search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்பூசணி"

    • தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்துவரும் வேளையில், விலையும் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
    • தர்பூசணி அளவில் சற்று பெரியதாக இருப்பதால் ஒவ்வொரு பழமும் அதிக எடை கொண்டதாக இருக்கிறது.

    சென்னை:

    கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, சென்னையில் பல்வேறு இடங்களில் தர்பூசணிக்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில தினங்களாக நண்பகல் வேளைகளில் வெயில் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால், மக்கள் தாகத்தைத் தணிக்க குறைந்த விலை பழமான தர்பூசணியை நாடத்தொடங்கி யுள்ளனர். இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் தர்பூசணி கடை வைத்திருக்கும் வியாபாரி கூறுகையில், "தர்பூசணி பழங்களின் விற்பனை மார்ச் - ஏப்ரல் மாதங்களில் விறுவிறுப்படையும். ஆனால், உடல் வெப்பத்தைக் குறைத்து, சீரான வெப்ப நிலையில் வைக்கிறது. மேலும், வைட்டமின் ஏ, சி இருப்பதால் உடல் சோர்வைப் போக்கக்கூடியதாக விளங்குகிறது.

    தமிழகத்தில் சீர்காழி, சிதம்பரம், திண்டிவனம், திருவண்ணாமலை, வேலூர், ஆந்திர மாநிலம் சத்திய வேடு, நாகலாபுரம், மதனப்பள்ளி, சித்தூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக வருகின்றன' என்றார்.

    தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்துவரும் வேளையில், விலையும் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறுகையில், 'கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஒரு டன் தர்பூசணி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த விலையில் கிலோ ரூ.15- க்கும், சில்லரை விற்பனையில் கிலோ ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த முறை தர்பூசணி அளவில் சற்று பெரியதாக இருப்பதால் ஒவ்வொரு பழமும் அதிக எடை கொண்டதாக இருக்கிறது. எடைக்கு தகுந்தாற்போன்று, ஒரு பழத்தின் விலை ரூ.120 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது' என்று தெரிவித்தனர்.

    • பனிப்பொழிவு காரணமாக தர்பூசணி விற்பனை தற்போது சற்று மந்தமாகவே நடைபெற்று வருகிறது.
    • இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் தர்பூசணி விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து தற்போது தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது.

    இன்று 20 லாரிகளில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.8 முதல் ரூ.10 வரை விற்கப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக தர்பூசணி விற்பனை தற்போது சற்று மந்தமாகவே நடைபெற்று வருகிறது. இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் தர்பூசணி விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக தர்பூசணி மொத்த வியாபாரி வடிவழகன் கூறியதாவது:-

    இந்த ஆண்டு விவசாயிகள் வழக்கத்தை விட தர்பூசணியை அதிகளவில் பயிரிட்டு உள்ளனர். பனிப்பொழிவு காரணமாக தர்பூசணி பழங்களை அறுவடை செய்வதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் தர்பூசணி வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தர்பூசணி உற்பத்தி 2 மடங்காக அதிகரித்து உள்ளதால் கடந்த ஆண்டை காட்டிலும் தர்பூசணி விலை கணிசமாக குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாகர்கோவில் மற்றும் பண்ருட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பலாப்பழம் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது.

    தற்போது ஒரு கிலோ பலாப்பழம் ரகத்தை பொறுத்து ரூ.40 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது.

    தற்போது 400 முதல் 500 எண்ணிக்கையில் மட்டுமே பலாப்பழம் விற்பனைக்கு வருகிறது. அடுத்த மாதம் முதல் இதன் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    • கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடியானது.
    • ஏக்கருக்கு 20 டன் வரை மகசூலும் எடுத்தனர்.

    உடுமலை :

    உடுமலை பகுதிக்கு ஆண்டுதோறும் சேலம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோடை சீசனுக்கு பல லோடு தர்பூசணி கொண்டு வரப்பட்டது. எனவே கோடை சீசனை இலக்காக வைத்து புதிய தொழில்நுட்பங்கள் உதவியுடன் கிணற்று ப்பாசனத்துக்கு, தர்பூசணி சாகுபடியிலும் உடுமலை பகுதி விவசாயிகள் களமிறங்கினர்.

    கடந்த2 ஆண்டுகளாக உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடியானது.நிலப்போர்வை, சொட்டு நீர் பாசனம், நீர் வழி உரம் பயன்பாடு காரணமாக தர்பூசணி காய்களும் திரட்சி யாக பிடித்தது. ஏக்கருக்கு 20 டன் வரை மகசூலும் எடுத்தனர்.ஆனால் கடந்த கோடை சீசனில் ஊரடங்கு, வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இதற்கு விலை கிடைக்கவில்லை.

    அறுவடை செய்யாமல் அதை அப்படியே விளைநிலங்களில் விடும் நிலை உருவானது.இந்நிலையில் கோடை சீசன் மட்டுமல்லாது இடைப்ப ட்டத்திலும், பரவலாக தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கோடை சீசனில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் இடைப்பட்டத்தில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளோம்.வீரிய ரக விதைகளை சாகுபடிக்கு பயன்படுத்துவதால் 70 முதல் 80 நாட்களில் தர்பூசணியை அறுவடை செய்ய முடிகிறது. தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. பிற மாநில வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கே வந்து கொள்முதல் செய்கின்றனர். பருவமழை சீசன் துவங்கும் முன் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×