search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாழக்குடி"

    • கூலி தொழிலாளி குடிக்க பணம் இல்லாத மனவேதனையில் விஷம் குடித்தார்.
    • ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    தாழக்குடி விளங்காட்டு காலணியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 60) கூலி தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மனைவி சரஸ்வதியிடம் பணம் கேட்டு தகறாறு செய்வது உண்டு. சரியாக வேலைகளுக்கு செல்வது கிடையது.

    சம்பவத்தன்று இசக்கியப்பன் மனைவி சரஸ் வதியிடம் குடிக்க பணம் கேட்டு தகறாறு செய்தார். ஆனால் அவர் பணம் கொடுக்க வில்லை. இதனால் மனவேதனையில் இருந்த அவர் விஷம் குடித்தார்.

    இதனால் வாந்தி எடுத்த நிலையில் இருந்த இசக்கியப்பனை உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

    இசக்கியப்பனின் மகன் சதீஷ் அளித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை.
    • சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு

    கன்னியாகுமரி:

    தாழக்குடி அருகே வீரநாராயணமங்கலம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 50). நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோமதி. குலசேகரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தூய்மை பணி செய்து வருகிறார்.

    இவர்களுக்கு 2 மகளும் ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இவர்கள் சில காரணங்களுக்காக தங்களது சொந்த வீட்டை பூட்டி விட்டு அருகில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். வீட்டில் மகன் முரளி மட்டும் தங்குவது வழக்கம். நேற்று வேலை விஷயமாக அவர் தூத்துக்குடிக்கு சென்றுவிட்டார்.

    இதனை அறிந்த மர்ம நபர்கள் வீடு புகுந்து வீட்டில் உள்ள கதவுகளை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 4 பவுன் செயின், வெள்ளி கப்பு, வெள்ளி விளக்கு, மகளுடைய பிரசவத்திற்காக வைத்திருந்த ரூ. 10 ஆயிரத்தை திருடிச் சென்று உள்ளார்கள்.

    காலையில் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கோபால கிருஷ்ணன் ஆரல்வா ய்மொழி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் பிரான்ஸிஸ் உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

    வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இந்த கொள்ளையில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதையடுத்து கொள்ளை நடந்த வீட்டில் உள்ள கைரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    ×