search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தருமபுரி தொகுதி"

    • தி.மு.க பொய் வாக்குறுதிகளை அளிப்பதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
    • மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைவது என்பது 101 சதவீதம் உறுதி செய்யப்பட்ட ஒன்று.

    தருமபுரி:

    தருமபுரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்து தருமபுரி மாவட்டம் தொப்பூரில் வாகன பிரசாரத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாக்கு சேகரித்தார்.

    இந்தியாவிலேயே அன்புமணி ராமதாசை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. 108 ஆம்புலன்ஸ் என்றால் உலகத்திலேயே இந்தியா அதற்கு ஒரு ரோல் மாடலாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அன்புமணி ராமதாஸ் .

    தி.மு.க பொய் வாக்குறுதிகளை அளிப்பதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, மகளிருக்கு ஏராளமான பொய் வாக்குறுதிகளை திமுக அளித்து வருகிறது. ரூ.1,000 மகளிருக்கு தருவதாகக் சொன்னார்கள். ஆனால், இந்த தொகை சிலருக்கு மட்டுமே வந்துள்ளது. பலருக்கு இன்றுவரை வழங்கப்படவில்லை.

    ஒருபுறம் உரிமைத் தொகை என்ற பெயரில் பணம் வழங்கும் இந்த அரசு மறுபுறம் மதுக்கடைகளை திறந்து அந்த பணத்தை பறித்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    திட்டங்களையும், வாக்குறுதிகளையும் செயல் படுத்துவதில் தமிழக அரசு முதலிடம் பிடித்துள்ளது என விளம்பரப்படுத்திக் கொள்கிறது. இந்த அரசு போதை பொருட்கள் புழக்கத்திலும், கஞ்சா விற்பனையிலும் முதலிடம் பிடித்த அரசாகத் திகழ்கிறது.

    மீண்டும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைவது என்பது 101 சதவீதம் உறுதி செய்யப்பட்ட ஒன்று. இந்த தேர்தலில் நீங்கள் தி.மு.க.வுக்கோ அ.தி.மு.க-வுக்கோ வாக்களிக்கக்கூடாது. அப்படி தவறுதலாக உங்கள் வாக்கை போட்டால் உங்களது வாக்கு குப்பைத் தொட்டியில் போடுவதற்கு சமம். என்றார்.

    பின்னர் வேட்பாளர் சவுமியா அன்புமணி உடன் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது சாலையோரத்தில் இருந்த டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    ×