search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி"

    • அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் பரவியது.
    • வருமான வரித்துறை அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

    தூத்துக்குடி:

    இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 533 கிளைகள் மற்றும் 12 பிராந்திய அலுவலகங்களுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் அமைந்து உள்ளது.

    இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் நேற்று வருமானவரி சோதனை நடைபெற்றது. இதற்காக மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வருமான வரித்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் 16 பேர் 6 கார்களில் வந்தனர். அவர்கள் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து வங்கி தலைமை அலுவலகத்தின் 2 கட்டிடங்களிலும் உள்ள முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். சோதனையின் போது, வெளியாட்கள் யாரும் வங்கி தலைமை அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் வங்கி பணியாளர்கள் மட்டுமே வழக்கம் போல் உரிய அடையாள அட்டையை காண்பித்து அலுவலகத்துக்கு சென்றனர்.

    நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய வருமானவரி சோதனை இன்று காலை 6.30 மணி வரை நீடித்தது. தொடர்ந்து இரவு, பகலாக 20 மணி நேர விசாரணையை முடித்து கொண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை 6.30 மணிக்கு வங்கியில் இருந்து புறப்பட்டு சென்றனர். அப்போது 5 பைகளில் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக தெரிகிறது.

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிதி பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் பரவியது.

    ஆனால் வங்கி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் சில பரிவர்த்தனையின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், இந்த சோதனை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குசந்தைக்கு அனுப்பிய கடிதம் வெளியானது. அதில் 'தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சட்டம் 1961 பிரிவு 285 பி.ஏ-ன் படி சட்டரீதியான விசாரணை நடந்தது.

    இந்த விசாரணைக்கு வங்கி முழுமையாக ஒத்துழைப்பு அளித்தது. வருமான வரித்துறை அதிகாரிகளின் சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படும். இதனால் வங்கியின் எந்த செயல்பாடும் பாதிக்கப்படவில்லை' என்று தெரிவித்து உள்ளது.

    • 2022-ம் ஆண்டுக்கான தேசிய விருதை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பெற்றுள்ளது.
    • சிறந்த வங்கிக்கான விருதை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

    நெல்லை:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு தேசிய அளவிலான சிறந்த வங்கிக்கான விருதினை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

    கேரள மாநிலம் வங்கி சங்கங்களின் மன்றம் கடந்த 14 ஆண்டுகளாக வங்கிகளின் திறமையான செயல்பாடுகளின் அடிப்படையில் விருது வழங்கி வருகிறது. இதற்காக தலை சிறந்த நடுவர்களை கொண்டு இந்த விருதுக்கு தகுதியான வங்கிகளை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான தேசிய விருதை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பெற்றுள்ளது.

    இந்த விருது தனியார் துறை வங்கிகளில் பெரிய வங்கிகள் அல்லாத வங்கிகள் பிரிவில் வழங்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கடந்த 29-ந்தேதி எர்ணாகுளத்தில் நடைபெற்ற விழாவில் இந்த விருதினை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி செயல்பாடுகள் மற்றும் சேவைகள் துறை பொது மேலாளர் சூரியராஜிடம், தேசிய அளவிலான சிறந்த வங்கிக்கான விருதை முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

    இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கிருஷ்ணன் கூகையில், விருது பெற்ற மகிழ்ச்சியினை வங்கியின் அனைத்து உடமைதாரர்களுக்கும் பகிர்வதாகவும், விருதுகள் எங்களது வங்கியின் அனைவரையும் சிறப்பாக செயல்பட்டு மேலும் வளர்ச்சியடைய ஊக்கமளிக்கிறது என்றார்.

    • மெர்க்கன்டைல் வங்கியின் 510-வது கிளை சேலம் மாவட்டம் தேவூரில் அமைக்கப்பட்டு உள்ளது.
    • சென்னை கோயம்பேட்டில் மெர்க்கன்டைல் வங்கியின் 511-வது கிளை திறக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்கு சந்தையில், தனது பங்கை பட்டியலிட்டதை தொடர்ந்து, இந்தியா முழுவதும் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வங்கி 509 கிளைகளுடன் செயல்பட்டு வந்தது.

    இந்த நிலையில் புதிதாக 2 வங்கி கிளைகள் நேற்று திறக்கப்பட்டு உள்ளன. அதன்படி 510-வது கிளையானது சேலம் மாவட்டம் தேவூரில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கிளை அலுவலகத்தை தேவூர் பேரூராட்சி தலைவர் என்.தங்கவேல் திறந்து வைத்தார். 511-வது கிளை சென்னை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டு உள்ளது. இதை கோயம்பேடு மொத்த காய்கனி, பூ மற்றும் உணவு தானியங்கள் சந்தைகள் தலைவர் டி.ராஜசேகரன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் வங்கி உயர் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து வங்கி நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் கூறும் போது, 'பங்குசந்தையில் பட்டியலிட்ட பிறகு, வங்கியானது நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதன் தொடக்கமாக தமிழகத்தில் 510, 511-வது புதிய வங்கி கிளைகளை திறந்து உள்ளோம். இன்னும் அதிக கிளைகளை இந்தியா முழுவதும் திறக்க திட்டமிட்டு உள்ளோம். இந்த கிளைகள் தொடக்க விழாவின் மகிழ்ச்சியை வங்கியின் அனைத்து உடமைதாரர்களுக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.

    • 80 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சீருடைகள், 209 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
    • 1,410 பயனாளிகளுக்கு ரூ.450 கோடிக்கான கடன் உதவி வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 101-வது நிறுவன தின விழா தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. முன்னாள் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கே.வி. ராமமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிறுவன தின விழாவில் ஒரு பகுதியாக வங்கி பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை நடத்திய வங்கியின் நிறுவனர்களுக்கு தூத்துக்குடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் மரியாதை செலுத்தப் பட்டது.

    வங்கியின் 'மேன்ட் இ-லாபி'-யை வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியு மான எஸ்.கிருஷ்ணன், செயின்ட் மேரிஸ் கல்லூரி பேராசிரியர் ஷிபானா முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 80 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சீருடைகள், பல்வேறு இடங்களில் கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு 209 பயனாளிகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து தூத்துக்குடி யில் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    முகாமை நிர்வாக இயக்குனர் எஸ்.கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பொது மேலாளர் (கடன் பிரிவு) நாராயணன் வரவேற்றார். இதில் மருத்துவ கல்லூரி டீன் சிவகுமார், தொழில திபர்கள் தங்கவேல் நாடார், டேவிட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கடனாளிகளுக்கு கடன் தொகைக்கான கடிதங்களை வழங்கினர்.

    வங்கியின் கடன் பிரிவு துணை பொது மேலாளர் விஜயன் நன்றி கூறினார். இந்த கடன் வழங்கும் முகாம் வங்கியின் 12 மண்டலங் களிலும் நடைபெற்றது. இதில் மொத்தமாக 1,410 பயனாளிகளுக்கு ரூ.450 கோடிக்கான கடன் உதவி வழங்கப்பட்டது.

    தொடர்ந்து மாலையில் 101-வது நிறுவன தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிறுவனர்களின் குடும்ப உறுப்பினர்கள், வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியால் கவுரவிக்கப்பட்டனர்.

    பொது மேலாளர் (இயக்கம் மற்றும் சேவைகள் பிரிவு)சூரியராஜ் வரவேற்றார். அப்போது வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்த வங்கியின் முன்னாள் இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான கே.வி. ராமமூர்த்தியை வரவேற்று கவுரவித்தார். தொடர்ந்து இருவரும் சிறப்புரை ஆற்றினர்.

    முன்னாள் இயக்குனர் சி.எஸ்.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் வங்கியின் கால் சென்டரை சிறப்பு விருந் தினர் கே.வி.ராமமூர்த்தி தொடங்கி வைத்தார்.

    நிறுவன தின விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    முடிவில் கடன் மீட்பு துறை பொது மேலாளர் இன்பமணி நன்றி கூறினார்.

    ×