search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டில் தர்பூசணி பழங்கள் குவிந்தன- கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் தர்பூசணி பழங்கள் குவிந்தன- கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை

    • பனிப்பொழிவு காரணமாக தர்பூசணி விற்பனை தற்போது சற்று மந்தமாகவே நடைபெற்று வருகிறது.
    • இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் தர்பூசணி விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து தற்போது தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது.

    இன்று 20 லாரிகளில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.8 முதல் ரூ.10 வரை விற்கப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக தர்பூசணி விற்பனை தற்போது சற்று மந்தமாகவே நடைபெற்று வருகிறது. இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் தர்பூசணி விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக தர்பூசணி மொத்த வியாபாரி வடிவழகன் கூறியதாவது:-

    இந்த ஆண்டு விவசாயிகள் வழக்கத்தை விட தர்பூசணியை அதிகளவில் பயிரிட்டு உள்ளனர். பனிப்பொழிவு காரணமாக தர்பூசணி பழங்களை அறுவடை செய்வதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் தர்பூசணி வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தர்பூசணி உற்பத்தி 2 மடங்காக அதிகரித்து உள்ளதால் கடந்த ஆண்டை காட்டிலும் தர்பூசணி விலை கணிசமாக குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாகர்கோவில் மற்றும் பண்ருட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பலாப்பழம் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது.

    தற்போது ஒரு கிலோ பலாப்பழம் ரகத்தை பொறுத்து ரூ.40 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது.

    தற்போது 400 முதல் 500 எண்ணிக்கையில் மட்டுமே பலாப்பழம் விற்பனைக்கு வருகிறது. அடுத்த மாதம் முதல் இதன் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

    Next Story
    ×