search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு நாள் விழா"

    • தமிழ்நாடு நாள் விழா வருகின்ற ஜூலை 23 வரை நடைபெறுகிறது.
    • மாணவ-மாணவிகள் பார்வையிடுவதற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில், செய்தி மக்கள் தொடர் புத்துறை சார்பில், தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு, அமைக்கப் பட்டிருந்த தமிழ்நாடு நாள் சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹர்சகாய் மீனா, மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி ஆகியோர் பார்வையிட்டனர். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜுலை 18-ஆம் நாளை "தமிழ்நாடு நாள் விழா" குறித்து பொது மக்கள் மற்றும் மாண வர்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வண்ணம் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில், "தமிழ்நாடு நாள் விழா" வருகின்ற ஜூலை 23 வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற வுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், "தமிழ்நாடு நாள் விழா" சிறப்பு புகைப்படக் கண்காட்சி பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பார்வையிடுவதற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு உருவான வரலாறு, தமிழ்நாட்டின் சிறப்புகள், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க செயல் திட்டங்கள், தமிழ்மொழியின் தனித் தன்மை போன்ற பல்வேறு அரிய புகைப் படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவி கள் அனைவரும் தமிழ்நாடு நாள் விழா குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை பார்வை யிட்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் ஹர்சகாய் மீனா தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு நாள் விழா சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை அரசு மற்றும் தனியார் பள்ளி களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் காலை முதல் வருகை புரிந்து ஆர்வமுடன் பார்வையிட்டு, தமிழ்நாடு நாள் பற்றி தாங்கள் அறிந்து கொண்டதாக கருத்து தெரி வித்தனர். இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங்சாய், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பிரவீனா குமாரி உட்பட பலர் உள்ளனர்.

    • பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
    • போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவம், போட்டிகளுக்கான தலைப்புகள் மற்றும் விதிமுறைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பெற்ற 18.7.1967ம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

    இதையடுத்து தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போ ட்டிகள் நடத்த அரசு அறிவித்துள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில் ராமநாதபுரம், சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.

    மாவட்ட அளவில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். 10 தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தப்படும். போட்டிகளில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப்படிவம், போட்டிகளுக்கான தலைப்புகள் மற்றும் விதிமுறைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் மொபைல் போன் வாயிலாகவோ (99522 80798) நேரிலோ அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்த ஏற்பாடு.
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சரால், தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ந் தேதி 'தமிழ்நாடு நாள் விழா' என கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    அதனடிப்படையில் தமிழ் வளர்ச்சி இயக்குநரின் கடிதத்தில் மாவட்ட அளவில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்க ஆணை யிடப்பட்டுள்ளது.

    போட்டியின் தலைப்புகளாக தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள். பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம். மொழிவாரி மாநிலம் உருவாக்கத் தில் தந்தை பெரியார், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி. சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு. எல்லைப்போர்த் தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகியவை உள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசுத் தொகை ரூ.10,000, இரண்டாம் பரிசுத் தொகை ரூ,7000, மூன்றாம் பரிசுத் தொகை ரூ.5000 வழங்கப்படுகிறது. மேலும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

    பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 07-07-2022 அன்று நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. கட்டுரை போட்டி காலை 10 மணிக்கும், பேச்சுப்போட்டி பகல் 12 மணிக்கும் நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×