search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனித்திறன் போட்டி"

    • மாணவர்களுக்கான தனித்திறன் போட்டி இஸ்லாமியா பள்ளியில் நடக்கிறது.
    • போட்டியில் கலந்து கொள்பவர்களின் பெயர்களை நாளை (11-ந் தேதி)-க்கு முன்னர் 04567-241565, 244588 மற்றும் மின்னஞ்சல்: islamiahmatric@gmail.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

    கீழக்கரை

    கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தலைவர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம் கூறியதாவது:-

    கீழக்கரை ரோட்டரி சங்கம், இந்தியன் ரெட்கி ராஸ் சொசைட்டி ராமநாத புரம் கிளை மற்றும் கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் நடத்தும் சமத்துவ பொங்கல் திருவிழா இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் வருகிற 13-ந்தேதி மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது.

    முன்னதாக கீழக்கரை யில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு தனித்திறன் போட்டிகள் 13-ந்தேதி நடைபெறும். 5,6,7-வது வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஓவியம் வரைதல் போட்டி (தலைப்பு பொங்கல்), 8,9.10-வது வகுப்பு மாணவிகளுக்கு பானை அலங்காரம், 8,9.10 வகுப்பு மாணவர்களுக்கு விவசாயம் காப்போம் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெறுகிறது. ஒரு பள்ளிக்கு 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

    பெற்றோர்களுக்கான வினாடி-வினா போட்டியும் நடைபெறும். பெயர்களை நாளை (11-ந் தேதி)-க்கு முன்னர் 04567-241565, 244588 மற்றும் மின்னஞ்சல்: islamiahmatric@gmail.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • வாடிப்பட்டி அருகே உள்ள ஆரம்பப்பள்ளியில் தனித்திறன் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.
    • பேச்சு, பாட்டு, கவிதை, மாறுவேட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள பொடுகுபட்டியில் அரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு சுதந்திரதினத்தை முன்னிட்டு பேச்சு, பாட்டு, கவிதை, மாறுவேட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    இந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் நாகேஸ்வரன் தலைமை தாங்கினார். பள்ளி கல்விக்குழு தலைவர் தனபாலன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் வெங்கடலட்சுமி வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தியாகி அப்பைய ரெட்டியார் பரிசுகள் வழங்கினார். முடிவில் ஆசிரியர் எஸ்தர் டார்த்தி, ஆனந்தி ஆகியோர் நன்றி கூறினர்.

    இதேபோல் வாடிப்பட்டி புனித சார்லஸ் ஆரம்பப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆஞ்சிலோ அதிபர் பாக்கியநாதன் தலைமை தாங்கினார். புஸ்கோ பள்ளி நிர்வாகி கலின், தலைமை ஆசிரியர் ராபின்சன் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவர்களுக்கு போலீஸ் சப்-ன்ஸ்பெக்டர் அண்ணாதுரை பரிசுகள் வழங்கினார். சுதந்திர தின சிறப்புகள் பற்றி சதானந்தம் விளக்கி பேசினார்.

    முடிவில் தலைமை ஆசிரியர் ஜஸ்டின் நன்றி கூறினார்.

    ×