாநிலத்தில் வடக்கு, தெற்கு மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கான கள ஆய்வு நாளை புதுவையில் நடக்கிறது. கள ஆய்வு செய்ய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக புதுவைக்கு வருகிறார். அவருக்கு கோரிமேடு எல்லையில் தி.மு.க. மாநில அமைப்பாளர்கள் சிவா, சிவக்குமார், நாஜிம் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக வரும் ஸ்டாலின் ராஜீவ்காந்தி சிலை அருகில் உள்ள ஓட்டலில் தங்குகிறார். இரவு அங்கு ஓய்வெடுக்கிறார். நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு ஆனந்தா இன் ஓட்டலுக்கு ஸ்டாலின் வருகிறார். அங்கு 3 மாவட்டங்களை கள ஆய்வு செய்கிறார்.

    முதலில் கிளை செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என 4 கட்டமாக 3 மாவட்டங்களுக்கும் கள ஆய்வு செய்கிறார். காலையில் வடக்கு பின்னர் தெற்கு மாவட்ட கள ஆய்வு முடிக்கிறார்.

    பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஸ்டாலின் மதிய உணவு அருந்துகிறார். மதியம் காரைக்கால் மாவட்டத்திற்கு கள ஆய்வு மதியம் 2 மணிக்கு நடக்கிறது. மாலை 4 மணிக்கு கள ஆய்வு முடிகிறது. கழக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க கடலூர் வழியாக நாகப்பட்டினத்திற்கு ஸ்டாலின் செல்கிறார். ஸ்டாலினை வரவேற்கும் வகையில் புதுவை கோரிமேடு எல்லை முதல் வழி நெடுகிலும் பேனர்கள், கழக கொடிகள், கட்அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    ×