search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு..க."

    • தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • திருவேடகம் நீலமேகம், ஒன்றிய இளைஞரணி பால்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளத்தில் தி.மு.க. கிளை சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சேகர், மாநில பொதுக்குழு ஸ்ரீதர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் கேபிள்ராஜா வரவேற்றார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    பேரூராட்சி சேர்மன்கள் ஜெயராமன், பால்பாண்டி, பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ், நகர துணைசெயலாளர் ஸ்டாலின், பொருளாளர் கண்ணன், அண்ணாதுரை, இளைஞரணி வெற்றிசெல்வம், ஊராட்சி தலைவர்கள் ஆனந்தன், சிறுமணி, சகுபர் சாதிக், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணி, கோகிலா சரவணன், கார்த்திகா ஞானசேகரன், ரேகா வீரபாண்டியன், விவசாய அணி முருகன் மற்றும் ராஜாராம், ராஜா, பெரியகருப்பன், திருவேடகம் நீலமேகம், ஒன்றிய இளைஞரணி பால்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் பிரச்சினைக்காக தி.மு.க.அரசை எதிா்த்து போராடவும் தயங்க மாட்டோம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
    • பொதுமக்கள் பிரச்சினைக்காக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. அரசை எதிா்த்துப் போராடவும் தயங்காது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் அக்னிபத் திட்டத்தை கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடந்தது.முன்னதாக, அவா் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அக்னிபத் திட்டம் நாட்டின் ராணுவத்தை படிப்படியாக தனியாா் மயமாக்கும் வகையில் உள்ளது. அ.தி.மு.க. கட்சிக்குள் நடக்கும் தலைமைக்கான அதிகாரப் போட்டியால் அக்கட்சியே பலவீனப்படும். அரசியல் ஆதாயத்துக்காக பா.ஜனதா அ.தி.மு.க.வினரை இரு பிரிவாக்கியுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. ஒருபோதும் வெற்றி பெறமுடியாது.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சா்கள் மீதான ஊழல் வழக்குகளை விரைவுபடுத்தவும், அதில் சம்பந்தப்பட்ட உயா் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், தி.மு.க. அரசு தயக்கம் காட்டக்கூடாது.

    தி.மு.க. ஆட்சியில் காவல் மரணங்கள் அதிகரித்துள்ளன. அதேபோல் போதைப் பொருள் பயன்பாடு, பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளன. அதைத் தடுக்கும் வகையில், ஜூலை மாதம் முதல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சாா்பில் மக்களிடையே விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

    தி.மு.க. அளித்த தோ்தல் வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டாலும், குடும்பத்தலைவிக்கு மாத ஊதியம், அரசு துறைகளில் ஒப்பந்தப் பணியாளா்களை காலமுறை ஊதியத்துக்கு மாற்றுதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவற்றை நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

    பொதுமக்கள் பிரச்சினைக்காக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. அரசை எதிா்த்துப் போராடவும் தயங்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, மாநிலக் குழு உறுப்பினா் பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் காசிநாததுரை, தாலுகா செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனா்.

    ×