search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை சீசன்"

    • வருகிற 7-ந்தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை நீலகிரிக்கு வருவோர் இ-பாஸ் பெற்றே செல்ல ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    கோவை:

    சமவெளி பகுதிகளில் சுட்டெரித்து வரும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் குளு,குளு மலை பிரதேசங்களான ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஆண்டுதோறும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கோடை விழா வருகிற 10-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது. 10-ந் தேதி தொடங்கும் மலர் கண்காட்சி 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது.

    மலர் கண்காட்சியை கண்டு ரசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள். சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த மற்றும் வாடகை வாகனங்கள் மற்றும் அரசு பஸ்களிலும் பயணித்து ஊட்டிக்கு வருகின்றனர். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கோவைக்கு வந்தே ஊட்டிக்கு செல்கின்றனர்.

    இந்த நிலையில் வருகிற 7-ந்தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை நீலகிரிக்கு வருவோர் இ-பாஸ் பெற்றே செல்ல ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஊட்டிக்கு வரும் பலர் தங்களது சொந்த வாகனங்களை தவிர்த்து அரசு பஸ்களில் பயணிக்க வாய்ப்புள்ளது. பஸ்களிலும் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு, கோடை சீசனையொட்டி கோவையில் இருந்து நாளை முதல் 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவையில் இருந்து ஊட்டி மற்றும் கூடலூர் வரை அரசு பஸ்களின் புறப்பாடு 80 ஆக உள்ளது.

    தற்போது ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்க உள்ளதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பஸ்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக நாளை முதல் கோவையில் இருந்து கூடுதலாக 25 சிறப்பு பஸ்களை இயக்க உள்ளோம்.

    எனவே சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து, அரசு பஸ்களில் பயணித்து கோடைவிழாவை காண நீலகிரிக்கு செல்லலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.
    • தெப்பக்காடு யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள், அங்கு வளர்க்கப்படும் யானைகளை ரசிக்கலாம்.

    ஊட்டி:

    தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கோடை அனல் வெயில் வாட்டி வதைப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளுகுளு சீசன் நிலவும் நீலகிரி மாவட்டத்துக்கு படையெடுத்து வந்திருந்து அங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்து வருகின்றனர்.

    மேலும் அவர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றும் பார்வையிட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாலும், சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் என்பதாலும், நீலகிரி மாவட்டத்தில் தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு கண்ணாடி மாளிகையில் மலர்ச்செடிகளை அடுக்கி வைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு இரண்டரை டன் வண்ண கூழாங்கற்களை கொண்டு வனவிலங்குகளின் உருவத்தை வடிவமைக்கும் பணி முதல் முறையாக தொடங்கப்பட்டு உள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி ரோஜா பூங்காவிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதேபோல முதுமலை புலிகள் சரணாலயத்தையும் காணவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி அங்கும் குவிந்து வருகிறார்கள். கட்டணம் செலுத்தும் சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பாதுகாப்பு நிறைந்த தங்கள் வாகனங்களில் அழைத்துச் செல்வர். அந்த வாகனம் வனப்பகுதியை சுற்றி வரும். அப்போது யானை, மான், புலி என ஏராளமான வனவிலங்குகள் காட்டில் சுற்றித்திரிவதை நேரில் பார்க்கலாம்.

    அதேபோல தெப்பக்காடு யானைகள் முகாமுக்கும் சென்று சுற்றுலா பயணிகள், அங்கு வளர்க்கப்படும் யானைகளை ரசிக்கலாம். காலை மற்றும் மாலை வேளைகளில் யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்வு நடைபெறும். இதனை காண சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் முதுமலை முகாம் மற்றும் தெப்பக்காடு முகாமில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    • தற்போது 4,201 வீரிய ரக ரோஜா ரகங்களில் சுமார் 32 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ரோஜா மலர்கள் பூத்து, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1995-ம் ஆண்டு ஊட்டி மலர் கண்காட்சியின் 100-வது ஆண்டு நினைவாக ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது. இந்த பூங்கா தோட்டக்கத்துறை சார்பில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இதில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு தற்போது 4,201 வீரிய ரக ரோஜா ரகங்களில் சுமார் 32 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    2006-ம் ஆண்டில் உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருதை ஊட்டி ரோஜா பூங்காவுக்கு வழங்கி உலக ரோஜா சங்க சம்மேளனம் சிறப்பித்துள்ளது.

    தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிக அதிகமான ரோஜா ரகங்களை கொண்ட பூங்காவாக ஊட்டி ரோஜா பூங்கா திகழ்கிறது.

    இந்த ஆண்டு கோடை பருவகாலத்தை முன்னிட்டு கவாத்து பணிகள் மேற்கொள்வதன் மூலமாக கவாத்து செய்த ரோஜா செடிகளில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ரோஜா மலர்கள் பூத்து, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். இதையொட்டி ரோஜா செடிகளின் கவாத்து பணியை மாவட்ட கலெக்டர் அருணா தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலாமேரி மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகில் சவாரி செய்தனர்.
    • கண்ணாடி மாளிகையில் உள்ள பூந்தொட்டிகளில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    ஊட்டி:

    மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறும். இந்த சீசன் சமயத்தில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.

    அதன்படி தற்போது நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் தினமும் அதிகரித்து வருகிறது. மேலும் சமவெளி பகுதியில் அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டதால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளுகுளு காலநிலை நிலவும் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனால் நீலகிரியில் கோடை சீசன் களைகட்டி உள்ளது. இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நேற்று வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நுழைவு வாயிலில் டிக்கெட் பெற கூட்டம் அலைமோதியது.

    அவர்கள் கண்ணாடி மாளிகையில் உள்ள பூந்தொட்டிகளில் பூத்துக்குலுங்கிய மலர்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அங்குள்ள பல வகையான கள்ளி செடிகளையும் பார்வையிட்டனர்.

    இதற்கிடையில் நேற்று முன்தினம் ரோஜா பூங்காவில் கண்காட்சி தொடங்கியது. இதில் பல வண்ண ரோஜா மலர்களால் ஈபிள் டவர் உள்பட பல்வேறு அலங்காரங்கள் செய்து, காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதை 2-வது நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

    ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மோட்டார் படகு, அதிவேக படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஊட்டி படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகில் சவாரி செய்தனர்.

    இது தவிர பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகரித்து இருந்தது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கடந்த 2 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகளும், ரோஜா பூங்காவில் 40 ஆயிரம் சுற்றுலா பயணிகளும் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

    • நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக மேட்டுப்பாளையம் நகரம் விளங்கி வருகிறது.
    • சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து அதிகரித்து வாகன நெரிசல் காணப்படுகிறது.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக மேட்டுப்பாளையம் நகரம் விளங்கி வருகிறது. தற்போது ஊட்டியில் குளுகுளு கோடை சீசன் தொடங்கியுள்ளதால் மேட்டுப்பாளையம் நகரம் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து அதிகரித்து வாகன நெரிசலும் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்தில்கொண்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் மாவட்ட காவல்துறையின் சார்பில் மேட்டுப்பாளையம் நகரில் இன்று முதல் 2 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் இன்று அமலுக்கு வந்தது. எந்த சுற்றுலா வாகனங்கள் மேட்டுப்பாளையம் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி செல்லும் வாகனங்கள் பாரத் பவன் ரோடு-ரெயில் நிலையம் ரோடு-சிவம் தியேட்டர்-சக்கரவர்த்தி சந்திப்பு வழியாக செல்லவேண்டும். நீலகிரியில் இருந்து கோத்தகிரி வழித்தடத்தில் வரும் வாகனங்கள் ராமசாமி நகர் பாலப்பட்டி வேடர் காலனி-சிறுமுகை ரோடு-ஆலங்கொம்பு சந்திப்பு-தென்திருப்பதி 4 ரோடு-அன்னூர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு அவ்வழியாக கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லவேண்டும்.

    நீலகிரியில் இருந்து குன்னூர் வழியாக வரும் வாகனங்கள் பெரிய பள்ளிவாசல்-சந்தக்கடை-மோத்தைபாளையம்-சிறுமுகை ரோடு-ஆலாங்கொம்பு-தென்திருப்பதி 4 ரோடு சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு உள்ளது. மேட்டுப் பாளையம்-சிறுமுகை இடையே ஒரு வழிபாதையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    சத்தியமங்கலம் பண்ணாரி-ஈரோட்டிலிருந்து சிறுமுகை வழியாக மேட்டுப்பாளையம் செல்ல விரும்புவோர் ஆலங்கொம்பு-தென் திருப்பதி 4 ரோடு-அன்னூர் சாலை வழியாக அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்தை சீரமைக்க போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    • கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடியானது.
    • ஏக்கருக்கு 20 டன் வரை மகசூலும் எடுத்தனர்.

    உடுமலை :

    உடுமலை பகுதிக்கு ஆண்டுதோறும் சேலம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோடை சீசனுக்கு பல லோடு தர்பூசணி கொண்டு வரப்பட்டது. எனவே கோடை சீசனை இலக்காக வைத்து புதிய தொழில்நுட்பங்கள் உதவியுடன் கிணற்று ப்பாசனத்துக்கு, தர்பூசணி சாகுபடியிலும் உடுமலை பகுதி விவசாயிகள் களமிறங்கினர்.

    கடந்த2 ஆண்டுகளாக உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடியானது.நிலப்போர்வை, சொட்டு நீர் பாசனம், நீர் வழி உரம் பயன்பாடு காரணமாக தர்பூசணி காய்களும் திரட்சி யாக பிடித்தது. ஏக்கருக்கு 20 டன் வரை மகசூலும் எடுத்தனர்.ஆனால் கடந்த கோடை சீசனில் ஊரடங்கு, வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இதற்கு விலை கிடைக்கவில்லை.

    அறுவடை செய்யாமல் அதை அப்படியே விளைநிலங்களில் விடும் நிலை உருவானது.இந்நிலையில் கோடை சீசன் மட்டுமல்லாது இடைப்ப ட்டத்திலும், பரவலாக தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கோடை சீசனில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் இடைப்பட்டத்தில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளோம்.வீரிய ரக விதைகளை சாகுபடிக்கு பயன்படுத்துவதால் 70 முதல் 80 நாட்களில் தர்பூசணியை அறுவடை செய்ய முடிகிறது. தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. பிற மாநில வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கே வந்து கொள்முதல் செய்கின்றனர். பருவமழை சீசன் துவங்கும் முன் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • கடந்த கோடை சீசனில் ஊரடங்கு, வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இதற்கு விலை கிடைக்கவில்லை.
    • பருவமழை சீசன் துவங்கும் முன் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    உடுமலை:

    உடுமலை பகுதிக்கு ஆண்டுதோறும் சேலம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோடை சீசனுக்கு பல லோடு தர்பூசணி கொண்டு வரப்பட்டது. எனவே கோடை சீசனை இலக்காக வைத்து புதிய தொழில்நுட்பங்கள் உதவியுடன் கிணற்றுப்பாசனத்துக்கு, தர்பூசணி சாகுபடியிலும் உடுமலை பகுதி விவசாயிகள் களமிறங்கினர்.

    கடந்த2 ஆண்டுகளாக உடுமலை, மடத்துக்குளம் வட்டாரங்களில் கோடை காலத்தில் அறுவடை செய்யும் வகையில் ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடியானது.நிலப்போர்வை, சொட்டு நீர் பாசனம், நீர் வழி உரம் பயன்பாடு காரணமாக தர்பூசணி காய்களும் திரட்சியாக பிடித்தது. ஏக்கருக்கு 20 டன் வரை மகசூலும் எடுத்தனர்.ஆனால் கடந்த கோடை சீசனில் ஊரடங்கு, வரத்து அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இதற்கு விலை கிடைக்கவில்லை.

    அறுவடை செய்யாமல் அதை அப்படியே விளைநிலங்களில் விடும் நிலை உருவானது.இந்நிலையில் கோடை சீசன் மட்டுமல்லாது இடைப்பட்டத்திலும், பரவலாக தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கோடை சீசனில் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் இடைப்பட்டத்தில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளோம்.வீரிய ரக விதைகளை சாகுபடிக்கு பயன்படுத்துவதால் 70 முதல் 80 நாட்களில் தர்பூசணியை அறுவடை செய்ய முடிகிறது. தற்போது அறுவடைக்கு தயாராகி வருகிறது. பிற மாநில வியாபாரிகள் நேரடியாக விளைநிலங்களுக்கே வந்து கொள்முதல் செய்கின்றனர். பருவமழை சீசன் துவங்கும் முன் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×